Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

லவ் டுடே திரை விமர்சனம்

Posted on November 7, 2022

லவ் டுடே திரை விமர்சனம்
லவ் டுடே திரை விமர்சனம்
உத்தமன் பிரதீப் (பிரதீப் ரங்கநாதன்) நிகிதா (இவானா) இருவரும் காதலர்கள். ஒருவரையொருவர் நன்கு அறிந்து வைத்திருப்பதாக நினைத்துக் காதலித்துக் கொண்டிருக்கும் சூழலில் நிகிதா அவரது தந்தை வேணு சாஸ்திரி (சத்யராஜ்) வசம் சிக்கிக்கொள்கிறார். இருவரையும் அழைத்துப் பேசும் வேணு சாஸ்திரி, இருவரும் அவரவர் ஸ்மார்ட்போன்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற விநோத நிபந்தனை ஒன்றை விதிக்கிறார். அதன்படி ஒருவர் மற்றொருவர் செல்போனை பயன்படுத்தத் தொடங்க, அதுவரை வெளியில் தெரியாத பூதம் கிளம்பி, அவர்கள் காதலுக்கு ஆடு-புலி ஆட்டம் ஆடுகிறது. இறுதியில் இருவரும் இணைந்தார்களா, இல்லையா? காதலில் நம்பிக்கை எந்த அளவுக்கு முக்கியம் என்பதுதான் படத்தின் திரைக்கதை
பிரதீப் ரங்கநாதன் இந்தப் படத்தை இயக்கி, நடித்திருக்கிறார். புதுமுக நடிகராக அவரது நடிப்பு எந்த துருத்தலையும் ஏற்படுத்தவில்லை என்றபோதும் சில இடங்களில் ஓவர் ஆக்டிங் எட்டிப் பார்க்கிறது. நாயகி இவானா தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை பிசிறின்றி நடித்துக் கொடுத்திருக்கிறார்.
காதலில் நம்பிக்கைதான் ஆதாரம் என்பதை ஒன்லைனாக கொண்டு, அதனை இக்கால இளைஞர்களுக்கு சொல்ல முனைந்திருக்கிறார் இயக்குநர். அதற்காக அவர் தனது கடந்த பட ஆயுதமான ஸ்மார்ட்போனையே இந்தப் படத்திலும் மையப்பொருளாக கையிலெடுத்துள்ளார். படத்தின் முதல் பாதி க்ளிஷேவான காதல் காட்சிகள், காதல் பாடல்கள் என தொடங்குகிறது. க்ளிஷே காட்சிகள் கடந்து ஸ்மார்ட்போன்கள் கைமாறுகையில் திரைக்கதை வேகமெடுக்கிறது.

  • தேமுதிகவின் பொருளாளரும் , ராஜ்யசபா எம் பியும் ஆன எல் கே சுதீஷ் மற்றும் பூர்ண ஜோதி அவர் மூத்த மகள் டாக்டர்.ஜானு ஸ்ரீ, தொழிலதிபர் துட்டு குறி ரவிக்குமார் மற்றும் ராதா ரவிக்குமார் மகன் அகில் ரவிக்குமார் ஆகியோரின் நிச்சயதார்த்தம் சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது..
  • Kalaivaniye’ 5th single from Meesaya Murukku 2 Marks a Beautiful Marriage Union
  • மீசைய முறுக்கு 2’ படத்தின் 5வது சிங்கிள் ‘கலைவாணியே’ வெளியீடு
  • இயக்குநர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கல்வி உதவி வழங்கும் விழா:
  • NOVA’ — A Tamil Film That Questions Time, Science and the Unknown
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme