Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
ரெட் சாண்டல் வுட் திரை விமர்சனம்

ரெட் சாண்டல் வுட் திரை விமர்சனம்

Posted on September 9, 2023

சென்னை வியாசார்பாடியில் வசித்துவரும் நாயகன் வெற்றி, இவரது நண்பர் விஸ்வநாத் படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறார். எவ்வளவு முயற்சி செய்தும் வேலை கிடைக்காததால் அவரது தந்தை உறவின ர் வீட்டிற்கு விஸ்வநாத்தை அனுப்பி வைக்கிறார். ஒரு நாள் விஸ்வநாத் காணாமல் போகவே அவரது உறவினர் விஸ்வநாத்தின் தந்தைக்கு போன் செய்து அவர் திருப்பதி சேஷாச்சலம் காடுக்கு செம்மர கடத்தலுக்கு சென்று விட்டதாக கூறுகிறார்.

எதிர்பாராத விதமாக விஸ்வநாத்தின் தந்தைக்கு விபத்துஏற்படுகிறது அவர்தனது மகன் நினைவாகவுள்ளதால் வெற்றி தனது நண்பனை தேடி திருப்பதிக்கு செல்கிறார் அப்போது வியாசார்பாடியில் உள்ள காவல்நிலையத்தில் தான் நண்பனை தேடி ஆந்திரா போவதாக முதல் அறிக்கை கொடுத்துவிடு செல்கிறார் வெற்றி. அப்போது ஆந்திராவில் அவரை செம்மரம் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர் என்று நினைத்து போலீஸ் கைது செய்து, ஒரு இடத்தில் எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் இருக்க, அவர்கள் வறுமை காரணமாக தோட்ட வேலைக்காக திருப்பதிக்கு வந்து செம்மரக்கடத்தலில் சிக்கிக்கொண்டதை வெற்றி அறிந்துக் கொள்கிறார். இதற்கிடையே, வெற்றி உள்ளிட்ட தமிழர்களை கொலை செய்ய ஆந்திர போலீஸ் உயர் அதிகாரி திட்டம் போட, அவரிடம் இருந்து வெற்றி மற்றும் நண்பன் விஸ்வநாத்தின் உடனிருந்தவர்கள் தப்பித்தார்களா என்பதே ரெட் சாண்டல் வுட் திரை கதை.

ரெட் சாண்டல் வுட் திரை கதையில் நடித்திருக்கும் கே.ஜி.எப் ராம், நாயகியாக நடித்திருக்கும் தியா மயூரிக்கா, மாரிமுத்து, கணேஷ் வெங்கட்ராமன், இளவரசு, கபாலி விஷ்வந்த், ரவி வெங்கட்ராமன், மெட்ராஸ் வினோத், வினோத் சாகர், சார்லஸ் வினோத் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் திரையில் தங்களது நடிப்பை சிறப்பாக கொடுத்துள்ளார்.

செம்மரக்கடத்தல் பின்னணியில் இருக்கும் அரசியலால் அப்பாவி தமிழர்கள் எப்படி கொள்ளப்படுகிறார்கள் என்பதை திரையில் மிக தைரியமாக சொல்லியிருப்பதோடு, அதை மண உருக்கமான படமாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குநர் குரு ராமானுஜம்.

திருப்பதி வனப்பகுதியின் அழகையும், ஆபத்தையும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா, இரவு நேர காட்சிகளை சிறப்பாக படமாக்கியிருக்கிறார். சாம் சி.எஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.

  • நகைச்சுவையுடன் வலுவான சமூக கருத்தை முன்வைக்கும் பொழுதுபோக்கு திரைப்படமான ‘நல்லபடம்’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!
  • Nallapadam’ Set to Hit Screens on September 18; A Socio-Commercial Entertainer Blending Humour with a Strong Social Message
  • பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது” – ஜிதின் குலாட்டி
  • DAC Developers Launches Balmandaisa
  • அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர் திரைப்படத்திற்கான ஐமேக்ஸ், மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி விஷன் உள்ளிட்ட பிரீமியம் திரையிடலுக்கான முன்பதிவு தொடங்கியது! மேலும், ரசிகர்களுக்கு ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் பிரத்யேக காட்சியும் திரையிடப்படும்!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme