Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது

இராக்கதன் திரை விமர்சனம்

Posted on July 24, 2023

மருதம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் எம்.ஏ.ஜி.பாஸ்கர் மற்றும் ராணி ஹென்றி சாமுவேல் தயாரிப்பில் இளம் இயக்குனர் தினேஷ் கலைசெல்வன் இயக்கிய திரைப்படம் இராக்கதன்.

இதில் வம்சி கிருஷ்ணா, ரியாஸ் கான், விக்னேஷ் பாஸ்கர், தினேஷ் கலைச்செல்வன், நிழல்கள் ரவி, காயத்ரி ரேமா , சஞ்சனா சிங், சாம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:-

மானஸ் பாபு ஒளிப்பதிவு,
கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு,
பிரவீன் குமார் இசை,
பாடல்கள் பாபு கிறிஸ்டியன் மற்றும் இயக்குனர் தினேஷ் கலைசெல்வன்,
இன்ப பிரகாஷ் கலைப் படைப்பு,ஸ்டண்ட் இயக்குனர் சரவெடி சரவணன்,
தண்டாயுதபாணி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்,
பிஆர்ஒ :நிதிஷ் ஸ்ரீராம், ஜான் நரேஷ்.

இன்றைய இளைஞர்கள் மத்தியில் மாடலிங் துறையின் மோகம் கொடி கட்டிப்பறக்கிறது அதேபோல் சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் மாடலிங் இந்த படம் மிகப்பெரிய விழிப்புணர்வு படமாக அமைந்துள்ளது . மாடலாக இருக்கும் அர்ஜுனைச் சுற்றியே படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. பெண்கள் மாடலிங் துறையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி அறிந்திருந்தாலும் வித்தியாசமாக கவர்ச்சி துறையில் ஆர்வமுள்ள ஆண் மாடல்கள் எதிர்கொள்ளும் சுரண்டலையும், விபச்சாரம், போதைப்பொருள் மற்றும் பிற சட்டவிரோத செயல்களுக்கு வழிவகுக்கும் வலைகளில் விழுவதையும் படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மாடலிங் வாழ்க்கையில் சில தவறான வழிகாட்டுதல் பாதையில் சென்றால் நரகமாகிவிடும் என்பதை உணர்த்தும் படம் இராக்கதன். திரைக்கதைக்கு பக்கபலமாக மெல்லிய காதல் உணர்வுகள், நட்புகள், மோதல்கள் போன்றவற்றை திரையில் ரசிக்கும்படி திரைக்கதை அமைநதுள்ளது .

வில்லனாக நடித்து வந்த வம்சி கிருஷ்ணா, போலீஸ் அதிகாரியாக முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். காக்கி உடை அணியவில்லை என்றாலும் சிறப்பு அதிகாரியாக நடிப்பில் காவல்துறையின் கம்பீரத்தை நேர்த்தியாக திரையில் ரசிக்கும்படி திரைக்கதை அமைநதுள்ளது .

அர்ஜூன், அலெக்ஸ், அனன்யா மூவரும் சிறு வயது முதலே நண்பர்கள். இதில் அர்ஜூனும் அனன்யாவும் காதலிக்கிறார்கள். அர்ஜூன் மாடலாக வேண்டும் என்பதே கனவு லட்சியமாக இருக்கிறார். இவரின் லட்சியம் நிறைவேறாமல் போக தனது சகோதரியின் திருமணத்திற்காக முடிந்த வேலைகளை செய்தாலும் நாட்டமில்லாமல் இருக்கிறார். இதனிடையே மாடலிங் பயிற்சி அளிக்கும் ஏஜேன்சியில் அழைப்பு வர மகிழ்ச்சியாக சென்னைக்கு பயணமாகிறார்.அங்கே ஏஜென்சி மேனேஜர்ஆஸ்டின் அர்ஜூனை பயிற்சிக்கு சேர்த்துக் கொள்கிறார்.

சென்னையில் அர்ஜூனை பார்ப்பதற்காக அலெக்ஸ் மற்றும் அனன்யா ஏஜென்சிக்கு வருகின்றனர். ஆனால் அர்ஜூனை பார்க்க முடியாமல் தவிக்கும் அனன்யாவை ஹோட்டல் அறைக்கு அனுப்பி விட்டு அலெக்ஸ் அர்ஜூனை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று உள்ளே செல்கிறார். மறு நாள் காலையில் அர்ஜூன்,ஆஸ்டின் கொலை செய்யப்பட்டு இறந்து கிடக்க, அலெக்ஸ் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். இந்த கொலைகளை விசாரிக்க இன்ஸ்பெக்டர் அஜ்மல் நியமிக்கப்படுகிறார். இவரின் தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அர்ஜூனைப் பற்றியும், ஆஸ்டினைப்பற்றியும் தெரிந்து கொள்கிறார்.

ரியாஸ் கான், மாறுபட்ட வேடத்தில் பாராட்டும்படி நடித்திருக்கிறார். அவரது வேடம் மட்டும் இன்றி அவரது அனுபவம் வாய்ந்த நடிப்பும் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.நிழல்கள் ரவி, சாம்ஸ், சஞ்சனா சிங் என படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள்.மானஸ் பாபுவின் ஒளிப்பதிவு எளிமையாக இருந்தாலும் கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது. பிரவீன் குமாரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.

மாடலிங் துறையில் கருப்பு பக்கங்களை மிக தைரியமாக காட்சிப்படுத்தி , அதைப் பற்றிய தகவல்களை வைத்து மட்டுமே திரைக்கதை அமைக்காமல், க்ரைம் த்ரில்லர் ஜானரில் காதல் மற்றும் நட்பு சேர்த்து முழுமையான கமர்ஷியல் படமாக திரையில் ரசிக்கவைக்கிறார் இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன் .

  • விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு
  • சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!
  • Allu Arjun Expands His Entertainment Empire with the Grand Launch of AAA Cinemas in Vizag
  • விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!
  • குட்வில் என்டர்டெயின்மென்ட்ஸின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் இணைந்த முரளி ஷர்மா…அவரது பிறந்தநாளில் அறிவிப்பு வெளியிட்ட படக்குழு!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme