பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் 54வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் அவரது பிறந்த நாள் அன்று, ரசிகர்கள் ஷாருக்கானின் பங்களாவான மன்னத் முன்பு கூடி நின்று ஷாருக்கானை நேரில் பார்த்து வாழ்த்துகளை தெரிவிப்பார்கள். ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஃபேன் படத்திலும் அந்த காட்சி படமாக்கப்பட்டிருக்கும். இந்நிலையில், நேற்று இரவு 12 மணிக்கு கொட்டும் மழையிலும் ஷாருக்கான் வீட்டுக்கு முன்பு ரசிகர்கள் கூடியிருந்தனர். 12 மணியை கடந்த நிலையில், ரசிகர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார் ஷாருக்கான்
நள்ளிரவு நேரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்று கூடி ஷாருக்கானுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, அவர்களை சந்தித்த ஷாருக்கான், பக்கத்து வீட்டில் எல்லாம் ஆட்கள் தூங்குறாங்க, அவங்கள டிஸ்டர்ப் பண்ணாம சத்தத்தை குறைத்துக் கொண்டு வாழ்த்துகள் கூறுங்கள் என்றார். அவரது இந்த செய்கையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கவுள்ள படத்திற்கு சங்கி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக இரு தினங்களுக்கு முன்பு இந்தியளவில் டிரெண்டானது. ஷாருக்கானின் பிறந்த நாளை முன்னிட்டு அதன் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
Leave a Reply