Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ் திரை விமர்சனம்

சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ் திரை விமர்சனம்

Posted on June 16, 2023

நாயகன் பாலு வர்க்கீஸுக்கு குறைவான வெளிச்சத்தில் பார்வை தெரியாத குறைபாடு இருக்கிறது. அதனால், அவரது திருமணம் நின்றுவிடுவதோடு, வேலையும் பறிபோகிறது. இதனால், சொந்தமாக தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபகிறார். அப்போது, அவரது அம்மா ஊர்வசியின் பூஜை அறையில் இருக்கும் விநாயகர் சிலையை மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கிக் கொள்ள ஒரு கூட்டம் முன் வருகிறது. அதே சமயம், புதிய கோவில் ஒன்றை கட்டி அதில் அந்த சிலையை வைக்க வேண்டும் என்று ஊர்வசியின் உறவினர்கள் முடிவு செய்கிறார்கள். விநாயகர் சிலை மூலம் தனது வாழ்க்கைக்கு வெளிச்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கும் பாலு வர்க்கீஸுக்கு அதே விநாயகர் சிலை மூலம் சில பிரச்சனைகள் வருகிறது. அந்த பிரச்சனைகளில் இருந்து வெளியே வருவதற்காக தனது புதிய நண்பரான சார்ல்ஸை சந்திக்கும் பாலு வர்க்கீஸ், பிரச்சனையில் இருந்து மீண்டு வந்தாரா இல்லையா என்பதே ‘சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்’ திரைக்கதை .

சார்ல்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கலையரசன் முழு படத்தையும் தோளில் சுமந்திருக்கிறார்.பாலு வர்க்கீஸின் அம்மாவாக நடித்திருக்கும் ஊர்வசி, தனது இயல்பான நடிப்பு மற்றும் வசனம் மூலம் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.ஊர்வசியின் கணவராக நடித்திருக்கும் குரு சோமசுந்தரத்திற்கு பெரிய வேலை இல்லை என்றாலும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.இசையமைப்பாளர் சுப்பிரமணியன் கே.வி-இன் இசை படத்திற்கு பலம். பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டிலும் வித்தியாசத்தை காட்டியிருப்பவர், அதிகமான சத்தம் இல்லாத பின்னணி இசை மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.அச்சு விஜயணின் படத்தொகுப்பு மற்றும் கலை இயக்குநரின் பணி இரண்டும் படத்திற்கு பல இடங்களில் கைகொடுத்திருக்கிறது.

“என் பெயரில் கடை வைக்கலாம், ஆனால் நான் தான் இங்கு கடை வைக்க முடியாது. காரணம் நான் திருடன்” உள்ளிட்ட சில வசனங்கள் மூலம் கவனம் ஈர்க்கும் இயக்குநர் சுபாஷ் லலிதா சுப்பிரமணியம் காட்சிகளை சமூக பொறுப்போடு வடிவமைத்திருந்தாலும், அனைத்து விஷயங்களையும் மேலோட்டமாக சொல்லியிருப்பதும் திரையில் ரசிக்கும்படியாக உளது ,

  • K-Town Celebrities Grace the Grand Launch of Dr. B 360’s ‘Baby Skin Hairless Programme’ in Chennai
  • சென்னையில் டாக்டர். பி 360-ன் ‘பேபி ஸ்கின் ஹேர்லெஸ் புரோகிராம்’ பிரம்மாண்ட தொடக்கத்தில்
  • ஏழு வயதே ஆகும் ரூஹி மொஹஸ்ஸாப் இந்தியாவின் மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவரை சந்தித்தார்!
  • 7-YEAR-OLD ROOHI MOHAZZAB MEETS HON’BLE VICE PRESIDENT OF INDIA
  • Wild Tamil Nadu to be distributed through PVR Cinemas, Bringing t
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme