Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2024
  • ஜாம திரை விமர்சனம்

ஜாம திரை விமர்சனம்

admin August 2, 2024
ஜாம திரை விமர்சனம்-indianstarsnow.com

ஜாம திரை விமர்சனம்-indianstarsnow.com

திருவண்ணாமலையின் நயகனாக இயக்குனராக ஜொலிக்கும் பாரி இளவழகன் தனது முதல் படைப்பில் தனது ஊருக்கு பெருமைசேர்த்துள்ளார் என்றல் அது மிகையாகாது இன்று முதல் ஜாம திரைப்படம் திரையரங்கில் தீப ஒளியாக ஜொலிக்கிறது ….

லர்ன் அன்ட் டீச் புரொடக்ஷன்ஸ் சார்பில் சாய் தேவானந்த் எஸ், சசிகலா எஸ், சாய் வெங்கடேஸ்வரன் எஸ் தயாரித்து பிக்சர் பாக்ஸ் கம்பெனி அலெக்சாண்டர் வெளியிடும் “ஜமா படத்தை திருவண்ணாமலை (மாவட்டம் )பள்ளிகொண்டாப்பட்டுவை சேந்த பாரி இளவழகன் தனது பாரம்பரிய கலையை திரைகதையாக வெள்ளி திரைக்கு எழுதி இயக்கி உலகம் முழுவதும் திரையரங்கில் தீப ஒளியாக ஜொலிக்க வைத்துள்ளார் பாரி இளவழகன்”.

இப்படத்தில் அம்மு அபிராமி, சேத்தன், பாரி இளவழகன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், ‘வடசென்னை’ புகழ் மணிமேகலை, வசந்த் மாரிமுத்து மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை-இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு- கோபி கிருஷ்ணா, பிஆர்ஒ-டிஒன் சுரேஷ்சந்திரா.

திருவண்ணாமலையில் ராமச்சந்திரா நாடக சபாவில் நாட்டுப்புற கலையான தெருக்கூத்தில் பதினாறு கலைஞர்களை வைத்து மகாபாரதம், வள்ளி திருமணம், அரிச்சந்திரா போன்ற இதிகாசங்களை மையப்படுத்தி தாண்டவம் (சேத்தன் கடம்பி) ஜமாவை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இதில் இளம் கூத்து கலைஞரான கல்யாணம் (பாரி இளவழகன்) பெண் வேடங்களான திரௌபதி, குந்தி தேவி மற்றும் பல பெண்கள் கதாபாத்திரத்தில் நடிப்பவர். முன்பு கல்யாணத்தின் தந்தை இளவரசு(ஸ்ரீ கிருஷ்ண தயாள்) அம்பலவானன் நாடக சபா என்ற ஜமாவை தொடங்கி முதன் முதலில் வழி நடத்தியவர் என்ற பெருமையுடன் தன் நண்பர்களுடன் தாண்டவத்தையும் சேர்த்து கொண்டு அந்த கிராமத்தில் ஜமாவை நடத்தியவர்கள். ஜமாவில் இளவரசுவின் ஆதிக்கத்தையும் வளர்ச்சியையும் பிடிக்காமல் போக கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்று தனியாக ஜமாவை நடத்துகிறார் தாண்டவம். இளவரசுக்கு தெருக்குத்து நடக்க நண்பர்கள் ஆதரவு கொடுக்காமல் போக்காக அதனை நினைத்து மதுவுக்கு அடிமையாகி மனஉளைச்சலில் இறந்து விடுகிறார். இருந்தாலும் கல்யாணம் கூத்துக் கலையின் மேல் இருக்கும் ஈர்ப்பால் விரோதி என்றாலும் தாண்டவனின் ஜமாவில் சேர்ந்து நடித்து வருகிறார். இளமை பருவத்திலிருந்தே கல்யாணம் தாண்டவனின் மகளான ஜகதாம்பாளை (அம்மு அபிராமியை) விரும்புகிறார். ஜகாவின் படிப்பிற்காக கல்யாணம் தாண்டவனின் ஜமாவில் பெண் வேடமிட்டு நடித்து பணத்தை அனுப்பி வருகிறார். கல்யாணத்திற்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படும் தாய் (கேவிஎன் மணிமேகலை) தாண்டவத்திடம் பெண் கேட்டு போய் அவமானப்பட்டு திரும்புகிறார். இதனால் தாண்டவத்தின் மகள் ஜகாவை நிராகரிக்கும் கல்யாணம், எப்படியாவது தெருக்கூத்தில் தன் தந்தை இளவரசு ஏற்ற அர்ஜூனன் வேடம் கட்டி நடிக்க வேண்டும் என்ற தீராத ஆசைவும், தனியாக ஜமா நடத்தி தன் தந்தையின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற கொள்கையுடன் வாழ்கிறார். ஆனால் தாண்டவம் தொடர்ந்து கல்யாணத்தை அவமானப்படுத்தி, பெண் வேடங்களையே தருகிறார். இதனால் கல்யாணம் நிலத்தை விற்று புதிய ஜமாவை தொடங்க ஏற்பாடுகள் செய்ய அதற்கு உடனிருக்கும் தெருக்கூத்து கலைஞர்கள் ஒத்துழைப்பு தராமல் போக, பணம் பறிபோக, கல்யாணத்தின் தாயும் அதிர்ச்சியில் இறந்து விடுகிறார். அதன் பின் கல்யாணம் தனி நபராக இருந்து தன் லட்சியத்தை நிறைவேற்றினாரா? அவமானங்களை கடந்து அர்ஜுனன் வேடம் போட்டு தன் திறமையை நிரூபித்தாரா? இந்த கேள்விக்கு எலாம் பதில் தான் இந்த ஜமா வெள்ளி திரையில் ஜொலித்துக்கொண்டுயிருக்கிறது…

Post navigation

Previous பேச்சி திரை விமர்சனம்
Next டெட்பூல் & வோல்வரின்’ திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ. 113.23 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டியுள்ளது!*

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் (PMJ JEWELS) கோ ஓட், கெட் இன்க்ட் (GO VOTE. GET INKED) என்ற பிரத்யேக சலுகை மூலம் ரூ.5000 உடனடி தள்ளுபடி அறிவித்துள்ளது
  • News

தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் (PMJ JEWELS) கோ ஓட், கெட் இன்க்ட் (GO VOTE. GET INKED) என்ற பிரத்யேக சலுகை மூலம் ரூ.5000 உடனடி தள்ளுபடி அறிவித்துள்ளது

April 26, 2026
பேட்டில் திரை விமர்சனம்
  • Movie Review
  • Reviews

பேட்டில் திரை விமர்சனம்

April 25, 2026
’பிரேக்ஃபாஸ்ட் திரை விமர்சனம்
  • Movie Review
  • Reviews

’பிரேக்ஃபாஸ்ட் திரை விமர்சனம்

April 25, 2026
நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்
  • News

நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்

April 24, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.