Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

Love Insurance Kompany திரை விமர்சனம்

Posted on April 10, 2026

Love Insurance Kompany திரை விமர்சனம்

காதல் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் திரைக்கதை 2040-ல் சென்னையை நடப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது அதில் விஷுவலாக கிராபிக்ஸ் மற்றும் (அரசு மருத்துவமனை) மற்றும் அதிநவீன  மெட்ரோ , சென்னை பரங்கி மலையில் உள்ள மலையில் KOLLY WOOD போர்டு , மற்றும் அதிநவீன இயந்திரங்கள் பயன்படுத்தும் முறை போன்றவை ஹாலிவுட் திரைப்படம் பார்த்து ரசிக்கும் படியாக உள்ளது lik திரைப்படம்.

 

 

இளம் காதல் ஜோடிகள் முதல் குடும்பத்தார் வரை அனைவரும் 2040 காலகட்டத்தில் எஸ்.ஜே. சூர்யா கண்டுபிடித்த lik என்கிற App-ல் இணைந்திருக்கின்றனர் இதில் விரல் மோதிரம் மற்றும் செல்போன் நிறுவனம் காதல் ஜோடிகளுக்கு கொடுக்கிறது அதன் மூலம் தன்னுடன் இணைந்து இருப்பவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்பதனை நேரடியாக வீடியோ மூலம் தெரிந்து கொள்ள முடியும் இதில் அவர்கள் துணைக்கு உண்மையாக இல்லை என்றால் இந்த ஆப்பிள் உள்ள வீடியோக்களை வைத்து அவர்களை நிராகரிக்க முடியும் பிரிந்துவிடுகின்றனர்.

 

அதேபோல் 2040 இந்த காலகட்டத்தில் செல்போனில் குற்ற செயல்கள் செய்பவர்களை பசுமை உலகிற்கு அழைத்துச் சென்று அங்கு இயற்கை முறையில் அவர்கள் வாழ்க்கை முறையை வாழ்வதற்கான சூழலையும் அதுவே தண்டனையாகவும் கொடுக்கப்படுகிறது.

இதனை சமூக அலுவலராக நடிகர் சீமான் நடித்துள்ளார் lik திரைப்படத்தில் சீமானின் மகனாக பிரதீப் நடித்துள்ளார்,

ஏற்கனவே சீமானின் மகள் செல்போன் பயன்படுத்தி செல்பி வீடியோ எடுத்து அதன் மூலம் விபத்தில் சீமானின் மகள் உயிரை விடுகிறார் அதனைத் தொடர்ந்து செல்போன் தவறாக பயன்படுத்துபவர்களுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக பசுமை தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.

 

நாயகன் பிரதீப் ரங்கநாதன் தனக்கென்று ஒரு வேலையைத் தேடிக் கொள்வதற்காக பல்வேறு நிறுவனங்களுக்கு சென்று வேலை தேடிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது எஸ் ஜே சூர்யா நடத்தும் lik நிறுவனத்தில் lik app குரல் கொடுக்க நபரை தேடிக் கொண்டிருக்கும் எஸ் ஜே சூர்யா, நாயகன் பிரதீப் ரங்கநாதன் குரல் பிடித்து போக lik நிறுவனத் தலைவர் சூர்யா நிறுவனத்தில் பணியில் சேர்கிறார் நாயகன்.

 

தனது அப்பாவின் வளர்ப்பில் வளரும் நாயகன் அவர் போன்று செல்போன் இல்லாமல் தனது வாழ்க்கையை மேற்கொண்டு வரும் நாயகன் எதிர்பாராத விதமாக நாயகி கீர்த்தி சட்டியை சந்திக்க நாயகனுக்கு காதல் ஏற்படுகிறது இதனை தொடர்ந்து நாயகி தொடர்பு கொள்ள நாயகனும் lik செல்போன் வாங்கி App மூலம் கீர்த்திக்கு request அனுப்புகிறார் நாயகன் பிரதீப். request-ஐ கீர்த்தி Accept செய்ய நாயகனும் நாயகியும் lik app மூலம் தங்களது நட்பாக தொடங்கி ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது அப்பொழுது lik நிறுவனத்தின் முதல்வர் சூர்யா காதலர்களுக்குள் காதல் அளவுகோலை கண்டுகொள்ளும் app வெளியிடுகிறார் அதில் இருவரும் சோதனை செய்ய அவர்களின் காதல் வெறும் 3% மட்டுமே இருப்பதாக ஆப் தெரிவிக்க நாயகி காதலை பிரேக்கப் செய்கிறார் .

தனது காதல் உண்மையானது 100% உறுதியானது என்றும் lik app போலியானது என்று நாயகியிடம் நாயகன் தெரிவிக்க நாயகி மறுத்து விலகிச் செல்கிறார் இதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் தலைவர் சூர்யாவிடம் சென்று தன்னுடைய காதல் நூறு சதவீதம் உண்மையானது என்றும் உங்கள் lik app தவறு நடந்திருப்பதாகவும் கூறுகிறார் அதனைத் தொடர்ந்து இருவருக்கும் மோதல் ஏற்பட நாயகன் தன்னுடைய காதல் உண்மையானது என்று எப்படி நிரூபிக்கிறார் என்பது படத்தின் திரைக்கதை.

 

பசுமை உலகின் மூலம் மக்களுக்கு எதார்த்த வாழ்க்கையை சொல்லித் தரும் தந்தை சீமானின் உணர்வுகளை புரிந்து கொண்ட மகனாக நாயகன் உள்ளாரா,?

 

lik app மூலம் இன்றைய இளைஞர்கள் தங்களது வாழ்க்கையும் வாழ்வாதாரத்தையும் எவ்வாறு தொலைக்கிறார்கள் என்பதை திரைக்கதை காதலோடு ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர்.

 

இன்றைய இளைஞர்கள் APP மூலம் அடிமை ஆகி தங்களின் வாழ்க்கையை தொலைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது திரைப்படம் தெளிவுபடுத்துகிறது!?

 

நாயகன் நாயகி காதல் lik app மூலம் நிறைவேறியதா?

 

இது போன்ற கேள்விக்கு பதில் lik திரைப்படத்தின் திரைக்கதை.

  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*
  • Shooting of “Attacker” BeginsProduced by Dinesh Raj under the banner of Zinema Entertainment
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme