ராம் அப்துல்லா ஆண்டனி’ திரை விமர்சனம்

‘ராம் அப்துல்லா ஆண்டனி’. வெவ்வேறு ஜாதியாக இருந்தாலும் மூவரும் சிறு வயது  நண்பர்களாக  பள்ளிப் பருவ நண்பர்களாக எதிலும் எங்கும் ஒற்றுமையாக செயல்படுகின்றனர் அப்போது இவர்கள் அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் நிலையில், மூவரும் இணைந்து தொழிலதிபர் வேல ராமமூர்த்தியின் பேரனான, 12 வயது சிறுவனை கடத்தி கொடூரமாக கொலை செய்கிறார்கள். அவர்களின் இத்தகைய கொடூர செயலின் பின்னணி என்ன ?
வேலா ராமமூர்த்தி  இந்த மூன்று சிறுவர்கள் எதிர்க்கும் காரணம் என்ன?
ராம் தாயார் இறப்பதற்கு யார் காரணம்?
இந்தக் கேள்விக்கு பதிலாக  பரபரப்பும், விறுவிறுப்பும் நிறைந்த படமாக மட்டும் இன்றி,  புகையிலையால் ஏற்படும் பாதிப்பினை சாமானிய மக்களுக்கும் புரியம்பாடியான விழிப்புணர் படமாக  ‘ராம் அப்துல்லா ஆண்டனி’ திரையில் காண்போரை விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.

ஆண்டனி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கப்பீஸ் பூவையார், ராம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஜய் அர்னால்டு, அப்துல்லா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜூன் ஆகிய மூன்று தங்கள் நடிப்பின் மூலம் திரையில் காண்பவரை மிரள வைத்துள்ளனர். இவர்களின் இழப்பு சமூகத்திற்கு புரியும் படி சொல்வதற்காகவே  (புகையிலை பாக்டீரியன் ஓனர் )வேலா மூர்த்தியின் பேரனை கடத்துகிறார் என்பது படத்தின் முடிவில் சிறப்பாக சொல்லி இருக்கின்றன ராம் அப்துல்லா ஆண்டனி இவர்களின் நட்பின் ஆழம் மற்றும் அதனை வெளிப்படுத்தும் இவர்களது நடிப்பு மிகவும் சிறப்பு.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சாய் தீனா, போலீஸ் கான்ஸ்டபிள் செளந்தரராஜன், தொழிலதிபராக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், ஜாவா சுந்தரேசன், கிச்சா ரவி, வினோதினி வைத்யநாதன், ஹரிதா, ரமா ஆகியோர்   நடிப்பின் மூலம் திரைக்கதைக்கு உயிரூட்டியிருக்கிறார்கள்