நிறம் திரை விமர்சனம்

நிறம் திரை விமர்சனம் -indiastarsnow

நிறம் திரைப்படம் இன்று நவம்பர் 27, 2026 திரையரங்குகளில் வெளியான தமிழ் கிரைம் மர்மத் திரைப்படமான நிறம் (Niram), மகளிடம் வரவேற்பை பெற்று வருகிறது .
Rating: 4.2/5.(நவீன காலத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு திரைப்படம் நிறம்)

பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் முகேன் ராவ் மற்றும் பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ள நிறம் திரைப்படம் பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை ஸ்மார்ட்போன் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் விழிப்புணர்வுக் கருத்தை மையக்கதையாக வைத்து சமுதாயதில்
மனிதர்களின் சுயநலத்தையும் பல முகங்களையும் திரைக்கதையாக அமைத்து திரைப்படத்தின் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக திரையில் காண்போரை ரசிக்க வைத்துள்ளது நிதின் சத்யா மற்றும் சுரேகா வாணி போன்ற துணைக் இப்பதான் பத்திரங்கள் திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளது.

மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவி நாயகி பிரீத்திஒரு சமூகப் பிரச்சினைகளை தனது செல்போனில் வீடியோவை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு போது மகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி பிரச்சனையை தட்டிக் கேட்கும் ஒரு தைரியமான பெண்ணாக இருக்கிறார், தனக்குத் தெரிந்த ஒரு சிறுமியின் மரணம் சந்தேகத்திற்கு உள்ளாகி அந்த மருத்துவ மனையின் நிர்வாகத்தை முறையிடுகிறார் மற்றும் தனது சகோதரியின் பிறந்தநாள் இரவில் மர்மமான முறையில் காணாமல் போகிறார் நாயகி. இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கைது செய்யப்படும் நாயகன், காவல்துறையிடமிருந்து தப்பித்து காதலியைத் தானே தேடத் தொடங்குகிறார். அந்தத் தேடலில் அடுத்தடுத்து பெண்கள் மாயமாவதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் ரகசியங்களை அவர் கண்டறிகிறார் என்பது நிறம் திரைப்படத்தின் திரைக்கதை.

இசை டி இமானின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்ந்துள்ளது.

ஒளிப்பதிவு சந்தோணியோ டெரசீயோ
இயக்குனர் பலராம் கிருஷ்ணா பெண்கள் மீதான சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் கதையின் , பெண்கள் தங்களிடம் இருக்கும் ஸ்மார்ட்போனை வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி, சமூகத்தில் நடைபெறும் அநீதிகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் ஆயுதமாகவும் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்து வரவேற்கதகது.
நிறம் திரை விமர்சனம் -indiastarsnow