பாகிஸ்தானை தொடர்ந்து ஆப்கானிஸ்தானிலும் குண்டுவெடிப்பு.. காபூலில் பயங்கரம்.. பலர் படுகாயம்

!

காபூல்: ஆப்கானிஸ்தானில் நடந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
இன்று காலை பாகிஸ்தான் லாகூரில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 4 பேர் பலியானார்கள். லாகூரில் தாதா தர்பார் மசூதிக்கு வெளியே மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடைபெற்ற இருக்கிறது.

இந்த தாக்குதலின் சுவடுகள் மறையும் முன் தற்போது ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றுள்ளது. காபூலில் உள்ள ஷார் நாவ் பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
அங்கிருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களின் கட்டிடங்களை குறிவைத்து காரில் இந்த குண்டு வைக்கப்பட்டு தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் 13 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்து இருக்கிறது.
லாலு பிரசாத்துகாக யாதவர்கள் அளித்து வந்த ஆதரவு சரிகிறதா?
இதில் சிலர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது ரம்ஜான் மாதம் என்பதால் உலகம் முழுக்க இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து வருகிறார்கள். ஆப்கானிலும் மக்கள் ரம்ஜான் மாதத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த மோசமான தாக்குதல் நடந்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு இன்னும் யாரும் பொறுப்பேற்கவில்லை. பாகிஸ்தான் தாக்குதலுக்கும் இன்னும் யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *