Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
பேச்சி திரை விமர்சனம்-indiastarsnow.com

பேச்சி திரை விமர்சனம்

Posted on August 2, 2024

பகலில் நடக்கும் சம்பவங்களை வைத்துக்கொண்டு இரண்டு மணி நேரம் ரசிகர்களை மிரள வைத்திருக்கும் இந்த பேச்சி நீண்ட வருடங்களுக்குப் பிறகு திகில் பட ரசிகர்களுக்கு ஏற்ற விருந்தாக அமைந்திருக்கிறது.

காயத்ரி, ப்ரீத்தி நெடுமாறன், தேவ் ராம்நாத், ஜனா, மகேஷ் ஆகிய ஐந்து பேரும் கொல்லிமலையில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் டிரக்கிங் செல்கிறார்கள். பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பாலசரவணன் வழிகாட்டுவதற்காக அவர்களுடன் செல்கிறார். அவர்கள் செல்லும் வழியில் “இது தடை செய்யப்பட்ட பகுதி” என்ற பலகை ஒன்று இருக்கிறது, அதை பார்த்ததும் நண்பர்கள் அந்த பகுதிக்குள் நுழைய முயற்சிக்கிறார்கள். அவர்களை தடுத்து நிறுத்தும் பாலசரவணன், அது ஆபத்தான இடம் என்று எச்சரிக்கிறார். அவரது எச்சரிக்கையையும் மீறி அந்த இடத்திற்குள் நுழையும் நண்பர்கள் எதிர்பார்க்காத பல பயங்கரமான சம்பவங்களை சந்திக்கிறார்கள்.

இது பேச்சியின் செயல் என்பதை அறிந்துக்கொண்டு, எஞ்சியிருப்பவர்களையாவது காப்பாற்றலாம் என்ற முயற்சியில் ஈடுபடும் பாலசரவணன், அதில் வெற்றி பெற்றாரா?, பேச்சி என்பவர் யார்? கொல்லிமலையில் தொடர் கொலைக்கான கரணம் போன்ற கேள்விக்கு பதில் தான் இந்த பேச்சி திரைப்படத்தின் பேய் கதறலுடன் சொல்வதே படத்தின் கதை.

தமிழ் சினிமாவில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு முழுமையான திகில்

அனுபவத்தை கொடுக்கும் விதமாக வெளியாகியிருக்கும்

இந்த ‘பேச்சி’ நிச்சயம் ரசிகர்களை பேச வைக்கும்.

மொத்தத்தில், இந்த ‘பேச்சி’ பேய் அல்ல என்றாலும், பேயை

காட்டிலும் அதிகம் மிரள வைத்து ரசிகர்களை அலற விடுகிறது.

பி.ஆர்.ஒ.தர்மா,சுரேஷ்,

  • ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்கமல்ஹாசன்பெருமையுடன் வழங்கும்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும்”தர்மன்”இயக்கம்: அஸ்வத் மாரிமுத்து
  • சிங் கீதம் திரை விமர்சனம்
  • அந்தரன் திரை விமர்சனம்
  • அனந்தன் காடு திரை விமர்சனம்
  • *கோபம், வஞ்சம், வெற்றி – மனதின் போராட்டத்தை சொல்லும் “வஞ்சம் தீர்” பாடல்!*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme