
நல்ல படம்’ (Nalla Padam) திரைப்படம், .மதுவுக்குக் அடிமையான நாயகன் ஹரிஷ் அவரின் தாயார் எப்போதும் ஹரிஷ் ஆதரவாக இருக்கிறார். ஆனால், அவரது சகோதரி அண்ணனின் முழு நேர குடிப்பழக்கத்தை கடுமையாக எதிர்க்கிறார். அவரது காதலியும் நாயகன் மது பழக்கத்திலிருந்து மாற்றுவதற்குத் தொடர்ந்து முயற்சி செய்கிறார். அப்போது நாடு முழுவதும் மதுபானத் தடை விதிக்கப்படும்போது ஒரு எதிர்பாராத நெருக்கடியைச் சந்திக்கிறார். மது கிடைக்காத அந்தச் சூழலில், அவர் தனது உடல் சந்திக்கும் மாற்றங்கள் மற்றும், குடும்ப உறவுகள் , காதல் மற்றும் சமூகத்தை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதை திரையில் காண்பவரை சிந்திக்கவும் வைத்துலதூ நல்ல படம் நல்ல விழிப்புணர்வுக் கருத்தை மையமாகக் கொண்டு, திரைப்படம்.
போதையில் இருக்கும் நாயகன், காதல் காட்சிகளிலும், ஆக்ஷன் காட்சிகளிலும் ஹரிஷ் தனது நடிப்பின் மூலம் சமுதாயத்திற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.நாயகன் ஹரிஷ், குடிப்பவர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் ‘மது பிரியர்கள் மறுமலர்ச்சி சங்கம்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் மூலம் மது பிரியர்கள் ஏற்படும் பாதிப்பு மற்றும் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் முதல் நபராக நாயகன் ஹரிஷ் திகைகிறார்.மதுவிற்கு தடை விதிக்கப்பட்ட காலத்தில் நாயகன் சந்திக்கும் உணர்வுகளையும் அதிலிருந்து வெளிவர போராட்டத்தையும் மதுவுக்கு அடிமையான ஒருவனின் வாழ்க்கையையும், மதுவிலக்குக்கு எதிராக அவன் நடத்தும் போராட்டத்தையும் மையமாக வைத்து கதை நகர்கிறது. அதற்குள் காதல், நகைச்சுவை, ஆக்ஷன் என பொழுதுபோக்கு அம்சங்களையும் அனைவரும் திரையில் சிந்திக்கும் வகையில் திரைக்கதையாக அமைத்து நல்ல விழிப்புணர்வு திரைப்படமாக நல்ல படம் எடுத்து இயக்குநர் பிரபுராம் தனது முதல் படத்தை சமூக விழிப்புணர் படமாக எடுத்தது மிகச் சிறப்பு.
இப்படத்தில் கல்கி ராஜா, ரமா, பிரியதர்ஷினி மற்றும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்
