Sony Liv-ல் ஜூலை 4ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகும் – “தி ஹண்ட்: தி ராஜீவ் காந்தி அசாசினேஷன் கேஸ்”;

*Sannidhanam (P.O) Starring Yogi Babu, Rupesh Shetty, and Varsha Viswanath all set to release in Summer 2025.*
Sony Liv, Applause Entertainment மற்றும் Kukunoor movies ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த திரைப்படம் தான் “தி ஹண்ட்”. இந்திய அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க திருப்பமாக அமைந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ள வெவ்வேறு யதார்த்தக் கதையான “தி ஹண்ட்: தி ராஜீவ் காந்தி அசாசினேஷன் கேஸ்” வெப்சீரிஸ், ஜூலை 4ஆம் தேதி முதல் Sony LIV தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

தேசிய விருது வென்ற இயக்குநர் நாகேஷ் குக்கனூர் இயக்கியுள்ள இந்த வெப்சீரிஸ், பத்திரிகையாளர் அனிருத்ய மித்ரா எழுதிய பேஸ்ட் செல்லிங் புத்தகமான ‘Ninety Days’-ஐ அடிப்படையாகக் கொண்டது. அவரது நேரடி விசாரணை அனுபவங்களைத் தழுவி உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், உளவுத்துறை தோல்விகள், இருண்ட அரசியல் உறவுகள், தர்மத்தின் பெயரில் மனித இழப்புகள் ஆகியவற்றை சுவாரசியமான வகையில் ஆராய்கிறது.

இத்திரைப்படத்தின் திரைக்கதை, ரோஹித் பனாவாலிகர் மற்றும் ஸ்ரீராம் ராஜன் ஆகியோருடன் இணைந்து எழுதப்பட்டுள்ளது.

நடிகர்கள் மற்றும் அவர்களின் பாத்திரங்கள் :

• அமித் சியால் – டி.ஆர். கார்த்திகேயன் (SIT தலைமை அதிகாரி)
• சாஹில் வைத் – அமித் வர்மா (SP – CBI)
• பகவதி பெருமாள் – ரகோத்தமன் (DSP – CBI)
• டேனிஷ் இக்பால் – அமோத் காந்த் (DIG – CBI)
• கிரிஷ் சர்மா – ராதாவினோத் ராஜு (DIG – CBI)
• வித்யுத் கார்க் – கேப்டன் ரவீந்திரன் (NSG கமாண்டோ)

மேலும், ஷஃபீக் முஸ்தபா, அஞ்சனா பாலாஜி, பி. சாய் தினேஷ், ஷ்ருதி ஜெயன், கவுரி மேனன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இது ஒரு யதார்த்தத்தை அடிப்படையாக கொண்ட, உணர்ச்சியையும் உண்மையையும் ஒருசேரக் கொண்டுவரும் ஆழமான அரசியல் திரில்லர் படம்.

🔗 டிரெய்லர் லிங்க்: https://youtu.be/wVtvUTbYZR0?si=BqIGZr7E1B0n1t-9

📌 “தி ஹண்ட்: தி ராஜீவ் காந்தி அசாசினேஷன் கேஸ்” – ஜூலை 4ஆம் தேதி முதல் Sony LIV-இல் மட்டும்!
#TheHunt #RajivGandhiCase #SonyLIVOriginals