
இயக்குநர் எஸ். பாலாஜி இயக்கத்தில், சின்னத்திரை பிரபலம் சித்து கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கும் ‘தி டார்க் ஹெவன்’ (The Dark Heaven) திரைப்படம் ஒரு மர்மங்கள் நிறைந்த சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் படமாக இன்று வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது தி டார்க் ஹெவன் திரை படம்.

1970-களில் ஒரு நூலகருக்கு பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் எழுதிய ‘தி டார்க் ஹெவன்’ என்ற மர்மமான புத்தகம் கிடைக்கிறது. அது மரணங்களை முன்கூட்டியே கணிக்கும் சக்தியைக் கொண்டுள்ளது இதன் மூலம் இந்த ‘தி டார்க் ஹெவன் புத்தகத்தை படிக்கத் தொடங்கியவுடன், அவருடைய வாழ்க்கையில் அடுத்தடுத்து நடக்கவிருக்கும் சம்பவங்கள் அதில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதைவிட அதிர்ச்சியாக, அந்த நபரின் மரணம் எப்போது, யாரால், எந்த விதத்தில் நிகழும் என்பதும் முன்கூட்டியே புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது.
வன பகுதி மெக்கரை என்ற கிராமத்தைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம், கடந்த காலத்தில் நடந்த மர்ம சம்பவங்களையும் நிகழ்காலத்தில் தொடரும் அமானுஷ்யமான நிகழ்வுகளையும் இணைத்து சொல்லும் கிரைம் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ளது.
இந்த புத்தகத்திற்கும் பல ஆண்டுகளுக்கு முன்பு மெக்கரையில் நடந்த சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு?
நிகழ்காலத்தில் அரங்கேறும் தொடர் மரணங்களின் பின்னணியிலும் இதே மர்மம் இருக்கிறதா?
‘தி டார்க் ஹெவன் திரை படத்தின் திரைக்கதை கிரைம் த்ரில்லர் கதையாக கதையின் இறுதிவரை ‘யார் கொலையாளி?’ என்று திரையில் காண்போரை திரையில் வரும் நபர்களை தவறாக சந்தேகப்பட வைக்கும் வகையில் திரைக்கதை அமைத்திருப்பது படத்திற்கு மிக பெரிய பலம்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்துள்ள சித்து, மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நேர்த்தியான உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்புடன் சிறப்பாக நடித்துள்ளார். தர்ஷிகா, ரித்விகா, நிழல்கள் ரவி மற்றும் வேலா ராமமூர்த்தி ஆகியோர் தங்களது அனுபவம் நடிப்பின் மூலம் திரையில் காண்பது ரசிக்க வைத்துள்ளனர்.
