Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
கவின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற தயாராகும் நிலையில்! உச்ச கட்ட பரபரப்பு!

கவின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற தயாராகும் நிலையில்! உச்ச கட்ட பரபரப்பு!

Posted on September 25, 2019

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவதாக வெளியாகி உள்ள ப்ரோமோவில் போட்டியாளர் கவின் வெளியேற தயாராகும் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இது பார்க்கும் ரசிகர்களுக்கே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது.

அதாவது தற்போது வெளியிடப்பட்டுள்ள ப்ரோமோவில், போட்டியாளர்கள் அனைவர் மத்தியிலும்… 5 லட்ச ரூபாய்யை வைத்து, இந்த போட்டியில் ஒருவர் மற்றுமே வெற்றி பெற்று 50 லட்சத்தை எடுத்து செல்ல முடியும்.

எனவே இப்போது இந்த போட்டியில் இருந்து விலக நினைப்பவர்கள் இந்த 5 லட்ச ரூபாய்யை எடுத்து கொண்டு செல்லலாம் என கூறுகிறார் பிக்பாஸ். இதை கேட்டு மற்ற போட்டியாளர்கள் மிகவும் அமைதியாக இருக்கும் நிலையில், கவின் மட்டும் எழுந்து நிற்கிறார். இதை பார்த்து சாண்டி மாற்றும் மற்ற போட்டியாளர்கள் அவரை என்ன பண்ற என கேள்வி எழுப்பும் காட்சி வெளியாகியுள்ளது.

கடந்த சீசனில் இதே போல், நடிகை ஐஸ்வர்யா தத்தா 5 லட்ச ரூபாய்யை எடுத்து கொண்டு வெளியே செல்ல முயன்ற போது, இந்த தொகை ஐஸ்வர்யா எடுத்து சென்றால், வெற்றி பெறுபவருக்கு 45 லட்சம் மட்டுமே பரிசாக கொடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து அந்த முயற்சியை கை விட்டு விட்டு, நிகழ்ச்சியில் கவனம் செலுத்த துவங்கினார்.

இதனால், இதே போல் ஏதேனும்… இன்றைய தினம் ட்விஸ்ட் இருக்குமா, அல்லது கவின் வெளியேறுவாரா என இன்றைய நிகழ்ச்சி உச்ச கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ப்ரோமோ இதோ…

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!
  • பல மருத்துவத் துறைகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும் ஹெர் (HER) பெண்கள் நலன் மற்றும் நீண்ட ஆயுள் மாநாடு!
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.
  • HER – Women’s Health & Longevity Summit Brings
  • பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme