1.கமல்ஹாசன் பிரச்சாரம் செய்ய தடை விதித்த முறையீட்டை விசாரிக்க மதுரைக்கிளை நீதிபதிகள் மறுப்பு
மதுரை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க கோரி ஐகோர்ட் மதுரைகிளையில் முறையீடு செய்யப்பட்டது. வழக்கறிஞர் சரவணன் முறையீட்டை விசாரிக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். தோத்தல் பிரச்சாரத்தில் மதஉணர்வை புண்படுத்தும் வகையில் கமல்ஹாசன் பேசி வருவதாக மனுதார் புகார் அளித்திருந்தார்.
2.பாஜக அல்லாத காட்சிகளே அடுத்து ஆட்சியமைக்கும் :ப.சிதம்பரம்
டெல்லி : காங்கிரஸ் உள்ளிட்ட பாஜக அல்லாத கட்சிகள் அடுத்து ஆட்சியமைக்கும் என்பது தெளிவாகியுள்ளது. 6 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் ஆட்சியமைப்பது பற்றி தெளிவாகி உள்ளது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும் தோல்வி பயத்தை மறைக்கவே 300-க்கும் அதிகமான இடங்களை வெல்வோம் எனக் பாஜக கூறிவருகிறது.
3.இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு
மேற்குவங்கம்: இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. மேற்குவங்கத்தில் ஆணையத்தால் நியாயமான தேர்தலை நடத்த முடியாது எனவும் காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. நரேந்திர மோடியின் பிரச்சாரத்துக்கு பாதிப்பு இல்லாத வகையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்ததாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
4. மன்னார்குடி அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு
மன்னார்குடி : மன்னார்குடி அருகே கூத்தாநல்லூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதிக்க வலியுறுத்தி கழிவு நீரில் இறங்கி விவசாயிகள் போராட்டம் ஈடுபட்டுள்ளனர்.
5.தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ஆசிரியர் வீட்டில் 24 சவரன் நகை கொள்ளை
தஞ்சை: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அரசு பள்ளி ஆசிரியர் முருகன் வீட்டில் 24 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது. மேலும் கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
6.திருத்துறைப்பூண்டி அருகே கரையோரம் கிடந்த 3000-க்கும் மேற்பட்ட ஆதார் அட்டை மீட்பு
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி முன்னியாற்றின் கரையோரம் கிடந்த 3000-க்கும் மேற்பட்ட ஆதார் அட்டை மீட்கப்பட்டது. கட்டிமேடு, ஆதிரங்கம், வடபாதி, கிராமத்தினரின் ஆதார் அட்டைகள் என விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது. ஆதார் அட்டைகளை ஆற்றின் கரையோரம் வீசிச் சென்றவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
7. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே அப்துல்லாபுரத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது. தனியார் நிறுவன ஊழியர் கார்த்திக் குடும்பத்துடன் வெளியூர் சென்ற நிலையில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். மேலும் அவரது வீட்டின் பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றவர்களுக்கு போலீசார் தேடி வருகின்றனர்.
8.திருவள்ளூரில் இருந்து தேனிக்கு 20 வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன
திருவள்ளூர்: திருவள்ளூரில் இருந்து தேனிக்கு 20 வாக்கு இயந்திரங்களும், 30 விவிபாட் கருவிகள் கொண்டு செல்லப்பட்டுவிட்டன. மேலும் பாலசமுத்திரம், வடுகப்பட்டி ஆகிய 2 வாக்குச்சாவடிகளில் மே 19 ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் 20 வாக்கு இயந்திரங்கள் தேனிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன
9.தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு சோனியா காந்தி கடிதம்
டெல்லி: தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். வரும் 23-ம் தேதி மாலை டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம் வரும் 23-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.
10.சேலம் அருகே ரயிலில் தொடர் நகை பறிப்பு : 6 பேர் கைது
சேலம் : சேலம் அருகே ரயிலில் நடைபெற்ற தொடர் நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக மகராஷ்டிரா சோலாப்பூரை சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11.காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை
புல்வாமா : ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதி தலிபோராவில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிருழந்துள்ளார்.
12.திருப்பரங்குன்றம் சுயேச்சை வேட்பாளர் கடத்தல்: 2 பேர் கைது
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுயேச்சை வேட்பாளர் செந்தில் ராஜாவை கடத்தியதாக தினேஷ், வினோத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் பணியில் இருந்த தன்னை காரில் கடத்தியதாக செந்தில் ராஜா புகார் அளித்துள்ளார். புகாரை அடுத்து திருப்பரங்குன்றம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
13.உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்த அரசாணை வெளியீடு:தேர்தல் ஆணையம்
சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்த 2-வது அரசாணையை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஊரக பஞ்சாயத்து, 3-ம் நிலை பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
14.5 ஆண்டு சிறை தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய்தத் முன்கூட்டியே விடுதலை: ஆர்டிஐ
சென்னை: 5 ஆண்டு சிறை தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய்தத் முன்கூட்டியே விடுதலை என்று ஆர்டிஐ தெரிவித்துள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் மாநில அரசால் சஞ்சய்தத் விடுதலை என நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. சிறையில் உள்ள பேரறிவாளன் தாக்கல் செய்த ஆர்டிஐ ல் நிரூபணமாகியுள்ளது.
