தமிழகம் முழுவதும் கடந்த 151 நாட்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 9,85,415 பேர் கைது!!

சென்னை ஊரடங்கு காலத்தில் தமிழகம் விதிகளை மீறியதாக-indiastarsnow.com

சென்னை: ஊரடங்கு காலத்தில் தமிழகம் முழுவதும் கடந்த 151 நாட்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ.21 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்த காலகட்டங்களில் தமிழகம் முழுவதும் 151 நாளில் 8,90, 812 வழக்குகள் பதிவு செய்து 9,85,415 பேரை போலீசார் கைது செய்து சொந்த ஜாமீனில் விடுவித்தனர். அவர்களிடம் இருந்து 6,88,660 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் போக்குவரத்து விதிகளை மீறியதாக இன்று வரை ரூ.21 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஊரடங்கு காலத்தில் தமிழகம் விதிகளை மீறியதாக-indiastarsnow.com

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *