ஏ ஐ தொழில் நுட்பத்தில் உருவான ‘ஒரு மாலை நேரத்தில்’ காதல் பாடல் ஆல்பம் வெளியீட்டு விழா!

ஏ ஐ தொழில் நுட்பத்தில் உருவான ‘ஒரு மாலை நேரத்தில்’ காதல் பாடல் ஆல்பம் வெளியீட்டு விழா!
தமிழில் பல முன்னணி  இசையமைப்பாளர்களோடு பணியாற்றியவரும், மலையாளம்,  தமிழ்  உட்பட பல திரைப்படங்களுக்கும் பல ஆல்பம் பாடல்களுக்கும்  இசையமைத்தவருமான புகழ்பெற்ற இசையமைப்பாளர் நவீனீத் சுந்தர், தற்போது முழுக்க முழுக்க ஏ ஐ தொழில் நுட்பத்தில் விஷுவல்களை உருவாக்கி, இசையமைத்துள்ள  சுயாதீன ஆல்பம்  பாடல் “ஒரு மாலை நேரத்தில்”.

புதுமையான முறையில் இன்றைய தலைமுறை ரசிகர்களைக் கவரும் வகையில், உருவாகியிருக்கும் இந்த ஆல்பம் பாடலின் வெளியீட்டு விழா இன்று திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 

முடியும் எனத் தெரியவில்லை. அவர் இந்த வீடியோ செய்து காட்டிய போது, ஏன் ரோஹித் சர்மா வைத்து எடுத்துள்ளாய் எனக்கேட்டேன், இல்லை அது நான் தான் என்றார். அங்கீகாரத்துக்குப் போராடும் ஒரு கலைஞன்  அவனுக்கான தளத்தை அவனே உருவாக்கியதாகத் தான் பார்க்கிறேன். அவர் கூட மியூசிக் செய்வது மிக அற்புதமான அனுபவமாக இருக்கும். அவர் இன்னும் பல உயரத்திற்குச் செல்ல வேண்டும். குமார சம்பவத்திற்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி. அதே ஆதரவை நவனீதிற்கும் தாருங்கள். நன்றி.இயக்குநர் நடிகர் ராகவ் பேசியதாவது:-நவனீத் சார்பாக வந்துள்ள அனைவருக்கும் நன்றி. எல்லோரும் நவனீத்தை அறிமுகப்படுத்தியது பாலாஜி என்றார்கள், பாலாஜுக்கு இவரோடு வேலை செய் என சொன்னது நான் தான். அதற்கு  நவனீத் உடைய திறமை தான் காரணம். நாக் நாக் என நான் ஒரு படம் செய்தேன், அதற்கு நவனீத் செய்த மியூசிக் கேட்டு அசந்துவிட்டேன். நானே மியூசிக் போடுவதால் அவருடன் சொட்டாகுமா என நினைத்தேன் ஆனால் அவர் திறமையில் அசந்துவிட்டேன். அவர் நாம் என்ன கேட்கிறோமோ அதை மிகச்சிறப்பாகத் தருவார். நாமே போதுமென்றாலும் இசை சிறப்பாக வரும் வரை வேலை பார்ப்பார். ஏ ஐ யில் செய்துள்ளார் என்றவுடன் மிக ஆவலாகக் கேட்டேன். ஏ ஐ எல்லோரின் திறமைக்கு ஒரு வரப்பிரசாதம். நவனீத் மிகத்திறமையானவர், நிறைய வெற்றிக்குத் தகுதியானவர். அவரின் இந்த முயற்சி பெரிய வெற்றி பெறட்டும் வாழ்த்துக்கள்.  நன்றி.இசையமைப்பாளரும் புதுமையை உருவாக்குபவருமான நவ்நீத் சுந்தர், தொழில்நுட்பத்தை இசையுடன் ஒருங்கிணைப்பதிலும், கர்நாடக இசையை ஐபாடில் கொண்டு வருவதிலும் தனது முயற்சிகளால் பிரபலமானவர். இவர் தனது புதிய சிங்கிள் ‘ஒரு மாலை நேரத்தில்’ என்ற காதல் பாடலை எழுதி, இசையமைத்து, அதற்கான AI காட்சிகளை உருவாக்கி மிகப் பிரமாண்டமாக வெளியிட்டுள்ளார். இந்த இளமையும் இனிமையும் நிறைந்த காதல் பாடல் வெளியீடு, தமிழ் தனிச்சிறப்பு இசை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.இந்தப் பாடல் நவ்நீத் சுந்தரின் இனிமையான இசையமைப்பில் உருவாக்கப்பட்டாலும், இதன் தனிச்சிறப்பு காட்சியமைப்பில் பயன்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு ஆகும். அதாவது 100% மனிதனால் உருவாக்கப்பட்ட இசையில், 100% காட்சியமைப்புகள் AI தொழில்நுட்பத்தில் செய்யப்பட்டுள்ளன. முதல் முறையாக, AI மூலம் நிலையான கதாபாத்திரங்கள், தெளிவான முகபாவனைகள், மேலும் கலைஞருடன் striking-ஆக ஒத்த தோற்றமளிக்கும் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.இந்த சாதனை கலை மற்றும் தொழில்நுட்பத்தின் ஆக்கபூர்வமான இணைப்பில் ஒரு புதிய அளவுகோலை அமைக்கிறது. இது மனித கலைத்திறனும் செயற்கை நுண்ணறிவும் எவ்வாறு ஒன்றிணைந்து ஒரு புதிய அனுபவத்தை உருவாக்க முடியும் என்பதை நிரூபிக்கிறது. இந்தப் பாடல் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்பட்டது. பாடல் வரிகள்: நவ்நீத் சுந்தர் (தமிழ், இந்தி), கிராந்தி வட்லூரி (தெலுங்கு), தீப்தி நடராஜன் (கன்னடம்).

வெளியீட்டு தகவல்:-ஒரு மாலை நேரத்தில் (தமிழ்), சிரு காலி வேளலோ (தெலுங்கு), ஹனி மோட பானலி (கன்னடம்), ஏக்‌ ஷாம் கீ ராஹ் மே (இந்தி) ஆகியவை அக்டோபர் 2ஆம் தேதி முதல் ஸ்பாட்டிஃபை, ஆப்பில் மியூசிக், யூடியூப் மியூசிக், ஆமேசான் மியூசிக் மற்றும் அனைத்து முக்கிய ஸ்ட்ரீமிங் தளங்களிலும் வெளியாகின்றன. அற்புதமான AI-இயங்கும் காட்சிகள் யூடியூபில் வெளியாகின்றன.நவ்நீத் சுந்தர் பற்றிநவ்நீத் சுந்தர் ஒரு இசையமைப்பாளர், சிறந்த கீபோர்டு கலைஞர் மற்றும் இசையில் புதுமைகளை உருவாக்குவதில் கைதேர்ந்தவர். சர்வதேச அளவில் 3,000-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். ஜியோஷ்ரெட் (GeoShred) செயலி மூலம் கர்நாடக இசையை ஐபாடில் வாசித்த முதல் கலைஞர் என்ற பெருமையுடன், லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனையையும் பெற்றுள்ளார். அவரது நிகழ்ச்சிகளில் ஒன்றை ஏ. ஆர். ரஹ்மான் சமூக ஊடகங்களில் பகிர்ந்து பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.நவ்நீத் சுந்தரின் இசைப்பணிகளில்:-•கமல்ஹாசன் குரலால் விவரிக்கப்பட்டு, விக்னேஷ் சிவன் இயக்கிய செஸ் ஒலிம்பியாட் 2022 ‘தமிழ் மண்’ ஒலி-ஒளி கண்கவர்காட்சிக்கான இசை.•தமிழ்நாடு அரசின் கலைஞர் நூற்றாண்டு பூங்காவின் இசை நீரூற்றுக்கான பின்னணி இசை.•கலைஞர் கருணாநிதியின் சொற்களுக்கு இசையமைக்கப்பட்ட பாடல், நடனக் கலைஞர்களால் கலைஞர் 102வது பிறந்தநாள் விழாவில் மேடையேறியது.•திரைப்படங்கள்: பட்டாம்பூச்சி, நாக் தாக் (தமிழ்), குப்பெடந்த ப்ரேமா (தெலுங்கு), படி (மலையாளம்).•வெப் சீரிஸ்: பாணிபூரி (தமிழ்).•வரவிருக்கும் படம்: லக்கி (தமிழ்).•எவர்கிரீன் ஹிட் “சந்திரசூட” – மலையாள திரைப்படம் கர்மயோகி (2012), 36 மில்லியன் யூடியூப் பார்வைகளைத் தாண்டி, இன்றும் உலகம் முழுவதும் நடனக் கலைஞர்களால் நிகழ்த்தப்படுகிறது