15.கருத்து கணிப்பு: டுவிட்டருக்கு தேர்தல் கமிஷன் கோரிக்கை….
புதுடில்லி: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு தொடர்பான பதிவுகளை அகற்றும்படி டுவிட்டர் நிறுவனத்திற்கு தேர்தல் கமிஷன் வேண்டுகோள் விடுத்துள்ளது.
16.எங்கள் ஆட்சியில் 6 பெண்கள் அமைச்சர்; சுஷ்மா
புதுடில்லி: சுதந்திரம் அடைந்த காலம் முதல் மோடி தலைமையிலான அரசில் தான் 6 பெண்களுக்கு காபினட் அந்தஸ்து அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. என மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா கூறியுள்ளார்.
17.கோவில்பட்டி ஜவுளி கடையில் தீ விபத்து….
கோவில்பட்டி: கோவில்பட்டி புது ரோடு பகுதியை சேர்ந்தவர் தேன்மொழி. இவர் அதே பகுதியில் ஷியாம் பேசன்ஸ் என்ற பெயரில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலையில் அவரது 2 தளங்கள் கொண்ட கடையில் மேல் பகுதியில் திடீரென தீ பற்றி எரிவதை கண்ட பொதுமக்கள், கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கும் கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட முயற்சி செய்தனர். ஆனால் ஜவுளிக்கடையின் ஷட்டர் திறக்க முடியாத காரணத்தினால், தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு துறையினர் திணறினர்.
ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை முற்றிலுமாக அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
18.இமாசல பிரதேசத்தில் பா.ஜ.க. தொண்டர்களை ஏற்றி கொண்டு சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 7 பேர் காயமடைந்தனர்.
19.தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க. அல்லாத ஆட்சி அமைக்க மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூறியுள்ளது.
20. கொல்கத்தா, ;- நேற்று முன்தினம் பா.ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா பேரணியில் வன்முறை வெடித்ததில் தத்துவ மேதையும், வங்காள மறுமலர்ச்சிக்கு காரணமானவருமான இஷ்வார் சந்திரா வித்யாசாகர் சிலையை பா.ஜ.க.வினர் உடைக்கும் வீடியோவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
21.சட்டை கலையாமல் கமல்ஹாசனை அரசியலில் இருந்து தமிழக மக்கள் அப்புறப்படுத்துவார்கள் ;- தமிழிசை சவுந்தரராஜன் .
22.மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜகவினர் செயல்பட்டு வருகின்றனர் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
23.திருவண்ணாமலை:;- வேட்டவலம் மனோன்மணி அம்மன் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்ட மரகத லிங்கத்தை குப்பையில் வீசியது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
24.பாராளுமன்ற தேர்தலுக்கான 7-வது கட்ட தேர்தலில் 9 தொகுதிகளை தவிர்த்து மீதமுள்ள 50 தொகுதிகளில் நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
25.தமிழகத்தில் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சூலூர் தொகுதியில் திண்ணையில் அமர்ந்து மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
26.சரித்திர உண்மை, சரித்திர உண்மை என்று கூறி கமல் தரித்திரத்தை விலைக்கு வாங்குகிறார் ;- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி .
27.அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜூன் மாதம் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
28.லாட்டரி வியாபாரியின் உதவியாளர் மரணம் தொடர்பான வழக்கு : சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட மறுப்பு
சென்னை : லாட்டரி வியாபாரி மார்ட்டின் உதவியாளர் பழனிசாமி மரணத்தை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பழனிசாமியின் மகன் ரோகின்குமார் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.
29.சென்னை: அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் பள்ளிகளை விரைவில் சீல் வைத்து மூட, தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
30.லக்னோ: பிரதமர் நரேந்தர மோடி போட்டியிடும் வாரணாசியில்,பிரச்சாரம் செய்து கொண்டிருந்த பிரியங்கா காந்திக்கு எதிராக கோஷமிட்ட பாஜகவினரை தடியடி நடத்தி போலீசார் விரட்டி அடித்தனர்.
31.மீண்டும் அரவக்குறிச்சியில்.. பெரும் சர்ச்சைகளுக்கு பின் இன்று பிரச்சாரம் செய்கிறார் கமல்!
இன்று மாலை 5 மணிக்கு தென்னிலையில் திறந்தவேன் மூலம் கமல்ஹாசன் பிரச்சாரத்தை தொடங்குகிறார். பின்னர் தொப்பம்பட்டி, நொய்யல், தளவாபாளையம் ஆகிய இடங்களில் வேட்பாளர் மோகன்ராஜிக்கு ஆதரவு கேட்டு தொடர்ந்து பேசுகிறார். வேலாயுதம்பாளையம் மலைவீதியில் இரவு 8.15 மணியளவில் நடக்கிற பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்று பேசுகிறார் என மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply