அப்போலோ மருத்துவமனை 8,000-க்கும் மேற்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்திருப்பதன் மூலம் தமிழ்நாட்டின் அதிநவீன அறுவை சிகிச்சை கட்டமைப்பையும், மருத்துவ வசதிகளையும் உருவாக்கியுள்ளது!

வழக்கமான அறுவை சிகிச்சைகளை விட ரோபோடிக் அறுவை சிகிச்சைகளில் ரத்த இழப்பு 50% குறைந்திருப்பது,, அறுவை சிகிச்சைக்குப் பின்பு மருத்துவமனையில் தங்கும் நாட்கள் 1-2 நாட்கள் வரை குறைந்திருப்பது மற்றும் நோயாளிகள் மிக விரைவாக குணமடையும் வாய்ப்புகள் என இதுவரையில் இல்லாத பல நன்மைகள் கிடைக்கின்றன.

சென்னை, 12 பிப்ரவரி 2026: அப்போலோ மருத்துவமனைகள் [Apollo Hospitals] பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் 8,000-க்கும் மேற்பட்ட ரோபோடிக் (எந்திர மனித கரம் மூலம் செய்யப்படும் அறுவை சிகிச்சை) உதவியுடனான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது. மிகத் துல்லியமான மற்றும் நோயாளிகளின் ஆரோக்கியத்தையும் நலனையும் முன்னிறுத்தும் சிகிச்சைகளில் அப்போலோ மருத்துவமனைகள் தொடர்ந்து காட்டிவரும் அர்ப்பணிப்பில் இது ஒரு மிக முக்கிய மைல்கல்லாகும். இந்தச் சாதனையின் மூலம், தமிழ்நாட்டின் பன்னோக்கு சிறப்பு மருத்துவப் பிரிவுகளுக்கான மிகப்பெரிய ரோபோடிக் அறுவை சிகிச்சைத் திட்டத்தையும், சென்னையின் மிக விரிவான ரோபோடிக் அறுவை சிகிச்சை கட்டமைப்பப்பையும் அப்போலோ மருத்துவமனை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு அதி நவீன மற்றும் துல்லியமான சிகிச்சை வசதிகள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டா வின்சி Xi (da Vinci Xi), மேகோ (MAKO), ஹியூகோ ஆர்ஏஎஸ் (HUGO RAS), எஸ்எஸ்ஐ மந்திரா (SSI Mantra) மற்றும் சிஎம்ஆர் (CMR) உள்ளிட்ட உலகின் மிகச் சிறந்த நவீன தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு, ஒரு ஒருங்கிணைந்த ரோபோடிக் அறுவை சிகிச்சைச் சூழலை அப்போலோ உருவாக்கியுள்ளது. இந்த பன்முகத் தொழில்நுட்ப வசதியானது, நோயின் தன்மை, சிகிச்சையின் சிக்கலான நிலை மற்றும் நோயாளியின் தனிப்பட்ட உடல்நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ற மிகச் சரியான தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுக்க மருத்துவர்களுக்கு உதவுகிறது. இது அறுவை சிகிச்சையின் துல்லியம், பாதுகாப்பு மற்றும் வெற்றி விகிதத்தை அதிகரிக்கிறது.
அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் என்டர்பிரைஸ் லிமிடெட்டின் நிர்வாகத் துணைத் தலைவர் டாக்டர் ப்ரீதா ரெட்டி [Dr Preetha Reddy, Executive Vice Chairperson, Apollo Hospitals Enterprise Limited] இது குறித்துப் பேசுகையில், “அப்போலோ மருத்துவமனைகளைப் பொறுத்தவரை நவீன தொழில்நுட்பம் என்பது எங்களது இறுதி இலக்கு அல்ல; அதையும் தாண்டி இதுவரையில்லாத சிறந்த மருத்துவத் தீர்வுகளை அளிப்பதற்கும், நோயாளிகளின் சிகிச்சை அனுபவத்தை மேம்படுத்துவதற்குமான ஒரு வழிமுறையாக பின்பற்றி வருகிறோம். நாங்கள் ரோபோடிக் சிகிச்சைகளுக்கான வசதிகளை விரிவுபடுத்தும்போது, சிகிச்சைகளில் துல்லியம், பாதுகாப்பு மற்றும் நோயாளிகளுக்கே முன்னுரிமை என்பதிலேயே எங்கள் முழுக் கவனமும் உள்ளது. 8,000 ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறோம் என்பது, புதிய கண்டுபிடிப்புகள் மருத்துவரீதியாக அர்த்தமுள்ளதாகவும், பொறுப்புணர்வுடனும், அதே சமயம் அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்ற எங்கள் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் எங்கள் மருத்துவர்களுக்கு அதிகத் துல்லியத்தையும் பெரும் நம்பிக்கையையும் அளிக்கிறது; அதேவேளையில் நோயாளிகள் மிக விரைவாகவும் பாதுகாப்பாகவும் குணமடைய உதவுகிறது,” என்று கூறினார்.
அப்போலோ மருத்துவமனைகளின் உத்திசார் செயல்பாட்டுப் பிரிவு இயக்குனர் திருமதி சிந்தூரி ரெட்டி [Ms Sindoori Reddy, Director – Strategy, Apollo Hospitals] கூறுகையில், “எங்களது ரோபோடிக் அறுவை சிகிச்சைத் திட்டம், ஒவ்வொரு முறையும் அந்தந்த நோயாளிக்குச் சரியான மருத்துவ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற எளிய நோக்கத்துடனும், உறுதியான கொள்கையுடனும் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு நவீன தளங்களில் முதலீடு செய்ததன் மூலம், அறுவை சிகிச்சை நிபுணர்களுக்குத் துணைபுரியும், சிகிச்சையில் சீரான தீர்வுகளை உருவாக்கும் மற்றும் சிறந்த சிகிச்சை முடிவுகளைத் தரும் எதிர்காலத்திற்கு ஏற்ற ஒரு கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில், அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு அத்தியாவசியமான கன்சோலை, எங்கு எடுத்து செல்ல முடிகிற ​​உலகின் முதல் கையடக்க ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர் கன்சோல் [portable robotic surgeon console] போன்ற புதுமைகள், இதுவரை சாத்தியமானவற்றை இன்று மறுவரையறை செய்கின்றன. அறுவை சிகிச்சையின் நிபுணத்துவம் இன்று எல்லைகள் கடந்து எல்லோருக்கும் கிடைப்பதும், மேம்பட்ட மருத்துவ பராமரிப்புக்கான வசதி எளிதில் கிடைக்கும் வகையில் விரிவுபடுத்தவும் உதவுகிறது. எங்களின் உண்மையான வெற்றி என்பது எண்களில் மட்டும் இல்லை; நோயாளிகள் விரைவாகக் குணமடைவதிலும், மருத்துவப் பராமரிப்பு மூலமான பாதுகாப்பிலும், அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படுவதிலும் தான் உள்ளது.” என்றார்.
அப்போலோ மருத்துவமனைகளில் ரோபோடிக் சிகிச்சையானது சிறுநீரகவியல் [Urolog], மகளிர் மருத்துவம் [Gynecology], பொது மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை [General & Laparoscopic Surgery], குடல் மற்றும் மார்பு அறுவை சிகிச்சை [Colorectal & Thoracic Surgery], எலும்பியல் மற்றும் மூட்டு மாற்று சிகிச்சை [Orthopedics &d Joint Replacement], புற்றுநோயியல் மற்றும் இதய மருத்துவம் [Oncology, & Cardiac Sciences] எனப் பல்வேறு சிறப்பு மருத்துவ பிரிவுகளிலும் மேற்கொள்ளப்படுகிறது. இந்தத் திட்டமானது நவீன தொழில்நுட்பம், தரப்படுத்தப்பட்ட மருத்துவ நடைமுறைகள் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு ஆகியவற்றை அன்றாட மருத்துவ நடைமுறைகளுடன் ஒருங்கிணைக்கிறது.
இதுவரை பன்னோக்கு சிறப்பு மருத்துவ பிரிவுகளில் 8,000-க்கும் மேற்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சில துறைகளில் 30 முதல் 40 சதவீதம் மிக சிக்கலான மருத்துவ நடைமுறைகள் இப்போது ரோபோடிக் முறையிலேயே செய்யப்படுகின்றன. இது மாநிலத்திலேயே அதிகபட்ச விகிதங்களில் ஒன்றாகும். வழக்கமான அறுவை சிகிச்சைகளை விட, ரோபோடிக் முறையில் செய்யப்படும் சிகிச்சைகளில் 50% வரை குறைவான ரத்த இழப்பு ஏற்படுவதாகவும், நோயாளிகள் மருத்துவமனையில் தங்கும் நாட்கள் 1-2 நாட்கள் வரை குறைவதாகவும், அவர்கள் மிக விரைவாகக் குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதாகவும் மருத்துவ முடிவுகள் தெரிவிக்கின்றன.
அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான சிறப்புப் பயிற்சி, தகுதிச் சான்றளிப்பு மற்றும் மருத்து சிகிச்சை வழங்கும் தீர்வுகளின் மீதான தொடர் கண்காணிப்பு ஆகியவற்றில் அப்போலோ மருத்துவமனைகள் தொடர்ந்து முதலீடு செய்துள்ளது. இதன் விளைவாக, மாநிலத்தின் மிகப்பெரிய மற்றும் ஆழ்ந்த அனுபவம் வாய்ந்த ரோபோடிக் மருத்துவக் குழுவை அப்போலோ மருத்துவமனை கொண்டுள்ளது. மருத்துவ சிகிச்சையின் மூலம் நோயாளிகளைக் குணமனடையச் செய்யும் சிறந்த தீர்வுகள் மற்றும் நோயாளிகளின் நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது ஆகியவற்றின் காரணமாக ரோபோடிக் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை தொடர்ந்து சீராக அதிகரித்து வருகிறது.
அடுத்த தலைமுறை அறுவை சிகிச்சை தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயனளிக்கும் வகையில் பிரம்மாண்டமான ரோபோடிக் கண்காட்சி ஒன்றை அப்போலோ மருத்துவமனை நடத்தியது. மருத்துவர்கள், மாணவர்கள், சமூக ஊடகப் பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டு, ரோபோடிக் கருவிகளை நேரில் பார்வையிட்டு அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் கலந்துரையாடினர். இந்த புதுமையான முயற்சி, மருத்துவ தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வுக்கான கல்வி, வெளிப்படைத்தன்மை மற்றும் மருத்துவப் புதுமைகளில் அப்போலோ மருத்துவமனைகொண்டுள்ள ஈடுபாட்டை மேலும் உறுதிப்படுத்தி இருக்கிறது.
அப்போலோ மருத்துவமனைகள் பற்றி:
1983-ம் ஆண்டு சென்னையில் டாக்டர் பிரதாப் ரெட்டி அவர்கள் தனது முதல் மருத்துவமனையைத் தொடங்கியபோது, அப்போலோ மருத்துவத் துறையில் ஒரு மாபெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது.
இன்று, 74 மருத்துவமனைகளில் 10,400-க்கும் மேற்பட்ட படுக்கைகள், 6,600-க்கும் அதிகமான மருந்தகங்கள், 264 கிளினிக்குகள், 2,182 பரிசோதனை மையங்கள் மற்றும் 800-க்கும் மேற்பட்ட தொலைதூர மருத்துவ (Telemedicine) மையங்களுடன், உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த சுகாதாரச் சேவை நிறுவனமாக அப்போலோ திகழ்கிறது.
இதய சிகிச்சையில் உலகின் முன்னணி மையங்களில் ஒன்றாக விளங்கும் அப்போலோ, இதுவரை 3,00,000-க்கும் மேற்பட்ட ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைகளையும், 2,00,000-க்கும் அதிகமான இதய அறுவை சிகிச்சைகளையும் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
நோயாளிகளுக்கு உலகின் மிகச்சிறந்த சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதற்காக, மருத்துவ சிகிச்சை மற்றும் பராமரிப்பில் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களில் அப்போலோ தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது; இதன் மூலம் அதிநவீன தொழில்நுட்பங்கள், மருத்துவக் கருவிகள் மற்றும் மேம்பட்ட சிகிச்சை முறைகள் இங்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன.
அப்போலோ குடும்பத்தைச் சேர்ந்த 1,20,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், மிகச்சிறந்த மருத்துவச் சேவையை வழங்குவதிலும், இந்த உலகத்தை நாம் பெற்றதை விடச் சிறந்ததாக மாற்றிக் காட்டுவதிலும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர்.

admin