இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவர் விஜய் குருமூர்த்தி (விஜய் ஆண்டனி). அவரது நெருங்கிய நண்பர் அரவிந்த் (தேவ் கில்). அரவிந்த் தன் கூட்டாளிகளான இளங்கோ (ஜான் விஜய்) மற்றும் சிவாவுடன் (ஹரீஷ் பேரடி) இணைந்து விஜய் குருமூர்த்தியின் உடலில் வேறொருவரின் மூளையை பொருத்தி அதன் மூலம் சொத்தை அபகரிக்க திட்டமிடுகின்றார். பிச்சைக்காரன் சத்யா (விஜய் ஆண்டனி).வாழ்க்கையின் பெரும்பகுதியை சிறையில் கழித்த சத்யாவை கட்டாயப்படுத்தி அவரின் விருப்பத்திற்கு எதிராக குருமூர்த்தியாக வாழ வைக்கிறார்கள். உண்மையை வெளிப்படுத்தி, தங்கையை கண்டுபிடித்து, மீதமுள்ள வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வாரா என்பதே பிச்சைக்காரன் 2 கதை.
மூளை மாற்று அறுவை சிகிச்சையை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது, அண்ணன் – தங்கை பாசத்தை திரையில் காட்சிப்படுத்திய விதம் ஏழைகளுக்கான அவல நிலைக்கு பணக்கார முதலாளிகளின் ஆதிக்கம்தான் காரணம் என்பதை திரை பிரசாரமாகவே பேசியிருப்பது, ‘கரோனா காலத்தில் உயிருக்கு போராடும் மக்களிடம் பணம் கேட்டு மருத்துவத்தை வியாபாரம் ஆக்கினார்கள்’ உள்ளிட்ட வசனங்கள். “ஆன்டி பிகிலி” என்ற வார்த்தையும் அதற்கான அர்த்தமும் புதுமை சேர்க்க, எமோஷனல் காட்சிகளில் நடிப்பில் அழுத்தம் கூட்டியிருக்கிறார். குறைந்த காட்சிகள் வந்தாலும் காவ்யா தாப்பர் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார். தேவ் கில், ஜான் விஜய், ஹரீஷ் பேரடி, யோகிபாபு நடிப்பு கதையோட்டத்துக்கு பலம். மன்சூர் அலிகான் கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறது,பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.