Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டைன்மெண்ட் சார்பில்திரு கிளாடி ஜெராடு அவர்கள் தயாரிப்பில், “உறவுகள்” என்ற தலைப்பில் “உயிரிணையே” இசைஆல்பம் வெளியீட்டு விழா

Posted on May 26, 2026

டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டைன்மெண்ட் சார்பில்திரு கிளாடி ஜெராடு அவர்கள் தயாரிப்பில், “உறவுகள்” என்ற தலைப்பில் “உயிரிணையே” இசைஆல்பம் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது இயக்குனர், பாடலாசிரியர் திரு கங்கை அமரன் இசையமைப்பாளர் சதா சுதர்சனம், கண்ணன்,தவசீலிதன்ராஜ், சகோ கணேசன், தயாரிப்பாளர் ரவிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்… இவ்விழாவில்திரு கங்கை அமரன் அவர்கள் பேசியதாவது…தயாரிப்பாளர் கிளாடி ஜெராடு அவர்களைப் பற்றி பேசும் பொழுது…அவரின் நல்ல எண்ணம் தான் இப்படத்தின் தொகுப்பு என்றும்… அருமையான சமூக உறவுகளை..ஏஐ தொழில்நுட்பத்துடன் நடிகர்களை நடிக்க வைத்து ஒரு கதையினை கொடுத்துள்ளார்..எங்கள் அண்ணா இசைஞானி யின் வாசிப்பில் தான் நாங்கள் பல பேர் வளர்ந்திருக்கோம்…எங்கள் குழந்தைகளை அண்ணனிடம் தான் சாரீரம் கற்று கொள்ள அனுப்புவோம்… அப்படிப்பட்ட குருக்களு டன் வளர்ந்த பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது.. இந்த காலத்து குழந்தைகளுக்கு கிடைத்துள்ளதா?இல்லையா? என்பது தெரியவில்லை… முன்பெல்லாம் ஒரு பாடலை தொடரலை யாக பாடுவோம்… இப்பொழுது ஒவ்வொரு வரிகளாக பாடுகின்றோம்..AI இல் பீட் (feed) பண்ணி பாடுகின்றோம்… அதற்கு நாம் எப்படி நம்மளை பெருமைபடுத்தி கொள்வது?…உண்மை யை சொல்ல வேண்டுமென்றால் Ai தொழில்நுட்பம் நம்மளை கெடுத்துக் கொண்டிருக்கின்றது என்பதை நான் உறுதியாக சொல்கிறேன். அதை நம்பி நம் வேலை செய்தோமானால் பிற்காலத்தில் மூளை வேலை செய்யாது… ஒரு தீம் ஐ AI இல் கொடு த்துவிட்டால், அதுவே பாட்டெழுதிவிடுகிறது…. இதில் எப்படி நம்ம பேரை போட்டுக் கொள்வது.. எதற்கு சொல்கிறேன் என்றால் வருங்கால குழந்தைகள் தன்னால் சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும், எழுதத் தெரிந்திருக்க வேண்டும்.. வருங்கால குழந்தைகள் தன்னிடம் இருக்கின்ற சுயரூபங்களை வெளியில் கொண்டு வர வேண்டும் என்பது என் மனமார்ந்த ஆசை.. 50 வருட வாழ்க்கையை இசைத்துறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எங்களை நேசித்து அழைத்துச் செல்லுங்கள்… கனவோ நினைவோ இசையே எங்கள் மூச்சு… என்று கூறி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

  • நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு
  • Kauvery Hospital Brings Multi-Speciality Robotic Surgery Under One Integrated Programme Across Its Chennai Hospitals
  • காவேரி மருத்துவமனையின் புதிய முன்னெடுப்பு:சென்னையில் பல்துறை ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கு ஒருங்கிணைந்த திட்டம்.
  • செகண்ட் லவ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியின் அனைத்து ஏழு எபிசோடுகளும் இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒரே நேரத்தில் வெளியாகும்!
  • Second Love announces weekly binge drop with all 7 episodes releasing every Monday
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme