Child-friendly Schools திட்டத்தின் கீழ் Guidehouse நிறுவனம் சென்னையின் ஆலப்பாக்கம் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு 3 வகுப்பறைகளை ஜான் சாட்,மகேந்திர ராவத், வினய் சிங் ஆகியோர் திறந்து வைத்தனர்.

Guidehouse வணிக மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சேவை செய்யும் உலகளாவிய ஆலோசனை, தொழில்நுட்பம், சேவை நிர்வாக நிறுவனம். சமூக முன்னேற்றத்தையும், கல்வி சமத்துவத்தையும் வலியுறுத்தும் நோக்கில் இந்நிறுவனம் சென்னையின் ஆலப்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு (Government Higher Secondary School, Alapakkam – Chennai 116) மூன்று புதிய வகுப்பறைகளை அமைத்து கொடுக்கும் நிகழ்வினை நடத்தியது.

குழந்தைகள் நட்பு பள்ளி (Child-friendly Schools) திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சி, கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும், ஏழ்மையான பின்னணியிலிருந்து வரும் மாணவர்களுக்கு சிறந்த கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்குமான முக்கிய முயற்சியாகும்.
ஆலப்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி தற்போது 746 மாணவர்களும், 493 மாணவிகளும் என மொத்தம் 1,239 மாணவர்கள், கல்வி கற்கும் முக்கிய கல்வி மையமாகும்.

பெரும்பாலான மாணவர்கள் அருகிலுள்ள குடிசைப்பகுதிகளில் இருந்து வருபவர்கள். இங்கு பணியாற்றும் 31 பெண் ஆசிரியர்களும், 10 ஆண் ஆசிரியர்களும், சமூகத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த புதிய மூன்று வகுப்பறைகள் மாணவர்களின் கற்றல் சூழலை மேம்படுத்துவதோடு, குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் ஊக்கமளிக்கும் கல்வி சூழலை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அரசு உயர்நிலைப் பள்ளிக்கு 3 புதிய வகுப்பறைகள் அமைத்துக் கொடுக்கும் இந்த நிகழ்வில், Guidehouse நிறுவனத்தின் தலைமை குழுவினர்
ஜான் சாட் (Jhon Saad) – Guidehouse நிறுவனத்தின் தலைவர் (President),
மகேந்திர ராவத்(Mahendra Rawat)– Guidehouse இந்தியாவின் பார்ட்னரும், இந்திய பிரிவு தலைவர் (Partner and Country Head, Guidehouse India),
வினய் சிங் (Vinay Singh)– Guidehouse நிறுவனத்தின் பார்ட்னரும், ஜிஎம்எஸ் (GMS) பிரிவு தலைவரும் (Partner and Leader for GMS, Guidehouse),
ஜஸ்வந்த் பங்கேரா (Jaswant Bangera),
நவீன்குமார் பாலச்சந்திரன் (Navinkumar Balachandiran),
சாஜி சகரியா (Saji Zacharia),
சிவசங்கரி சங்கரன் (Sivasankari Sankaran),
அருள் சஜின் (Arul Sajin) ஆகியோர் பங்கேற்றனர்.

Guidehouse நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு முயற்சிகளில் இது மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாகும். கல்வி வழியாக சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில் இந்த நிறுவனம் தன்னுடைய பங்கினை பெருமையுடன் நிறைவேற்றி வருகிறது.