லாஸ்லியாவின் அப்பா எந்த அளவுக்கு கேவலப்பட்டிருப்பார்

இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த லாஸ்லியா தந்தை, லாஸ்லியாவை கடுமையாக கண்டித்ததால் கவின் உள்பட பிக்பாஸ் போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். லாஸ்லியா-வின் மேல் உன்ன தனது கோபங்களை சரமாரியாக வெளிப்படுத்தியுள்ளார் மரியநேசன்.
லாஸ்லியாவின் அப்பா எந்த அளவுக்கு கேவலப்பட்டிருப்பார் (3)

இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் பிக் பாஸில், கவின், லாஸ்லியா காதல் குறித்து சமூக வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கில் கொச்சையான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற லாஸ்லியா தந்தை லாஸ்லியாவை கடுமையாக கண்டிக்கின்றார்.

இந்த பிக்பாஸ் வீட்டிற்கு என்ன சொல்லிட்டு வந்த, இப்ப என்ன செஞ்சுகிட்டு இருக்க…? தலைகுனிஞ்சி என்னால வாழ முடியாது. உன்ன அப்படியா வளர்த்தன் நானு? இதையெல்லாம் நீ யோச்சியா? மத்தவங்க காரி துப்புறதுக்கா…? என்று ஆத்திரத்துடன் லாஸ்லியாவின் தந்தை கூறுகிறார். இதை வைத்து பார்க்கும்போது வெளியே அவர் எந்த அளவுக்கு உறவினர்களாலும் மற்றவர்களாலும் கேவலப்பட்டிருப்பார் என்று புரிகிறது. ஒரு தந்தையாக அவருடைய ஆதங்கம் சரியானதே என்று தோன்றுகிறது.

லாஸ்லியா விஷயத்தில் சேரனை திட்டுவதும், அசிங்கமாக பேசுவதையும் சுத்தமாக புரிந்துகொள்ள முடியவில்லை. தேவதைகளைப் பெற்றவர்களுக்கும், வளர்ப்பவர்களுக்கும் மட்டுமே சேரனின் ஆதங்கம் புரியும், லாஸ்லியா,கவின் போன்றவர்களுக்கு எப்படி புரியும்?
இது தான் ஒரு தந்தையின் வலி, இதைதான் சேரன் சொன்னாரு, இங்க இந்த மாதிரி பேசாதிங்க இருக்காதிங்க அப்படினு. எங்க கேட்டாங்க இவங்க? நேற்று கூட சேரன் இதை கேட்கும் போது, உங்க அப்பா, அம்மா, உங்க ஃபிரண்ட்ஸ் கிட்ட நான் பேசிக்கிறேன், சேரன் எதுவும் பேச வேண்டாம் சொன்ன கவினால் இப்ப பேசமுடிந்ததா? பெண்ணை பெற்ற அப்பாக்கு மட்டுமே தெரியும் இந்த வலி, அதை தான் இந்த சேரன் ஒவ்வொரு நாளும் உணர்த்தி வந்தாரு!

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *