டெலிவரி பாய் திரை விமர்சனம்

டெலிவரி பாய் திரை விமர்சனம் -indiastarsnow டெலிவரி பாய் திரை விமர்சனம் -indiastarsnow
நானி எழுதி இயக்கியுள்ள டெலிவரி பாய் திரைப்படம் சுந்தரமூர்த்தி கே.எஸ். இசையமைத்துள்ளார். அசாசி கிரியேஷன்ஸ் மற்றும் சாண்டி டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளன.

Rating: 3.8/5.

டெலிவரி பாய் திரை விமர்சனம் -indiastarsnow
பட்டிமன்றப் பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் டெலிவரி பாய்’ மற்றும் ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘டெலிவரி பாய்’ (Delivery Boy) குடும்ப உறவு, காதல், எமோஷனல், ஆக்‌ஷன் த்ரில்லர் என குடும்பத்தோடு ராசிக்கும் தமிழ் திரைப்படம் டெலிவரி பாய்.

கோவையில் வசிக்கும் நாயகன் காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற கனவுடன் உணவு டெலிவரி செய்யும் டெலிவரி பாய் வேலை செய்யும் ஒரு இளைஞன் (லியோ சிவகுமார்), விபத்தில் சிக்கிய தன் தாயின் உயிரைக் காப்பாற்றப் பணத்தைத் திருடுகிறான். பின்னர், அந்தப் பணத்திற்குச் சொந்தக்காரர் ஒரு பொய்யான கொலை வழக்கில் சிக்கிக்கொள்ள, அவரைக் காப்பாற்ற நாயகன் எடுக்கும் முயற்சிகளே படத்தின் விறுவிறுப்பான கதை

கதையின் நாயகன் லியோ சிவகுமாரின் ஆக்‌ஷன் காட்சி மற்றும் காதல், தாய் பாசம் போன்ற உணர்வலை வெளிப்படுத்தி தரையில் காண்பவரை தனது நடிப்பின் மூலம் ரசிக்க வைத்துள்ளார் நாயகம்,
தாயாக நடித்துள்ள ராதிகா சரத்குமாரின் அனுபவ நடிப்பும் படத்திற்குப் பெரிய பலமாக அமைந்து உள்ளது .

லியோ சிவக்குமார், பிரிகிடா சாகா, ராதிகா சரத்குமார் (தாயாக), காளி வெங்கட், போஸ் வெங்கட், ஜென்சன் திவாகர் உள்ளிட்டோர் தங்கள் அனுபவ நடிப்பின் மூலம் திரையில் காண்பவரை ரசிக்க வைத்தனர் .
டெலிவரி பாய் திரைப்படம் முதல் பாதி, கதை காதல், தேடல், எளிய குடும்பத்துக்கான நிதிச்சிக்கல் என காட்சிகளுக்கு காட்சி வலு சேர்க்கிறது திரைக்கதை மற்றும் நடிப்பு.
டெலிவரி பாய் திரைப்படம் இரண்டாம் பாதியில் திரைப்படம் விறுவிறுப்பாக திரைக்கதை அமைக்கப்பட்டு விறுவிறுப்பன சண்டை காட்சி அமைத்து திரையில் காண்போரை ரசிக்கவும் கிளைமேக்ஸை சண்டைக் காட்சிகளால் படத்தின் வெற்றி கொடி திரையரங்களில் நாட்டியுள்ளது டெலிவரி பாய்.
ஒளிப்பதிவும், பின்னணி இசையும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றன.