Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
சுவாகதா எஸ் கிருஷ்ணனின் ‘அடியாத்தே’ ஒற்றை வீடியோ

சுவாகதா எஸ் கிருஷ்ணனின் ‘அடியாத்தே’ ஒற்றை வீடியோ

Posted on October 20, 2019

சுவாகதா எஸ் கிருஷ்ணனின் ‘அடியாத்தே’ ஒற்றை வீடியோ பாடலை முன்னணி இயக்குனர் கெளதம் வசுதேவ் மேனன் வெளியிட்டார்

பிரபல பின்னணி பாடகி சுவாகதா எஸ் கிருஷ்ணனின் ‘அடியாத்தே’ என்ற ஒற்றை வீடியோ பாடலை முன்னணி இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் டுவிட்டரில் வெளியிட்டார். இப்பாடலை சுவாகதாவுடன் இணைந்து டி சத்திய பிரகாஷ் பாடியிருக்கிறார்.

கரு / தியா திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஆலாலிலோ’, பார்ட்டி திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஜிஎஸ்டி’, மற்றும் காற்றின் மொழி திரைப்படத்தில் இடம் பெற்ற ‘டர்ட்டி பொண்டாட்டி’ உள்ளிட்ட பல துள்ளலான பாடல்களை பாடி ரசிகர்களை வென்ற இளம் பாடகி சுவாகதா, முதன்முறையாக ஒரு ஒற்றை வீடியோ பாடலை இசையமைத்து, பாடி, நடித்து, தயாரித்தும் வெளியிட்டிருப்பதன் மூலம் ஒரு இசை வீடியோ தயாரிப்பாளராகவும், இசையமைப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார்.

தனது முதல் குரு திருமதி. விஜயலக்ஷ்மி ராமசேஷன் எனக்கூறும் சுவாகதா, தனது சிறு வயது முதலே அவரிடம் கர்நாடக இசையை பயின்றிருக்கிறார். பொறியியல் பட்டதாரியான சுவாகதா இசையின் மீது கொண்ட ஆர்வத்தால், திரு. அகஸ்டின் பால் அவர்களிடம் மேற்கத்திய பாரம்பரிய இசையை கற்றுத் தேர்ந்திருக்கிறார்.

இந்த பாடலில் சுவாகதாவுடன் இணைந்து சித்தார்த் பல்லியத் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். முகிலன் முருகேசன் இயக்கத்தில் கலைச்செல்வன் ஒளிப்பதிவு செய்ய, இந்த பாடலுக்கான படத்தொகுப்பு பொறுப்புகளை ஷிபு நீல் கவனித்திருக்கிறார். கலை இயக்கம் ‘பரியேறும் பெருமாள்’ புகழ் ராமு தங்கராஜ் செய்ய, ஆடை அலங்காரம் ‘ஐரா’ புகழ் பிரீத்தி நெடுமாறன் செய்ய, கீர்த்தி பாண்டியன் நடன அசைவுகளுக்கு அழகு சேர்த்திருக்கிறார்.

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் வெளியிட்ட இந்த பாடல், இசை ரசிகர்களின் வரவேற்பையும், வெகுவான பாராட்டுகளையும் வென்றிருக்கிறது. மேலும் இந்த ஒற்றை வீடியோ பாடல் சாவன், விங்க், ஜியோ, ஐடியூன்ஸ், அமேசிங் மியூசிக் ஆகிய தளங்களிலும் வெளியிடப்பட்டிருக்கிறது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • 418 திரை விமர்சனம்
  • ஹைக்கூ திரை விமர்சனம்
  • “‘ஹைக்கூ’ ரசிகர்களின் மனதைத் தொடும் ஃபீல் குட் என்டர்டெயினர் திரைப்படம்”- இயக்குநர் யுவராஜ் சின்னசாமி!
  • பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நடிகை அனுமோல்
  • அக்டோபர் 30 முதல் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் ‘செய் செய்யாதே’
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme