Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2022
  • ஒன் வே திரை விமர்சனம்

ஒன் வே திரை விமர்சனம்

admin November 7, 2022

நாயகன் பிரபஞ்சனின் தந்தை, கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ள ஒற்றை ஆளாய் குடும்ப பாரத்தைத் தூக்கிச் சுமக்கவேண்டியது அவருடைய பொறுப்பாகிவிடுகிறது. செல்போன் டவர் பழுதுபார்ப்பு முதல் லாரி க்ளீனர் வரை பல வேலைகள் பார்க்கும் பிரபஞ்சன், வளைகுடா நாடுகளுக்குச் சென்று வேலை செய்ய முடிவெடுக்கிறார். ஆனால் அதற்கான பயணம், அவர் அறியாத ஓர் அபாயகரமான இருட்டு உலகத்துக்குக் கொண்டு சென்றுவிடுகிறது. வாழ்வா, சாவா என்ற சாகச விளையாட்டில் பிரபஞ்சன் தப்பித்தாரா, தன் குடும்பத்தின் வறுமையை வென்றாரா என்பதை எதார்த்தமும் கொஞ்சம் சினிமாத்தனமும் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் எம்.எஸ்.சக்திவேல்.

நாயகன் பிரபஞ்சன், வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையையும் வறுமையினால் துரத்தப்படும் கொடூரத்தையும் அழகாகச் சித்திரித்திருக்கிறார். இரண்டாம் பாதியில் ஒரு மரண விளையாட்டில் சிக்கி, மற்றவர்களைக் கொல்ல இயலாமல் தவிக்கும் பரிதவிப்பையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். கதாநாயகியே இல்லாத இந்தப் படத்தில் பிரபஞ்சனின் தங்கையாக ஆரா. ஒருசில காட்சிகளே வந்தாலும் கடன் தொல்லையால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் ஒரு பெண்ணின் அச்சத்தை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் அண்ணன் – தங்கைக்கு இடையிலான உறவை விளக்கக் கூடுதல் காட்சிகள் இருந்திருந்தால் ஆராவின் பாத்திரம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

ஆச்சி மனோரமாவுக்குப் பிறகு காமெடி அரசி என்ற பட்டத்துக்குப் பொருத்தமானவர் கோவை சரளா. மனோரமாவின் குணச்சித்திர நடிப்பையும் தன்னால் வழங்க முடியும் என்பதையும் இந்தப் படத்தின் மூலம் அழுத்தமாக நிரூபித்திருக்கிறார். வட்டார வழக்கில் தன் நிலையை நினைத்துப் புலம்புவது, கடன் கொடுத்தவரைத் துணிச்சலாக எதிர்கொள்வது ஆகியவற்றில் தன் முத்திரையை ஆழப்பதித்திருக்கிறார். இரண்டே காட்சிகள் என்றாலும் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் வினோத்.

வறட்டு நிலப்பகுதி முதல் ‘விளையாட்டு’ நடக்கும் அரையிருட்டு அறைகள் வரை முத்துக்குமரனின் ஒளிப்பதிவு கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறது. பெரும்பாலும் க்ளோசப் காட்சிகளாகவே வைத்தே அதீத உணர்வுகளைக் காட்சிப்படுத்தியிருக்கிறார். சோகத்தையும் திகிலையும் கலந்து வழங்குவதில் அஷ்வின் ஹேமந்தின் இசை வென்றிருக்கிறது. குறிப்பாகப் படம் முடியும்போது, புதிய மெட்டில் ஒலிக்கும் பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே’ பாடல் சிறப்பு. படத்தொகுப்பு, முக்கியமாக ஒலிப்பதிவு இரண்டுமே இந்த த்ரில்லர் படத்துக்கு ஏற்ற பிம்பத்தைக் கொடுத்திருக்கின்றன.

ஒன் வே திரை விமர்சனம்
ஒன் வே திரை விமர்சனம்-indiastarsnow.com
ki

செல்போன் டவரில் இருந்து ஒரு தொழிலாளி தவறிவிழும் காட்சி நம்மையும் பதைபதைக்க வைத்துவிடுகிறது. அதேபோல் கடன் கொடுத்த வினோத், கோவை சரளா வீட்டில் நடந்துகொள்ளும் முறையும் அதிர்ச்சியை விளைவிக்கிறது. நெட்ஃப்ளிக்ஸின் `ஸ்குவிட் கேம்’, தமிழில் `சமர்’ உள்ளிட்ட படைப்புகள் ஏற்கெனவே வந்திருந்தாலும் `ரஷ்யன் ரோலட்’ (Russian roulette) என்னும் பழங்காலத் துப்பாக்கி விளையாட்டு இடம்பெறும் காட்சிகள் திகில் எபிசோடுகள்.

Post navigation

Previous புதுவைத் தமிழ் சங்க அரங்கத்தில் திரைப்பட இயக்குனர் எழுத்தாளர் ராசி அழகப்பன் அவர்களின் “சந்திப்பில் கிடைத்த சிகரங்கள்” நூல் வெளியீட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது
Next லவ் டுடே திரை விமர்சனம்

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

பேட்டில் திரை விமர்சனம்
  • Movie Review
  • Reviews

பேட்டில் திரை விமர்சனம்

April 25, 2026
’பிரேக்ஃபாஸ்ட் திரை விமர்சனம்
  • Movie Review
  • Reviews

’பிரேக்ஃபாஸ்ட் திரை விமர்சனம்

April 25, 2026
நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்
  • News

நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்

April 24, 2026
Actor Pugazh Launches Dubai-Themed “Dubai Summer Carnival 2026” in Chennai
  • News

Actor Pugazh Launches Dubai-Themed “Dubai Summer Carnival 2026” in Chennai

April 24, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.