திருச்சி பலூன் வியாபாரியின் 2 குழந்தைகள் மாயம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் கைலாஷ் நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி லூர்து மேரி. இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள். இவர் திருச்சி மெயின்கார்டு கேட் தெப்பக்குளம் பகுதியில் பலூன் விற்று வருகிறார். கடந்த 23 ஆம் தேதி தனது 2 குழந்தைகளுடன் (ஜான்சி-13), (தமிழ்ச்செல்வி-12) பலூன் விற்றுக் கொண்டிருந்தார். இரவு 8 மணியளவில் இரண்டு குழந்தைகளும் காணாமல் போயினர். உடனடியாக அக்கம், பக்கத்தில் தேடி பார்த்து விட்டு பின்னர் கோட்டை போலீசில் புகார் அளித்தார். ஆனால் அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்திருக்கின்றனர்.

குழந்தைகள் காணாமல் போய் 4 நாட்களாகியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் பெற்றோர் இன்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் மற்றும் துணை ஆணையரிடம் புகார் அளித்தனர். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *