Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் #DQ41 படத்தின் முக்கியமான படப்பிடிப்பு கட்டம் நிறைவடைந்துள்ளது !

Posted on May 25, 2026

*துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் #DQ41 படத்தின் முக்கியமான படப்பிடிப்பு கட்டம் நிறைவடைந்துள்ளது !!**துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் #DQ41 படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது!!* துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே, ரவி நேலகுதிடி, சுதாகர் செருகூரி, எஸ்எல்வி சினிமாஸ் ( SLV Cinemas ) தயாரிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படமான #DQ41, #SLV10 படத்தின் முக்கியமான படப்பிடிப்பு கட்டம் நிறைவடைந்தது. கவர்ச்சிகரமான படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது !பன்முகத் திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான் தற்போது தனது புதிய திரைப்படமான #DQ41 படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்குகிறார். வெற்றி தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி தலைமையிலான எஸ்எல்வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தத் திரைப்படம், அந்த நிறுவனத்தின் 10வது தயாரிப்பாக #SLV10 என உருவாகி வருகிறது. தற்போது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில், பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மனித உணர்வுகளும் காதலும் கலந்த இனிமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகி வருகிறது.பனிமூட்டம் சூழ்ந்த மலைப்பகுதிகளில் நடைபெற்ற முக்கியமான  படப்பிடிப்பின் ஒரு கட்டத்தை  படக்குழு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அங்கிருந்து வெளியான புகைப்படங்கள் மனதை கவரும் விதமாக அமைந்துள்ளன. குளிர்கால உடைகளில் தோன்றும் துல்கர் சல்மான் தனது இயல்பான கவர்ச்சியால் அனைவரையும் ஈர்க்க, ஹாட் லுக்  உடைகளில் அழகாக தோன்றும் பூஜா ஹெக்டே தனது இயல்பான ஸ்டைலில் கவனம் பெற்றுள்ளார்.வெளியான புகைப்படங்கள் வழக்கமான போஸ் ஸ்டில்களாக இல்லாமல், படப்பிடிப்பு தளத்தின் இயல்பான தருணங்களை பதிவு செய்கின்றன. ஒரு புகைப்படத்தில், மழைத்தூறலில் குடைகளை பிடித்தபடி சுற்றியுள்ள படக்குழுவினருடன் இணைந்து சிரித்துக்கொண்டிருக்கும் துல்கர் மற்றும் பூஜா காணப்படுகின்றனர். மற்றொரு புகைப்படத்தில் பயணப் பைகள், தொலைவில் தெரியும் கயிற்று பாலம் மற்றும் காற்றில் பறக்கும் மலைப்பகுதி பிரார்த்தனை கொடிகள் சேர்ந்து ஒரு பயணத்தின் உணர்வை தருகின்றன. மேலும், அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள கோவிலின் முன் முழு படக்குழுவும் ஒன்றாக நிற்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே முதல் முறையாக இணைந்து நடிக்கும் நிலையில், இருவருக்குமிடையேயான இயல்பான நெருக்கம் படத்தின் உணர்வை ஏற்கனவே வெளிப்படுத்துகிறது.ஒளிப்பதிவாளர் அனய் ஓம் கோஸ்வாமி இயற்கை வெளிச்சத்தை அழகாக பதிவு செய்துள்ளதுடன், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையும், அவினாஷ் கொல்லா உருவாக்கிய காட்சியமைப்பும் சேர்ந்து நெருக்கமான, அழகான மற்றும் உணர்வுப்பூர்வமான ஒரு உலகத்தை உருவாக்குகின்றன.பிரம்மாண்டமான பான் இந்தியா வெளியீடாக உருவாகும் இந்த திரைப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.*நடிகர்கள்* துல்கர் சல்மான்பூஜா ஹெக்டே*தொழில்நுட்பக் குழு*கதை, இயக்கம் – ரவி நேலகுதிடிதயாரிப்பு –சுதாகர் செருகூரிதயாரிப்பு நிறுவனம் – எஸ்எல்வி சினிமாஸ்இணை தயாரிப்பாளர் – கோபிச்சந்த் இன்னமூரிதலைமை நிர்வாக அதிகாரி – விஜய் குமார் சாகண்டிஇசை – ஜி.வி. பிரகாஷ் குமார்ஒளிப்பதிவு – அனய் ஓம் கோஸ்வாமிதயாரிப்பு வடிவமைப்பு – அவினாஷ் கொல்லாமக்கள் தொடர்பு – யுவராஜ்

*Dulquer Salmaan, Pooja Hegde, Ravi Nelakuditi, Sudhakar Cherukuri, SLV Cinemas Pan India Film #DQ41, #SLV10 Wraps A Schedule, Captivating Working Stills Released*Versatile Star Dulquer Salmaan is busy with his ongoing film #DQ41, directed by debutant Ravi Nelakuditi. The film comes from the trusted house of SLV Cinemas, led by successful producer Sudhakar Cherukuri. Marking the banner’s 10th production, #SLV10, the film is shaping up to be one of their most anticipated ventures. The ever charming Pooja Hegde plays the female lead opposite Dulquer Salmaan in this breezy love entertainer, laced with human emotions.The team wrapped an important leg of shooting in frost-laden landscapes, and the photos arriving from the spot present an endearing picture. Dulquer, layered in winter outfits, carries that effortless charm he’s known for, while Pooja Hegde, snug in cozy gear, matches his warmth with an easy, glowing presence.The candid frames aren’t typical posed stills. One moment captures the actors breaking into spontaneous laughter as crew members hustle around them, umbrellas shielding them from the biting drizzle. Another image radiates a travel-movie vibe- rucksacks, a rope bridge in the distance, and a flutter of mountain prayer flags turning the frame into a postcard. Another image shows the entire cast and crew posing in front of a temple in wild forest. Though this is Dulquer and Pooja’s first outing together, the comfort they share already reflects the tone of their film.Cinematographer Anay Om Goswamy’s eye for natural light, GV Prakash Kumar’s music, and Avinash Kolla’s production design together shape a world that feels intimate, scenic, and emotionally rich.Slated for a grand Pan-India release, the film will grace the cinemas in Telugu, Hindi, Tamil, Kannada, and Malayalam.Cast: Dulquer Salmaan, Pooja HegdeTechnical Crew:Writer, Director: Ravi NelakuditiProducer: Sudhakar CherukuriBanner: SLV CinemasCo-Producer: Gopichand InnamuriCEO: Vijay Kumar ChagantiMusic: GV Prakash KumarDoP: Anay Om GoswamyProduction Designer: Avinash KollaPRO: Yuvraaj

  • துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் #DQ41 படத்தின் முக்கியமான படப்பிடிப்பு கட்டம் நிறைவடைந்துள்ளது !
  • *A Massive Combination. A Brand New Entertainer Underway starring Karthi directed by Kalyan Shankar & Produced by Sithara Entertainments.
  • கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்!**
  • வாரண்ட் இணையத் தொடர் விமர்சனம்
  • *100 மில்லியன் பார்வைகளைக் கடந்து சர்வதேச அளவில் மெகா ஹிட் அடித்துள்ள ஆரா 10/10!*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme