தமிழர் பாரம்பரிய மல்லர் கலையில் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் மாஸ்டர் லாரன்ஸ் !!

மாற்றுத்திறனாளி கலைஞர்களுக்கு வாய்ப்பளியுங்கள் – மாஸ்டர் ராகவா லாரன்ஸ் !!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர், சமூக செயற்பாட்டாளரான மாஸ்டர் ராகவா லாரன்ஸ், சமீபமாக பல சமூகப் பணிகளை, உதவிகளை செய்து வருகிறார். தமிழர் பாரம்பரியமான மல்லர் கலையில் கலக்கும் கை கொடுக்கும் கை மாற்றுத்திறனாளி குழுவினரை ஊக்குவித்து வருகிறார்.

மாஸ்டர் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து பல உதவிகள் செய்து வருவது அனைவரும் அறிந்ததே! அவர் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக கை கொடுக்கும் கை எனும் ஆதரவு அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த அமைப்பில் வாழும் மாற்றுத்திறனாளி குழுவினர் நடனம் முதலான் பலவிதமான திறமைகளில் பல துறைகளில் அசத்தி வருகின்றனர்.

தமிழர்களின் பாரம்பரிய கலையான மல்லர் கம்பம் சாகச கலை நிகழ்விலும் அசத்தி வருகின்றனர். இதுவரையிலும் உடல் வலு கொண்டவர்கள் மட்டுமே பங்கேற்கும் கலையாக இருந்த இந்த கலையில், தற்போது ராகவா லாரன்ஸ் “கை கொடுக்கும் கை” மாற்றுத்திறனாளிகள் குழு அதனை முறையாக கற்றுக்கொண்டு அசத்தி வருகின்றனர். இவர்களை ஊக்குவித்து வரும் ராகவா லாரன்ஸ், கலை நிகழ்ச்சிகளில் இவர்களுக்கு வாய்ப்பளிக்குமாறு வேண்டுகோள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து வெளியான வீடியோ பதிவில்…,

மாஸ்டர் ராகவா லாரன்ஸ் “கை கொடுக்கும் கை” மாற்றுத்திறனாளிகள் குழுவினர் மல்லர் கம்பம் கலையில் அசத்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மாஸ்டர் ராகவா லாரன்ஸ் நம் பாரம்பரிய மல்லர் கம்பம் கலையை முன்னெடுக்கும் இந்த மாற்றிதிறனாளி குழுவினரை ஆதரியுங்கள், உங்கள் வீட்டு நிகழ்ச்சிகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் இவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, தன்னலமற்ற வகையில் பல உதவிகளை செய்து வரும் மாஸ்டர் ராகவா லாரன்ஸை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.