மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று அம்மா கூறுவதைப் போல, பிரச்சனையால் நான், பிரச்சனைகளுக்காகவே நான் என்று சிம்பு கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காரணம், சினிமாவில் இவருக்கு வராத பிரச்சனையை கிடையாது.
தயாரிப்பாளர்களின் எதிரி என்று இவருக்கு ஒரு பட்டப்பெயரும் உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஆனால் இவர் பணியாற்ற இயக்குனர்களிடம் கேட்டால், சிம்புவை போல் நல்ல மனிதர் யாரும் இல்லை என்று கூறுகின்றனர்.
என்னங்க டா ரொம்ப கொளப்புறீங்க? அப்படின்னு நீங்க கேட்கிறது எனக்கு தெரியுது.. சொல்ற
குடும்ப பட இயக்குனர், இயக்குனர் பாண்டியராஜ், சிம்புவை பற்றி கூறியதாவது,
சிம்புவுக்கும் எனக்கும் இடையில் நல்ல மரியாதையான நட்பு நிலவி வருகிறது. இது நம்ம ஆளு படத்தின் மூலம் இருவரும் இணைந்து பணியாற்றினோம்.
சிம்பு கூட சமீபத்தில் கடைக்குட்டிசிங்கம் பார்த்துவிட்டு, கிளைமாக்ஸில் என்னையறியாமல் அழுதுவிட்டேன்.எனக்கும் இதேபோல் குடும்பத்தில் வாழ வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது என்று கூறினார்.
நானும், உங்களையும் இதேபோல் ஒரு குடும்பத்துடன் சீக்கிரமே உங்களை சேர்த்து வைப்பேன் என்று கூறியதை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
எனக்கு சிம்புவின் மேல் ஒரே ஒரு வருத்தம்தான். தமிழ் சினிமாவில் அவருக்கு இருக்கும் இடத்திற்கு அவர் வரவில்லையே என்று வருத்தத்துடன் கூறினார். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் இந்த வாரம் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
சீக்கிரமாக சிம்புவுக்கு அப்படி ஒரு படம் குடுங்க.. உங்களால மட்டும் தான் அவருக்கு சினிமாவில் நல்ல இடம் பெற்றுத் தர முடியும்..


Leave a Reply