ஆரியன் திரை விமர்சனம்


ஆரியன் திரைப்படத்தில் இயக்குநர் கே.பிரவீன் திரைக்கதையில் வித்தியாசமாக திரையில் ரசிக்க வைத்துள்ள விதம் மிக சிறப்பு.

ஆரியன் திரைப்படத்தில் நெறியாளராக இருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் (நயினா), அவருடைய நிகழ்ச்சியில் அரசியல்வாதி நேர்காணல் ஏற்பாடு செய்யும் நிலையில் இந்த அரசியல்வாதி புறக்கணிக்க அதனைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சிக்கு பிரபலமாக நடிகரை நேர்காணல் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த நிகழ்ச்சியில்  கலந்து கொள்ளும்  செல்வராகவன் (அழகர் என்கிற நாராயணன்) நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகரை துப்பாக்கியால் காலில் சுடுகிறார். இதனை அந்த தொலைக்காட்சி நேரலை செய்கிறது மற்றும் அந்த நிகழ்ச்சியை நேரில் பார்ப்பவர்களும் உறைந்து போகிறார்கள்.

நேரலை நிகழ்ச்சிக்கு செல்வராகவன் (அழகர் என்கிற நாராயணன்)  ஒரு எழுத்தாளர் என்றும், பத்து வருடமாக ஆராய்ச்சி செய்து   தன்னுடைய படைப்புக்கு மக்கள் மத்தியில் என்றுமே வரவேற்பு கிடைக்கவில்லை என்று கூறுகிறார் செல்வராகவன். இனி வரும் அடுத்த ஐந்து நாட்களில் ஒவ்வொரு கொலைகள் செய்யப்போவதாக கூறி, முதலில் தன்னை தானே சுட்டுக் கொள்கிறார்.
அதே நேரத்தில் தேர்தல் நடைபெற்று வருவதால் உயர் அதிகாரிகள் ஆலோசனையில் இந்த கேஸை விசாரிக்க வருகிறார் கதாநாயகன் விஷ்ணு விஷால் (அறிவுடை நம்பி). செல்வராகவன் சொன்னது போலவே தொடர்ந்து ஒவ்வொரு நாளும், அவர் சொன்ன பெயரில் உள்ள ஒரு நபர் கொலை செய்யப்படுகிறார்.

செல்வராகவன் திட்டமிட்டபடி எப்படி கொலை  நடக்கிறது?
நேரலை நிகழ்ச்சியில் இறந்து போன ஒருவரால் எப்படி தொடர் கொலைகளை செய்ய முடியும்?
செல்வராகவன் ஏன், எதற்காக கொலை    செய்கிறார் என்கிற நோக்கத்தை விஷ்ணு விஷால் கண்டறிந்தாரா
இல்லையா?
இந்த கேள்விக்கு எல்லாம் பதிலே என்பதே ஆரியன் படத்தின் விறுவிறுப்பான கிரைம் த்ரில்லர் திரைகதை.

“ஆரியன் திரையில் கிரைம் த்ரில்லர் திரைகதை நொடிக்கு நொடிக்கு பரபரப்புடன் ஜொலிக்கிறது “