’சாமானியன்’ திரை விமர்சனம்

’சாமானியன்’ திரை விமர்சனம்-indiastarsnow.com

சாமானியன் திரைக்கதை தொடக்கத்தில் சங்கரநாராயணன் (ராமராஜன்) தன் நண்பர் மூக்கனுடன் (எம்.எஸ்.பாஸ்கர்), சென்னையில் உள்ள அவர்களின் நண்பர் ஃபஸில் பாய்யின் (ராதாரவி) வீட்டிற்கு விருந்தினர்களாக வருகிறார்கள். பாயின் வீட்டு அருகில் ஒரு வங்கியில் உதவி மேலாளர் மற்றும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் (கஜராஜ்) ஆகியோர் குடி இருக்கிறார்கள். ஃபஸில் பாய் அந்த பகுதியில் உள்ள அனைவரிடமும் நட்பாக பயகி வருகிறார் . அக்கம்பக்கத்தினருக்கு தன் நண்பர்கள் சங்கர நாராயணன் மற்றும் மூக்கனை அறிமுகம் செய்து, சங்கரநாராயணன் தனது பேத்தியின் பிறந்த நாளை கொண்டாட ஊருக்கு வந்திருப்பதாக அவர்களிடம் கூறுகிறார். மறுநாள், தியாகராயர் நகரில் உள்ள வங்கி ஒன்றுக்கு போகும் சங்கர நாராயணன், வெடிகுண்டும் துப்பாக்கியையும் காட்டி மிரட்டி, வங்கி ஊழியர்களையும் வாடிக்கையாளர்களையும் பிணைக் கைதிகளாக பிடித்து அவர் வங்கியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார். அதை அடுத்து காவல்துறை வங்கியை சுற்றி வளைத்து மக்களை காப்பாற்ற போராடுகிறது. மறுபுறம், அவ்வங்கி கிளையின் மேலாளரின் வீட்டை மூக்கையனும், துணை மேலாளர் வீட்டை ஃபாஸில் பாயும் துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக பிடித்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். சங்கரநாராயணன், மூக்கன, ஃபஸில் பாய், இவர்கள் மூவரும் ஏன் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்? சங்கரநாராயணன் (ராமராஜன்) வங்கியில் பிணைக்கைதிகளாக பிடிக்க கரணம் என்ன ? சங்கரநாராயணன் (ராமராஜன்) மூக்கனுடன் (எம்.எஸ்.பாஸ்கர்), ஃபஸில் பாய்யின் (ராதாரவி) மூவருக்குமான நடப்பு போன்ற கேள்விக்கு பதிலே சாமானியன் படத்தின் திரைக்கதை.

ராமராஜன் கிட்டத்தட்ட 13 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சாமானியன் மூலம் சங்கரநாராயணன் (ராமராஜன்) சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்வில் சந்திக்கும் முக்கிய பிரச்சனையை பேசும் கதைகளத்தில் சாதாரண மனிதனாக மீண்டும் தனது மறுபிரவேசத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

ராதாரவி மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் இருவரும் எப்போதும் போல் நேர்த்தியான நடிப்பு தந்து திரையில் ரசிக்க வைத்துள்ளார் .

போஸ் வெங்கட், மைம் கோபி, கே.எஸ்.ரவிக்குமார், சரவணன் சுப்பையா, நக்ஷா சரண், லியோ சிவக்குமார், வினோதினி, தீபா சங்கர், ஸ்ம்ருதி வெங்கட், அப்ரநதி, அறந்தாங்கி நிஷா, சரவணன் சக்தி, கஜராஜ், முல்லை, அருள் மணி, கோதண்டம், சூப்பர் குட் சுப்பிரமணி உட்பட அனைத்து துணை கதாபாத்திரங்களும் திரையில் சிந்திக்கவும் ரசிக்கவும் வைத்துள்ளார் .

இசை – பாடல் வரிகள் இளையராஜா, ஒளிப்பதிவாளர் : சி அருள் செல்வன், எடிட்டர் : ராம் கோபி, கதை : வி கார்த்திக் குமார், ஆடை : எஸ்பி சுகுமார், நடன இயக்குனர் : விஷ்ணுவிமல், ஏகுஓ மற்றும் ஊபு : பிரவீன் லியோனார்ட், ஒலி வடிவமைப்பாளர் : அருண் மணி என அனைவரின் பணி மிகவும் சிறப்பு .

வங்கியில் கடன் வாங்கி வீடு வாங்குவதில் உள்ள ஆபத்துகள் குறித்தும், கடன் வாங்கிய பின், தவணையை சரியாக கட்டாத போது அவர்கள் சந்திக்கும் இன்னல்கள், அவமானங்கள் ,உயிர் இழப்புகள் உட்பட பல பிரச்சனைகளை சாதாரண மக்களுக்கும் புரியும் படியாக திரைக்கதை அமைத்து அதில் விறுவிறுப்பையும், எமோஷனையும் கலந்து அனைவரும் சிந்திக்கும் படி இயக்குனர் ராஹேஷ் திரையில் கொடுத்துள்ளது சிறப்பு .