Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

வாரண்ட் இணையத் தொடர் விமர்சனம்

Posted on May 24, 2026

விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில் இணை தொடராக ‘வாரண்ட்’ இன்று Zee5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. பிரசாந்த் பாண்டியராஜ் , காளி வெங்கட் , பாலாஜி சக்திவேல் , அருள்தாஸ் , நம்ரிதா ஆகியோர் இந்த தொடரில் நடித்துள்ளார்கள். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

திருச்சிராப்பள்ளியில் தனது அப்பாவின் வருமானத்தில் ஒரே செல்ல பிள்ளையாக வளர்ந்து வரும் நாயகன் “கோட்டை கருப்பசாமி” தனது கல்லூரி படிப்பை முடித்து நாயகன் “கோட்டை கருப்பசாமி”பிரசாந்த் பாண்டியராஜை எப்படியாவது அரசு ஊழியராக்கி விட வேண்டும் என்பதற்காக அவரது தந்தை பல அரசு தேர்வுகளை எழுத வைக்கிறார். தேர்வுகளில் நாயகன் தேர்ச்சி பெறாமல் போக இறுதியில் பணம் கொடுத்து தனது மகனுக்கு அரசு வேலை வாங்க வேண்டும் என்ற முடிவுக்கு தாய் தந்தை வருகிறார்கள் அப்போது காவல்துறை உயர் அதிகாரிக்கு ஓட்டுனராக பணிபுரியும் காளி வெங்கட்டின் உதவியோடு நாயகனை காவலராக்கி விடுகிறார்கள். திருச்சி பொன்மலை காவல் நிலையத்தில் பணிபுரியும் நாயகன் (கோட்டை கருப்பசாமி) பிரசாந்த் பாண்டியராஜ் காவல்துறையின் வேலைகளை புரிந்து கொள்ள முடியாமலும் உயர் அதிகாரிகளின் ஈகோ போன்றவற்றின் மூலம் வேலையில் ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளை சமாளிக்க முடியாமலும் திணறுகிறார் நாயகன் ( கோட்டை கருப்பசாமி) மற்றவர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி அவமானப்படுகிறார்.பல நாள் அகப்படாத கைதியை கொடைக்கானல் சரவணன் கைது செய்து நீதிபதி முன் நிறுத்துவதற்காக கொண்டு செல்லும் வழியில் நாயகன் “கோட்டை கருப்பசாமி “இடமிருந்து தப்பித்து விடுகிறார் அப்பொழுது அவரது உடம்பில் முக்கிய பகுதியை தாக்கி விட்டு செல்வதால் அன்று முதல் நாயகனை காவல் நிலையத்தில் உள்ள அனைவரும் (கொட்டை ) என்று கிண்டலாக கூப்பிட ஒரு கட்டத்தில் காவல்துறை பணியே வேண்டாம் என்ற முடிவு எடுக்கும் நாயகன் “கோட்டை கருப்பசாமி” பிரசாந்த் பாண்டியராஜ், தன்னை அலட்சியமாக பார்த்து அவமானப்படுத்துகிறவர்களுக்கு தான் யார் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று நாயகனின் அப்பா தன்னம்பிக்கை கொடுக்க அன்று முடிவு செய்கிறார்.நாயகன் “கோட்டை கருப்பசாமி” கைதியை தப்பிக்க விட்டதால் அவருக்கு பழைய வாரண்ட் வேலை கொடுத்து அதனை சரி பார்க்க சொல்கிறார்கள் காவல் நிலையத்தின் உயர் அதிகாரி இதனைத் தொடர்ந்து அதற்காக அவர் மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கைகள் நாயகன் கோட்டை கருப்பசாமி நீதிபதி மூலம் மிகப்பெரிய சிக்கலை உண்டாக்குகிறது அது என்ன ?

கொட்டை என்ற அவமான பேரில் இருந்து நாயகன் கோட்டை கருப்பசாமி என்று தன் பெயரை நிறுத்தினாரா?

சாதாரண மனிதனாக காவல் நிலையத்திற்குள் செல்லும் கோட்டைசாமி கொடூர போலீசாக மாறுவது ஏன்?

சாமானிய மக்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன போன்ற கேள்விக்கு பதில் இந்த வாரண்ட் இணைத்தொடர் ?

ஒரு காவல் நிலையத்திற்குள் நடக்கும் கேலி ,கிண்டல் ,அதிகாரம் ,ஈகோ, மற்றும் அடக்குமுறை எளிய மக்களுக்கு புரியும் விதமாக இந்த வாரம் இணைத்தொடர் தனது நியாயத்தை எளிமையாக புரிய வைத்துள்ளது என்பதை ‘வாரண்ட்’.

நாயகன் அப்பாவித்தனமான முகத்தோடும் அமைதியான தன்மை கொண்ட இளைஞராக வாரண்ட் கதையின் தொடக்கத்தில் நாயகன் “கோட்டை கருப்புசாமி” கச்சிதமாக பொறுந்தியிருக்கும் பிரசாந்த் பாண்டியராஜ், தன் நிலையை மாற்றுவதற்காக ஒவ்வொரு எபிசோடுக்கும் முடிவில் தனது நடிப்பின் அவதாரத்தை மாற்றிக் கொண்டே வாரண்ட் தொடரின் கதை முடிவில் “கொடூரமான” “அரக்கத் தனமான ” அதிரடி அவதாரம் மூலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி “கோட்டை கருப்பசாமி என்ற கதாபாத்திரத்திற்கு திரையில் காண்போரை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளது வாரண்ட் இணை தொடர்.

வாரண்ட் இணைத்தொடர் நாயகிகளாக நர்மிதா.எம்.வி, அருள்ஜோதி, சாயா தேவி தங்களது நடிப்பை சிறப்பாக திரைக்கதைக்கு உயிர் கொடுத்து நடித்துள்ளனர் மற்றும் பாலாஜி சக்திவேல், கெளசல்யா,அருள்தாஸ், ஹெலோ கந்தசாமி, கொடைக்கானல் சரவணன் கதாபாத்திரம் மற்றும் , காவல் நிலையத்தில் காவலர்கள் கதாபாத்திரத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் தங்களின் நடிப்பின் மூலம் திரை கதைக்கு உயிர் கொடுத்து திரையில் காண்போரை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளது மிக சிறப்பு. ,

இணைத்தொடர்க்கு பக்கபலமாக பின்னணி இசை நடிப்போடும் கதையோடும் ஒன்றி ரசிக்க வைத்துள்ளது வாரண்ட் இணைத்தொடர்க்கு இசை மிகப் பெரிய பக்கபலமாக அமைந்துள்ளது.

‘Warrant’A Tamil ZEE5 OriginalsCastPrasanth PandiyarajBalaji SakthivelKaali VenkatArul DossNamritha MVArul JothiChaya DeviHello KandasamyMeenaKousalyaVaiyapuriCrewCreated By – Prasanth PandiyarajStory, Screenplay & Written By – Prasanth Pandiyaraj & Vignesh NatarajanDirected By – Vignesh NatarajanProduced By – Prasanth Pandiyaraj, P Vishal, P M AadheesvarProduction Houses – Sivan Pictures, S StudiosBackground Score – Sam CSCinematographer – Ashok KumarEditor – R Ramar

  • நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு
  • Kauvery Hospital Brings Multi-Speciality Robotic Surgery Under One Integrated Programme Across Its Chennai Hospitals
  • காவேரி மருத்துவமனையின் புதிய முன்னெடுப்பு:சென்னையில் பல்துறை ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கு ஒருங்கிணைந்த திட்டம்.
  • செகண்ட் லவ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியின் அனைத்து ஏழு எபிசோடுகளும் இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒரே நேரத்தில் வெளியாகும்!
  • Second Love announces weekly binge drop with all 7 episodes releasing every Monday
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme