Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2023
  • டாக்டர் சிவராஜ் குமார், கார்த்திக் அத்வைத், சுதீர் சந்திர பாதிரியின் புதிய திரைப்படம் ‘சிவண்ணா எஸ்சிஎஃப்சி01’ (#ShivannaSCFC01) பான் இந்தியா படமாக உருவாகிறது

டாக்டர் சிவராஜ் குமார், கார்த்திக் அத்வைத், சுதீர் சந்திர பாதிரியின் புதிய திரைப்படம் ‘சிவண்ணா எஸ்சிஎஃப்சி01’ (#ShivannaSCFC01) பான் இந்தியா படமாக உருவாகிறது

admin July 13, 2023
சுதீர் சந்திர பாதிரியின் புதிய திரைப்படம் 'சிவண்ணா எஸ்சிஎஃப்சி01' (#ShivannaSCFC01) பான் இந்தியா படமாக உருவாகிறது

சுதீர் சந்திர பாதிரியின் புதிய திரைப்படம் 'சிவண்ணா எஸ்சிஎஃப்சி01' (#ShivannaSCFC01) பான் இந்தியா படமாக உருவாகிறது

கன்னட சூப்பர்ஸ்டாரின் அடுத்த படத்தை இயக்கும் இளம் தமிழ் இயக்குநர்

சிவண்ணா என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் கன்னட சூப்பர்ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சுதீர் சந்திர பாதிரியுடன் புதிய திரைப்படத்திற்காக இணைந்துள்ளார். சிவராஜ் குமாரின் பிறந்தநாளான இன்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கான்செப்ட் போஸ்டர் ஒன்றின் மூலம் வெளியிடப்பட்டது.

தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் எஸ்சிஎஃப்சியின் (சுதீர் சந்திரா பிலிம் கம்பெனி) இந்த பான் இந்தியா திரைப்படத்தை விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தைத் இயக்கிய கார்த்திக் அத்வைத் இயக்குகிறார்.

‘சிவண்ணா எஸ்சிஎஃப்சி01’ (#ShivannaSCFC01) என்று அழைக்கப்படும் இத்திரைப்படம் அதிக பொருட்செலவில் வலுவான தொழில்நுட்ப கூட்டணியுடன் உருவாகிறது. ‘விக்ரம் வேதா’ மற்றும் ‘கைதி’ புகழ் சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

இன்று வெளியிடப்பட்டுள்ள டாக்டர் சிவராஜ் குமாரின் கான்செப்ட் போஸ்டர் மூலம் இத்திரைப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் என்பது அறிய முடிகிறது. சிவராஜ் குமாரின் கெட்டப்பும் போஸ்டர் வடிவமைப்பும் படம் பற்றிய ஆர்வத்தை உருவாக்குகிறது.

தென்னிந்திய திரைப்பட துறையை சேர்ந்த பிரபல நடிகர்கள் இப்படத்தில் நடிக்க உள்ளார்கள். இது குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

நடிகர்கள்: டாக்டர் சிவராஜ் குமார்

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம்: கார்த்திக் அத்வைத்
தயாரிப்பாளர்: சுதீர் சந்திர பாதிரி
பேனர்: எஸ் சி எஃப் சி (சுதீர் சந்திரா பிலிம் கம்பெனி)
இசை: சாம் சிஎஸ்
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

Post navigation

Previous யுவன் சங்கர் ராஜா மற்றும் சிலம்பரசன் டி.ஆர்.யை வைத்து இசை நிகழ்ச்சி நடத்தும் கார்த்திக் இளம்வழுதி, கவிதா சுகுமார்
Next Kannada superstar Dr. Shivaraj Kumar aka Shivanna signed a new film with a Telugu producer and it has been announced officially on the actor’s birthday through a concept poster

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*
  • News

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

April 21, 2026
*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*
  • News

*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*

April 21, 2026
*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*
  • News

*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*

April 21, 2026
JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*
  • News

JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*

April 21, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.