Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

சென்னையில் நடைபெற்ற (பிரேக் த்ரூ சம்மிட் 2026) Breakthrough Summit 2026 மாநாட்டில், ஏராளமான தொழில் நிறுவனர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள் ஒன்றிணைந்து, கற்றல், நெட்வொர்க்கிங் மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த நாளாக உருவாக்கினர்.

Posted on February 8, 2026

சென்னையில் நடைபெற்ற (பிரேக் த்ரூ சம்மிட் 2026) Breakthrough Summit 2026 மாநாட்டில், ஏராளமான தொழில் நிறுவனர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள் ஒன்றிணைந்து, கற்றல், நெட்வொர்க்கிங் மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த நாளாக உருவாக்கினர்.

சென்னை, அடையாறு ராஜரத்தினம் கலையரங்கத்தில் நடப்பாண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வணிக மற்றும் சிந்தனை நிறை மாநாடுகளில் ஒன்றான Breakthrough Summit 2026, மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இம்மாநாட்டில் 400க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர், தொழில்துறை நிறுவனர்கள் (Founders) மற்றும் வணிக உரிமையாளர்கள் ஒரே நிகழ்வின் கீழ் ஒன்றிணைந்து, கற்றல், நெட்வொர்க்கிங் மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த நாளாக உருவாக்கினர்.

2026ஆம் ஆண்டில் தங்கள் வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்த தயாராக இருக்கும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த மாநாடு, டிஜிட்டல் யுகத்தில் நிலையான மற்றும் அளவிடக்கூடிய (Scalable) வணிகங்களை உருவாக்க தேவையான அமைப்புகள் (Systems), உத்தி (Strategy), சிந்தனை (Mindset) மற்றும் செயல்படுத்தல் (Execution)ஆகிய முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தியது.

இந்த மாநாட்டின் Title Sponsor அட்டிகா கோல்டு நிறுவனம் (Attica Gold Company).இந்த மாநாட்டில் ஸ்கேலிங் ஒல்ஃப் .ஏ.ஐ., நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு. அட்டோ தமிழரசன், வீ ஆக்செல் ஏ.ஐ. டைனமிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் திரு. வெங்கடேசன், WWBC மற்றும் லைஃப் கோச் நிறுவனர் திரு. சிவமதிவாணன், தி பிராண்ட் கிராஃப்டர்ஸ் அண்ட் கிளாசிக்கோஸ் நிறுவனர் திரு ஆப்பெக்ஸ் எஸ்கே ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மாநாட்டின் சிறப்பம்சங்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் மற்றும் முடிவுகளை தீர்மானிப்போர் கலந்து கொண்டனர்.

வெற்றிகரமான நிறுவுநர்கள் மற்றும் தொழில் தலைவர்களின் சக்திவாய்ந்த உரைகள் நிகழ்வில் இடம்பெற்றன.

உயர்தர நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.

பேச்சாளர்கள் மற்றும் உயர்நிலை முதலீட்டாளர்கள் (HNIs) கலந்து கொள்ளும் சிறப்பு VIP நெட்வொர்க்கிங் சந்திப்பு நடைபெற்றது.

மொத்தமாக, ஊக்கவுரைகளைத் தாண்டி, செயல்படுத்தக் கூடிய அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறை அனுபவங்களை வழங்கி, வணிக செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், அமைப்புகளை மேம்படுத்தவும், புதிய வளர்ச்சி வாய்ப்புகளை திறக்கவும் இந்த மாநாடு சிறந்த வாய்ப்புகளை உருவாக்கி உள்ளது.

Breakthrough Summit 2026, ஊக்கம், உத்தி மற்றும் பொருள் நிறைந்த தொழில் தொடர்புகளை ஒரு உயர்தர சூழலில் ஒருங்கிணைத்து, சென்னையின் வணிக மாநாடுகளுக்கு புதிய அளவுகோலை உருவாக்கியுள்ளது.

  • செகண்ட் லவ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியின் அனைத்து ஏழு எபிசோடுகளும் இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒரே நேரத்தில் வெளியாகும்!
  • Second Love announces weekly binge drop with all 7 episodes releasing every Monday
  • ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’ திரைப்படம் IMDb-ன் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது!
  • மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடெட் தயாரித்த ’லைஃப் இன் லூம்’ ஆவணப்படத்திற்கு 72 ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது அறிவிப்பு!
  • Mark Studio India Pvt. Ltd.’s Life in Loom Wins Best Cinematography at the 72nd National Film Awards
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme