Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

நடிகர் அருள்நிதியின் ‘டிமாண்டி காலனி 3’ திரைப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை கைப்பற்றிய ஃபைவ் ஸ்டார் கே. செந்தில்!* 

Posted on April 14, 2026

நடிகர் அருள்நிதியின் ‘டிமாண்டி காலனி 3’ திரைப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை கைப்பற்றிய ஃபைவ் ஸ்டார் கே. செந்தில்!* 

ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் ‘டிமாண்டி காலனி’ திரைப்படத்தின் மூன்றாவது பாகமான ‘டிமாண்டி காலனி3- தி எண்ட் இஸ் டூ ஃபார்’ இந்த வருடம் கோடையில் வெளியாகிறது. அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை சுதன் சுந்தரம், மனிஷ் சிங்கால் மற்றும் துர்காராம் சௌத்ரி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் முந்திய இரு பாகங்களும் மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், மூன்றாவது பாகத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே வர்த்தக வட்டாரத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கிய இந்தப் படத்தை, ஃபைவ் ஸ்டார் கே. செந்தில் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகிறார். இது படத்தின் வெற்றி வாய்ப்புகளுக்கு மேலும் வலு சேர்க்கிறது.

 

திரையரங்கு விநியோகத்தில் தொடர்ச்சியாக பல வெற்றி படங்கள் கொடுத்து திரைத்துறையில் தனக்கென தனிமுத்திரை பதித்தவர் ஃபைவ் ஸ்டார் கே. செந்தில். ’டிடி ரிட்டர்ன்ஸ்’, ’கருடன்’, ’மகாராஜா’ மற்றும் ’பைசன் காளமாடன்’ உள்ளிட்ட வணிகரீதியாக வெற்றி பெற்ற பல படங்களை அவர் விநியோகம் செய்துள்ளார். ‘டிமாண்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ படத்தின் தமிழ்நாடு திரைப்பட விநியோக உரிமையை அவர் கைப்பற்றி இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறைவடையும் தருவாயில் படத்திற்கான புரோமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

 

படம் குறித்தான ஒவ்வொரு அறிவிப்பு வெளியாகும்போதும் மொழி மற்றும் எல்லைகளைத் தாண்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதால், தனித்துவமான மற்றும் புதுமையான புரோமோஷனல் பணிகளை மேற்கொள்ள படக்குழு திட்டமிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும்.

 

இந்த படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், ஆன்ட்டி ஜாஸ்கெலைனன், குரு சோமசுந்தரம், ஜிஎம் குமார், முத்துக்குமார், ஸ்ரீகுமார், மீனாட்சி கோவிந்தராஜன், கதிர், ஆஷிக் ஹுசைன், சர்ஜனோ கலித், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் தயாரித்து வழங்குகிறார். மேலும், ஆர்டிஎக்ஸ் மீடியா மற்றும் ஞானமுத்து பட்டறையுடன் இணைந்து தங்கல் டிவியும் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

 

*தொழில்நுட்பக்குழு விவரம்:*

 

எழுத்து, இயக்கம்: அஜய் ஆர் ஞானமுத்து,

இசை: சாம் சி.எஸ்,

ஒளிப்பதிவு: சிவகுமார் விஜயன்,

படத்தொகுப்பு: குமரேஷ் டி.

  • _*Actor Ravi Mohan Joins Benz as One of the Protagonists; Heightens Excitement Around the LCU*_Actor Ravi Mohan, one of the most proficient and consistently evolving performers in Tamil cinem
  • பென்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவராக இணைந்திருப்பது LCU மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது
  • இளையராஜா இசையுலக சாதனையில் 50 வது ஆண்டு பொன்விழாவை சென்னையில் கோலாகல கொண்டாட்டம்
  • சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு
  • ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “வெக்கை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme