Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

சிறை திரை விமர்சனம்

Posted on December 25, 2025


தயாரிப்பு: செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ’ எஸ்.எஸ்.லலித்குமார் டைரக்டர்; சுரேஷ் ராஜகுமாரி, கதை: தமிழ் திரைக்கதை: தமிழ் & சுரேஷ் ராஜகுமாரி,

ஆர்டிஸ்ட்:
விக்ரம் பிரபு. எல்.கே.அக்ஷய்குமார்( அறிமுகம், அனிஷ்மா அனில்குமார், அனந்தா தம்பி ராஜா, பி.எல்.தேனப்பன், மூணார் ரமேஷ் ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம், இசை: ஜஸ்டின் பிரபாகரன், எடிட்டிங் பிலோமின்ராஜ் காஸ்ட்யூம் டிசைன்: வர்ஷினி சங்கர், ஸ்டண்ட்: பி.சி.ஸ்டண்ட்ஸ், தயாரிப்பு நிர்வாகி: ஆர்.எஸ்.வெங்கட் நிர்வாக தயாரிப்பாளர்கள்: அருண், மணிகண்டன், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: ஆரோசம்,

பி.ஆர்.ஓ. யுவராஜ்

1996-97-ல் நடந்த உண்மைக் கதை தான் இந்த ‘சிறை’ திரைப்படமாக இயக்கி உள்ளார் இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி,.

வேலூர் மாவட்ட ஏ.ஆர்.போலீசில் தலைமைக் காவலராக இருக்கிறார் கதிரவன் | விக்ரம் பிரபு]  எண்ட்ரியாகும் முதல் காட்சியே,வேலூர் சிறையில் விசாரணைக் கைதியை (ரவுடி) பேருந்தில் கொண்டு செல்லும் பொழுது அவரது  நண்பர்கள் உதவியோடு ஆட்டோவில் தப்பி செல்கிறார் அவரை துரத்தி பிடிக்க முடியாமல் ஏ.ஆர்.போலீசில் தலைமைக் காவலர் கதிரவன் | விக்ரம் பிரபு] தனுடன் பாதுகாப்புக்கு எடுத்துச் சென்ற துப்பாக்கியால் சுட்டுக் கொள்கிறார் அதனை தொடர்ந்து அவர் மீது விசாரணை கமிஷன் முன் ஆஜர் படுத்தப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. அதே நேரத்தில் தன்னுடன் பணிபுரியும் நண்பன் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாததால்  தலைமை அதிகாரியிடம் விடுமுறை கேட்டு காத்திருக்க அங்கு வரும் கதிரவன் | விக்ரம் பிரபு] தன் நண்பனுக்கு விடுமுறை அளிக்குமாறு கேட்க உயர் அதிகாரி அவருடைய பணியை யார் செய்வது என்று கேட்க கதிரவன் தான் அவர் பணியை செய்வதாக ஒப்புக்கொள்கிறார் அதனைத் தொடர்ந்து வேலூர் சிறையில்  கைதியாகவே ஐந்து ஆண்டுகள் இருக்கும் அப்துல் ரவூப்பை (எல்.கே.அக்ஷய்குமார்] சிவகங்கை நீதிமன்றத்தில் நடக்கும் கொலை வழக்கு விசாரணைக்காக, இரண்டு காவலர்களுடன் வேலூர் சிறையிலிருந்து சிவகங்கைக்கு பஸ்ஸில் அழைத்துச் செல்கிறார். இரவு சாப்பிட விக்ரவாண்டியில் பஸ் நிற்கும் போது, உதவிக்கு வரும் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் ஏற்படும் பிரச்சனையில் தப்பித்துச் செல்லும் அப்துல், அதன் பின் பல யோசனைக்குப் பின் விக்ரவாண்டி போலீஸ் ஸ்டேஷனில் சரண்டராகிறார். இதனால் ரொம்பவே பதட்டமாகும் கதிரவனும் மற்ற இரு போலீசும் அக்யூஸ்ட் பற்றிய தகவலை அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் தெரிவிக்க செல்லும் பொழுது விக்ரவாண்டி ஸ்டேஷனில் இருப்பதை கண்டு கோபப்படுகிறார் பின்பு அங்குள்ள உயர் அதிகாரியின் உதவியுடன்  சிறை கைதி அப்துலைக் கூட்டிக் கொண்டு மீண்டும் சிவகங்கை நோக்கி லாரியில் பயணமாகிறார்கள்.

லாரியில் போகும் போது அப்துலின் லவ் ஃப்ளாஷ்பேக், அவன் எப்படி கொலையாளினான் என்ற கதையைக் கதிரவன் | விக்ரம் பிரபு]  கேட்டு திரையில் காண்போரை கண் கலங்க வைத்து சிந்திக்கவும் ரசிக்கவும் வைத்துள்ளார் இயக்குனர்.
கதிரவன் சிறை கைதிக்கு உதவ எடுக்கும் முடிவு ஏன் ?
அப்துல் ரவூப்பை (எல்.கே.அக்ஷய்குமார்] “யாருக்காக ” எதற்காக கொலை செய்தார்?
அப்துல் ரவூப்பை காதலிக்கும் இந்து மதப் பெண்ணுக்கும் திருமணம் நடந்ததா?
சிறை திரைப்படம் திரையில் காண்பவரை சிறைபிடித்ததா?
இது போன்ற கேள்விக்கு பதிலே திரையில் காண்போரை தங்களது நடிப்பின் மூலம் சிறை வைக்கும் திரைக்கதை.

1996-97-ல் நடந்த உண்மைக் கதையை எழுதிய இயக்குனர் தமிழுக்கும் அதை இரண்டேகால் மணி நேரம் .முதல் பாதி திரைக்கதையில் விறுவிறுப்பை ஏற்படுத்தி வெள்ளிப திரையில் காண்போரை சிறைப்படுத்தி ஜொலிக்கிறது ,அடுத்தது என்ன நடக்கும் என்ற பயத்தோடு முதல் பாதி முடிகிறது.

0இரண்டாம் பாதியில்
  விக்ரம் பிரபு மனித நேயமிக்க தலைமை காவலராகவும் . “சாதி மதம் கடந்து தனது காதலனுக்காக ஐந்து வருடம் நீதிமன்ற வாசலில் காத்திருக்கும் உண்மை காதலின் வலியை திரையரங்கில் உள்ளவரின் கண்ணீரில் காணலாம்”
மொத்தத்தில் மூவரும் தங்களது நடிப்பின் மூலம் வெள்ளித் திரையில் காண்போரை சிறை பிடிக்கின்றனர் .

  • ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்கமல்ஹாசன்பெருமையுடன் வழங்கும்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும்”தர்மன்”இயக்கம்: அஸ்வத் மாரிமுத்து
  • சிங் கீதம் திரை விமர்சனம்
  • அந்தரன் திரை விமர்சனம்
  • அனந்தன் காடு திரை விமர்சனம்
  • *கோபம், வஞ்சம், வெற்றி – மனதின் போராட்டத்தை சொல்லும் “வஞ்சம் தீர்” பாடல்!*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme