தேசியத் தலைவர்’ திரை விமர்சனம்

ஊமை விழிகள் படத்தை இயக்கிய இயக்குநர் ஆர்.அரவிந்த்ராஜ் இயக்கத்தில், எஸ்.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘தேசியத் தலைவர்’ திரைப்படம் உருவாகியிருக்கிறது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கையை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் தேவராக ஜே.எம்.பஷிர் சிறப்பாக நடித்திருக்கிறார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு, தேசிய தலைவர் என்கிற திரைப்படமாக  உருவாகியுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாளான இன்று திரைப்படம் வெளியாகியுள்ளது.

இன்றைய தலைமுறை பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக பாவித்து அதற்கேற்ப செயல்பட்டவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். சுதந்திர போராட்டத்தில் சுபாஷ் சந்திர போஸின் வழியை பின்பற்றியது உள்பட பிற முக்கிய நிகழ்வுகளும் படத்தில் காண்பிக்கப்பட்டுளது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரை குறிப்பிட்ட சமுதாயத்தினர் அவரை கடவுளுக்கு நிகராக மதித்து கொண்டாடுகின்றனர். இவரது வாழ்க்கை வரலாற்று படத்தில் அவரது ஒவ்வொரு சாதனையும் பதிவு செய்யப்பட்டுள்ளது மிக  முக்கியம்.