Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
Chinas-Hubei-province-reports-2447-new-cases-of-the-deadly_indiastarsnow.com

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் பலி எண்ணிக்கை 630 ஆக உயர்வு

Posted on February 7, 2020

Chinas-Hubei-province-reports-2447-new-cases-of-the-deadly_indiastarsnow.com

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் உகானில் இந்த வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.

இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 630 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. நேற்று மட்டும் 69 பேர் உயிரிழந்ததாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேபோல், 2,447 பேர் புதிதாக கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 817-க்கும் மேற்பட்டோர் குணமாகி வீடு திரும்பி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • ஏழாண்டுகளுக்கு பிறகு தன் சமூக ஊடகத்தின் – (INSTA DP)- மாற்றியுள்ள பிரபாஸ்
  • அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –
  • துல்கர் சல்மானின் “ஐ ம் கேம்” ( I Am Game) செப்டம்பர் 3-ம் தேதி ரிலீஸ் ஆகிறது – பிரம்மாண்ட உலகளாவிய வெளியீட்டுக்கு திட்டம்!
  • விஸ்வநாத் அண்ட் சன் திரை விமர்சனம்
  • கிரிப்டோ டு மெத்தபெட்டமைன்… கோவை, சென்னையில் சுதந்திரமாக சுற்றும் போதைப்பொருள் மன்னன்… பாயுமா நடவடிக்கை?
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme