Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
எறும்பு திரை விமர்சனம்

எறும்பு திரை விமர்சனம்

Posted on June 15, 2023

தொலைத்த மோதிரத்தை மீட்க எறும்பு போன்று காசுசேர்க்கும் இரண்டு சிறுவர்களின் கதை என்றாலும் பெரியோர்களையும் ரசிக வைக்கும் காவியம் இந்த எறும்பு …..

தின கூலி தொழிலாளி சார்லி விவசாயிகளின் அவல நிலையை கச்சிதமாக திரையில் வெளிப்படுத்தியிருக்கும் சார்லியின் நம்பிக்கை மற்றும் விடா முயற்சியையும் தனது நடிப்பு மூலம் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார் , முதல் மனைவி இறந்ததால் இரண்டாவதாக சூசனை திருமணம் செய்துக் கொள்கிறார் கவனம் ஈர்க்கும்படி நடித்திருக்கிறார்சூசனை ., முதல் மனைவிக்கு இரண்டு பிள்ளைகள் இருக்க, சூசனுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. கடன் தொல்லையால் கஷ்ட்டப்படும் சார்லி, தனது மனைவி சூசனுடன் கரும்பு வெட்டும் கூலி வேலைக்காக வெளியூர் சென்று விடுகிறார். அப்போது சூசனின் குழந்தை மோதிரத்தை எடுத்து சிறுவன் சக்தி கார்த்திக்கிடம் அவரது பாட்டி கொடுக்க, அந்த மோதிரத்தை சிறுவன் தொலைத்து விடுகிறான் அதனை வாங்குவதற்கு எறும்பு போன்று காசு சேர்க்கும் இரண்டு சிறுவர்கலின் கதைதான் இந்த எறும்பு .

மோதிரம் தொலைந்த விஷ்யம் சித்திக்கு தெரிந்தால் அடடித்து விடுவார், என்று பயப்படும் சிறுவன் மோதிரம் தொலைத்ததை தனது அக்காவிடம் சொல்கிறான். பாட்டியிடம் கூட விஷயத்தை சொல்லாமல் தொலைந்த மோதிரத்திற்கு பதிலாக புதிய மோதிரம் வாங்கி வைத்துவிட முடிவு செய்யது , அதற்காக கிடைக்கும் வேலைகளை செய்து பணம் சேர்க்கிறார்கள். மறுபக்கம் வேலைக்கு சென்ற இடத்தில் கிடைத்த பணத்தை வைத்து கடனை அடைக்க முடியாது என்பதால், வேறு வழியில் பணம் புரட்டும் முயற்சியில் ஈடுபடும் சார்லி, மோதிரத்தையும் அடகு வைக்க முடிவு செய்கிறார். மறுபக்கம் மோதிரம் வாங்கும் அளவுக்கு பணம் சேர்க்க முடியாமல் சிறுவர் தடுமாறுகிறார்கள்.

சார்லி, சூசன், ஜார்ஜ் மரியன், சிறுமி மோனிகா சிவா, சிறுவன் கார்த்திக் ரித்விக், பாட்டி பறவை சுந்தரம்பாள் ,ஜார்ஜ் மரியன், தனது நடிப்பு மூலம் சிரிக்க வைப்பதோடு, தான் பேசும் வசனங்கள் மூலம் சிந்திக்கவும் வைக்கிறார்.வட்டிக்கு பணம் கொடுப்பவராக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், ஆகியோரும் தங்களது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.ஒளிப்பதிவாளர் கே.எஸ்.காளிதாஸ் எளிமையான கிராமத்தை மிக அழகாக காட்டியிருப்பதோடு, அந்த கிராமத்தில் நம்மையும் பயணிக்க வைக்கும் விதத்தில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.

அருண் ராஜின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாகவும், கதையோடு பயணிக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது. பின்னணி இசை சிறுவர்களின் நடிப்பை போல் இயல்பாகவும், மென்மையாகவும் பயணிக்கிறது.

எறும்பு படத்தை மிக சுவாரஸ்யமாகவும் நமது சீறுவயது நினைவுகளை திரையில் ரசிக்கவைத்துள்ளார் இயக்குநர் சுரேஷ்.ஜி.

படத்தின் ஆரம்பத்தில் திரைக்கதை மெதுவாக நகர்வது போல் தோன்றினாலும், புதிய மோதிரம் வாங்குவதற்காக சிறுவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள், அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் போன்றவை திரைக்கதையின் சுவாரஸ்யத்தை அதிகரித்து நம்மை இருக்கையில் கட்டி போட்டு விடுகிறது.

மொத்தத்தில், இந்த ‘எறும்பு’ சிறுவர்களை மையப்படுத்திய கதை என்றாலும் பெரியவர்களும் ரசித்து பார்க்க கூடிய திரைப்படமாக இருக்கிறது.திரையில் பார்ப்பவர்களும் மிக இயல்பாக புரியம்படியாக படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ்.ஜி.

  • K-Town Celebrities Grace the Grand Launch of Dr. B 360’s ‘Baby Skin Hairless Programme’ in Chennai
  • சென்னையில் டாக்டர். பி 360-ன் ‘பேபி ஸ்கின் ஹேர்லெஸ் புரோகிராம்’ பிரம்மாண்ட தொடக்கத்தில்
  • ஏழு வயதே ஆகும் ரூஹி மொஹஸ்ஸாப் இந்தியாவின் மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவரை சந்தித்தார்!
  • 7-YEAR-OLD ROOHI MOHAZZAB MEETS HON’BLE VICE PRESIDENT OF INDIA
  • Wild Tamil Nadu to be distributed through PVR Cinemas, Bringing t
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme