South India Chief’s Association (SICA) சார்பில் 2025 SICA Culninary Olympiad and Food Competition –

சென்னை, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், வேர்ல்டு அசோசியேஷன் ஆஃப் செஃப்ஸ் சொசைடீஸ் – WACS ஆல் அங்கீகரிக்கப்பட்ட, இந்தியாவின் முதல்,
SICA கலினரி ஒலிம்பியாட் 2025 மற்றும் கண்காட்சி இன்று முதல் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தென்னிந்திய செஃப் அசோசியேஷன் (SICA) தனது 7 வது பதிப்பான தொழில்துறையின் மிக முக்கியமான சமையல் நிகழ்வான SICA கலினரி ஒலிம்பியாட் மற்றும் கண்காட்சி 2025 – இல் முதல்நாள் முக்கிய அம்சங்களாக, மூன்று அடுக்கு திருமண கேக், வெண்ணெய்/மார்கரின் சிற்பம், நறுமணப் பொருட்கள், சமையல் குழு சவால்-பஃபே போட்டி (தொகுதி 1), சமையல் குழு சவால்-பஃபே போட்டி (தொகுதி 2), நேரடி கிரியேட்டிவ் ஸ்கில்டு பரோட்டா போட்டி, உணவகம் அல்லது விருந்து மண்டபத்திற்கான தலைசிறந்த தயாரிப்பு ஏற்பாடு, மேகி கோக்கனட் மில்க் பவுடர் வழங்கும், அசல் பாரம்பரிய இந்திய உணவு வகைகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன.
அகார் சர்வதேச உணவு கண்காட்சி 2025 இன் சென்னை மண்டல பதிப்பின் ஒரு பகுதியாக, இந்த நிகழ்ச்சிக்கு இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு (ITPO – INDIA TRADE PROMOTION ORGANIZATION) மற்றும் தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு அமைப்பு (TNTPO – TAMILNADU TRADE PROMOTION ORGANIZATION) ஆகியவை ஆதரவு வழங்கியுள்ளன.
முதற்கட்டமாக, தொழில்முறை போட்டியை அணுகுவதற்கான தொழில்நுட்ப அறிவை ஏற்படுத்தும் வகையில் பேஸ்ட்ரி கலை மற்றும் ஹாட் பிளேட் விளக்கக்காட்சி குறித்த பட்டறைகளை SICA ஏற்கனவே நடத்தியுள்ளது. அதில், செஃப் கில்ட் ஆஃப் லங்காவைச் சேர்ந்த மாஸ்டர் சமையல் பயிற்சியாளரான செஃப் திமுத்து குமாரசிங்கே, இலங்கையைச் சேர்ந்த 4 பேரைக் கொண்ட தனது குழுவுடன் உணவு பூசும் நுட்பங்களின் கலையை நிரூபித்துள்ளார்.
தற்போது நடைபெறும் ஏழாவது பதிப்பின் இன்னொரு முக்கிய அம்சம், இது WACS ஆல் அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் தேசிய போட்டி என்பதோடு, WACS ஆல் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச நடுவர் மன்றம் போட்டிகளை தீர்மானிக்கும் என்பதாகும்.
தென்னிந்தியாவில் 3000 க்கும் மேற்பட்ட சமையல்கலைஞர்கள் மற்றும் மாலத்தீவு, மொரீஷியஸ், இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சமையல் வல்லுநர்கள் இந்த போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
மேலும்,
சமையல் நிறுவனங்கள், ஹோட்டல்கள், பார்கள், உள்ளிட்ட நிறுவனங்களிலிருந்து மூத்த மற்றும் பயிற்சி பெற்ற சமையல் கலைஞர்கள் பங்கு கொள்ளும் இந்த ஒலிம்பியாட்டில்,
மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கான நேரடி சமையல் சவால் போட்டிகள், எக்ஸ்க்ளூசிவ் காக்டெய்ல் மற்றும் மாக்டெய்ல் போட்டிகள், விருந்தோம்பல் தொழிலில் நிலைத்தன்மை மீது கவனம் செலுத்தும் வீட்டு பராமரிப்பு நிபுணர்களுக்கான போட்டிகள் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளன. ஒவ்வொரு நாளும் போட்டிகளின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கப் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.