Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
அங்காரகன் திரை விமர்சனம்

அங்காரகன் திரை விமர்சனம்

Posted on September 9, 2023

குறிஞ்சி மலை வனப்பகுதியில் உல்லாச தாங்கும் விடுதியில் தம்பதியான நாயகன் ஸ்ரீபதி – நாயகி நியா மற்றும் மேலும் பல விருந்தினர்கள் தங்குகிறார்கள். பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த தாங்கும் விடுதியில் இருக்கும் ராணி பங்களா மட்டும் பயனற்றுஇருக்கும் பூட்டியே இருக்கும் நிலையில், உல்லாச தாங்கும் வெடுத்தியிலின் புதிய மேலாளரான அங்காடி தெரு மகேஷ், அந்த அறையை திறந்து சுத்தப்படுத்தி, அதில் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்கிறார். அந்த விருந்து முடிந்த பிறகு அங்கிருந்த சில பெண்கள் மாயமாகி விடுவதோடு, நாயகன் ஸ்ரீபதியும், மற்றொரு விருந்தினரும் அடித்துக்கொள்கிறார்கள். விசாரிக்க போலீஸ் அதிகாரியான சத்யராஜ் மற்றும் காவல் துறையினர் அங்கு வருகிறார்கள்.அங்கே தங்கியுள்ள ஒவ்வொருவரிடமும் விசாரிக்கும் போது ஒவ்வொரு கதை சொல்கிறார்கள். மேலும் அந்த விடுதியில் அமானுஷ்ய சக்தி ஒன்று பயமுறுத்துகிறது.

அதிவீரபாண்டியன் கதாபாத்திரத்தில் வருகிற சத்யராஜ் தனது அனுபவ நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்துகிறார் .புதுமுகம் நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீபதி நடிப்பு, ஆட்டம், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்திலும் திரையில் ரசிக்கும் படியாக உள்ளது,நாயகியாக நியா மிக நேர்த்தியாக நடித்திருக்கிறார். அங்காடித்தெரு மகேஷ், அப்புக்குட்டி, கே.சி.பிரபாத், ரெய்னா காரத் ஆகியோர் நடிப்பு திரையில் ராசிக்கு படியாக உள்ளது.

கதையின் பெரும் பகுதி இரவில் நடப்பதால் அந்தப் பகுதி காட்சிகளை நன்றாக ஒளிப்பதிவு செய்துள்ளார் இயக்குனர் மோகன் டச்சு. ரசிகர்களை தரையில் பயமுறுத்த முயற்சி வெற்றிப்பெற்றுள்ளது, கு.கார்த்தியின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு திரையில் ரசிக்கவைக்கிறது .

  • நகைச்சுவையுடன் வலுவான சமூக கருத்தை முன்வைக்கும் பொழுதுபோக்கு திரைப்படமான ‘நல்லபடம்’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!
  • Nallapadam’ Set to Hit Screens on September 18; A Socio-Commercial Entertainer Blending Humour with a Strong Social Message
  • பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது” – ஜிதின் குலாட்டி
  • DAC Developers Launches Balmandaisa
  • அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர் திரைப்படத்திற்கான ஐமேக்ஸ், மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி விஷன் உள்ளிட்ட பிரீமியம் திரையிடலுக்கான முன்பதிவு தொடங்கியது! மேலும், ரசிகர்களுக்கு ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் பிரத்யேக காட்சியும் திரையிடப்படும்!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme