ப.சிதம்பரத்திற்கு இன்று திகாரில் முதலிரவு! ஜெயில் நம்பர் 9..! வார்ட் நம்பர் 7

திகார் சிறையில் எண் 7 பிளாக்கில் உள்ள வார்ட் ஏழில் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கு பிறகு சிறைக்கு சென்றுள்ளார் சிதம்பரம். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்பட்ட நாள் முதலே சிபிஐ காவலில் சிபிஐ அலுவலகத்தில் உள்ள விருந்தினர் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.

ஆனால் சிபிஐ காவல் முடிந்த நிலையில் இன்று இரவு சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறை திகார் தான். அங்கு சிறை எண் 9ல் சிதம்பரத்தை அடைத்துள்ளனர்.

வார்ட் நம்பர் 7ல் தனி அறையில் சிதம்பரம் சிறை வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பாதுகாப்புக்கு சில காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். சிறையில் முதல் இரவு என்பதால் அங்கு கொடுக்கப்பட்ட ரொட்டி போன்ற உணவை மட்டும் தான் சிதம்பரம் சாப்பிட வேண்டிய நிலை.

நாளை காலை முதல் சிறை கேன்டீனில் சிதம்பரம் சாப்பிட அனுமதி உண்டு. இதனிடையே சிறையில் சிதம்பரத்திற்கு என்று தனியாக எந்த வசதியும் செய்து தரவில்லை என்று டெல்லி சிறைத்துறை டிஐஜி கூறியுள்ளார்.திகார் சிறையில் எண் 7 பிளாக்கில் உள்ள வார்ட் ஏழில் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ளார்.  கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கு பிறகு சிறைக்கு சென்றுள்ளார் சிதம்பரம். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்பட்ட நாள் முதலே சிபிஐ காவலில் சிபிஐ அலுவலகத்தில் உள்ள விருந்தினர் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.  ஆனால் சிபிஐ காவல் முடிந்த நிலையில் இன்று இரவு சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறை திகார் தான். அங்கு சிறை எண் 9ல் சிதம்பரத்தை அடைத்துள்ளனர்.  வார்ட் நம்பர் 7ல் தனி அறையில் சிதம்பரம் சிறை வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பாதுகாப்புக்கு சில காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். சிறையில் முதல் இரவு என்பதால் அங்கு கொடுக்கப்பட்ட ரொட்டி போன்ற உணவை மட்டும் தான் சிதம்பரம் சாப்பிட வேண்டிய நிலை.  நாளை காலை முதல் சிறை கேன்டீனில் சிதம்பரம் சாப்பிட அனுமதி உண்டு. இதனிடையே சிறையில் சிதம்பரத்திற்கு என்று தனியாக எந்த வசதியும் செய்து தரவில்லை என்று டெல்லி சிறைத்துறை டிஐஜி கூறியுள்ளார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *