படையாண்ட மாவீரன் திரை விமர்சனம்

வன்னியர் குலத்தின் மற்றொரு மாவீரனாக காடுவெட்டி குருவின்  வாழ்க்கை வரலாறு மற்றும் அவரைச் சுற்றியுள்ள தலைசிறந்த நிகழ்வுகளை உணர்ச்சிகரமாகவும் வரலாற்றுப் பின்னணியில் நிஜங்கள் பேசும் காவியம்   படையாண்ட மாவீரன் திரைப்படம் .
கதை மற்றும் நடிப்பு
இந்த படத்தில் இயக்குநர் வ.கெளதமன் தான் கதாநாயகனாக நடித்து, காடுவெட்டி குருவின் வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களை உணர்ச்சிப்பூர்வமாகவே சித்தரித்துள்ளார். சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன் ஆகியோர் துணை நடிகர்களாக சிறப்பாக நடித்துள்ளனர். கதாபாத்திரங்களும், சண்டைக் காட்சிகளும், உணர்ச்சிக் காட்சிகளும் பாராட்டுகள் பெற்றுள்ளன. இதேசமயம், இந்த படத்தில் கதாநாயகிக்கு சிறப்பாக நடித்துள்ளர்.
தொழில்நுட்பம் மற்றும் இசை
ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை, வைரமுத்துவின் பாடல்கள், சாம் சி.எஸ்.யின் பின்னணிச் இசை – அனைத்தும் படத்திற்கு கூட்டாக இருந்தாலும், சில இடங்களில் இசை மற்றும் பின்னணி இசை சாதாரணமாகவும் பழைய படங்களை நினைவுபடுத்தும் வகையிலும் உள்ளது. ஒளிப்பதிவு மற்றும் தொகுப்பிலும் நல்ல வேலை செய்யப்பட்டுள்ளது திரையில் ரசிக்க வைத்தனர் .

விமர்சனம் – சிறப்புக்கூறுகள் மற்றும் குறைகள்


கதையின் விவரிப்பு, சமூக நோக்கு, காடுவெட்டி குருவின் நிஜமான மனிதர்போன்ற வடிவமைப்பு பாராட்டுபட்டுள்ளது.
சண்டைக் காட்சிகள், உணர்ச்சிகள், கதையின் தன்மை சிறப்பாக இருந்தாலும், சில இடங்களில் இயல்பு தன்மை குறைவு ( வில்லன் நடு வீட்டில் 20 ரவுடிகள் மத்தியில் துண்டு போட்டு தூங்குவது என்பது) இயல்பு தன்மை மீறிய ஒன்று.
இயக்குநரின் முயற்சி சமூக செய்தி வலியுறுத்தும் வகையில் திரையில் ரசிக்கும் படி உள்ளது.


‘படையாண்ட மாவீரன்’ திரைப்படம் சமூக வட்டார வாழ்க்கை, போராட்டங்கள், ஈகோ, தியாகம் ஆகியவற்றை உணர்ச்சிப் பூர்வமாக விவரிக்கும் முயற்சியில் சிறப்பும் குறையும் கலந்த ஒரு படமானது. அதே நேரம், உணர்வு தாக்கமும் எதிர்பார்ப்புக்கும் இடையில் சிக்கிய சிறந்த திரை காவியம் படையாண்ட மாவீரன் திரைப்படம் .