பைசன் காளமாடன் திரை விமர்சனம்

1994ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிட்டானுக்கு கிடைக்கிறது. ஆனால் ஜப்பானில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பல மேட்ச்சுகளில் கிட்டானை விளையாடவிடாமல் வேடிக்கை மட்டும் பார்க்க வைப்பதுடன் படம் துவங்கியிருக்கிறது

மனத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் பைசன் காளமாடன்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி(பசுபதி). அவரின் மகன் கிட்டான்(த்ருவ் விக்ரம்). தாழ்ந்த ஜாதியை சேர்ந்த கிட்டானுக்கு கபடி என்றால் மிகவும் பிடித்த ஒன்று ஆனால் சொந்த ஊரிலேயே கிட்டான்  விளையாட அனுமதிக்கவில்லை  மற்றும் அந்த கிராமத்தில் பாண்டியராஜா(அமீர்), கந்தசாமி(லால்) என இரண்டு கோஷ்டி இருக்கிறது. அவர்களின் ஆதரவாளர்களுக்கு பழிவாங்குவது எண்ணம்   உச்சகட்டத்தில் உள்ளது.

இப்படியொரு கிராமத்தை சேர்ந்த கிட்டானுக்கு இந்தியாவுக்காக கபடி விளையாட வேண்டும் என்கிற ஆசை. ஊர் பிரச்சனையில் தலையை கொடுக்காமல் ஒதுங்கி வாழ கிட்டானா அப்பாவுக்கு மிகவும் விரும்பும் அவராசி நிறைவேறியதா?
கிட்டான்  இந்திய கபடி அணியில் சேர்ந்து அவனது கனவு நிறைவேறியதா?
பாண்டியராஜா(அமீர்), கந்தசாமி(லால்) இருவரில் இறுதியில் யார் வென்றார்கள்?
போன்ற கேள்விக்கு பதில் பைசன் திரைப்படத்தின் கதை