Blog

  • காந்தாரா” படத்தின் பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில், தபால் துறை அஞ்சல் அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளது!!

    இந்திய தபால் துறை மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ் இணைந்து காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு கவர், பட அஞ்சல் அட்டைகள் & கேன்சலேஷன் ஸ்டாம்ப் வெளியிட்டு கௌரவித்துள்ளன!!

    இந்தியா தபால்துறை, கர்நாடக அஞ்சல் வட்டாரம், ஹொம்பாலே பிலிம்ஸ் இணைந்து, கர்நாடகாவின் செழுமையான பாரம்பரிய கலாச்சாரத்தை கொண்டாடும் வகையில், ஒரு சிறப்பு கவர், இரண்டு பட அஞ்சல் அட்டைகள் மற்றும் கேன்சலேஷன் ஸ்டாம்பை வெளியிட்டுள்ளது. தேசிய விருது பெற்ற காந்தாரா திரைப்படத்தில் வலிமையாக வெளிப்பட்ட புனிதமான பூதகோலா மரபை, இந்த வெளியீடு சிறப்பித்துள்ளது.

    செப்டம்பர் 22-ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஊடகத்தினரும் கர்நாடக அஞ்சல் வட்டார பிரதிநிதிகளும் பங்கேற்றனர். காந்தாரா படத்தின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டி, கர்நாடக அஞ்சல் வட்டாரத்தின் இயக்குநர் (முகாம்) ஸ்ரீ சந்தேஷ் மகாதேவப்பா, பெங்களூரு GPO முதன்மை அஞ்சல் மாஸ்டர் ஸ்ரீ H.M. மஞ்சேஷா, ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பாளர் விஜய் கிராகந்தூர் ஆகியோர் இணைந்து இந்த சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டனர்.

    பூதகோலா காட்சியுடன் வடிவமைக்கப்பட்ட கேன்சலேஷன் ஸ்டாம்ப், சேகரிப்பதற்குரிய அரிய வெளியீடாகவும், கர்நாடகாவின் வாழும் மரபுகளை பிரதிபலிக்கும் பெருமையான நினைவுச் சின்னமாகவும் அமைந்துள்ளது.

    இந்நிகழ்வில் பேசிய ரிஷப் ஷெட்டி, “காந்தாரா எங்கள் மரபின் வேர்களையும் வழிபாடுகளையும் கொண்டாடும் விதமாக உருவாக்கப்பட்டது. இந்திய தபால் துறை இந்த பயணத்தை சிறப்பு கவர் மற்றும் அஞ்சல் அட்டைகள் மூலம் கௌரப்படுத்தியுள்ளது என்பது பெருமை. இது படத்திற்கான அங்கீகாரம் மட்டுமல்ல, நம் மண்ணின் கலாச்சாரம் மற்றும் மக்களுக்கான அங்கீகாரமும் ஆகும்” என்றார்.

    சிறப்பு அங்கீகாரமாக, “காயகவே கைலாச” என்ற சொற்றொடரை ரிஷப் ஷெட்டி ஒரு அஞ்சல் அட்டையில் எழுதி கையெழுத்திட்டார். உழைப்பின் புனிதத்தையும் பக்தியையும் பிரதிபலிக்கும் இந்த நிலையான தத்துவம் காந்தாரா படத்தின் கதையிலும் பிரதிபலிக்கிறது.

    தயாரிப்பாளர் விஜய் கிராகந்தூர், “இந்திய தபால் துறையில் இந்த அங்கீகாரம் படத்திற்கும் மட்டுமல்ல, கர்நாடகாவின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்திற்கும் ஒரு பெரிய கௌரவம். இது எங்களுக்கெல்லாம் மிகவும் பெருமையான தருணம். இப்படியான முயற்சிகள் எங்கள் பாரம்பரியத்தைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல உதவும். காந்தாரா எங்கள் வேர்களை இவ்வளவு பெருமைக்குரிய மேடையில் வெளிப்படுத்தும் ஊடகமாக மாறியது எங்களை மிகவும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது” என்றார்.

    சிறப்பு கவர், அஞ்சல் அட்டைகள் மற்றும் கேன்சலேஷன் ஸ்டாம்ப் ஆகியவை, மனிதன், இயற்கை மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் ஆழ்ந்த ஆன்மீக இணைப்பை வெளிப்படுத்திய காந்தாரா படத்திற்கான ஒரு அஞ்சலியாகும். இந்த முயற்சியின் மூலம், இந்தியா தபால் துறை மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ், கர்நாடகாவின் பாரம்பரியத்தை நிலைநிறுத்தவும், ஒற்றுமை, நம்பிக்கை, கலாச்சார மரியாதை போன்ற காலத்தால் அழியாத மதிப்புகளை மக்களிடம் நினைவூட்டவும் முன்னெடுத்து சிறப்பித்துள்ளன.

    இந்த வெளியீடு, இந்தியா தபால் துறை பாரம்பரியத்தையும், காந்தாரா படத்தின் சினிமா பாரம்பரியத்தையும் இணைக்கும் பெருமையான தருணமாகும். கலாச்சாரத்தையும் சமூகத்தையும் இணைக்கும் காலத்தால் அழிக்க முடியாத நம் வேர்களை கௌரவிக்கும் அடையாள முயற்சியாக இது திகழ்கிறது.

    India Post and Hombale Films Honour the Legacy of Kantara with Special Cover, Picture Postcards & Cancellation Stamp

    Bengaluru, 23rd September 2025 – India Post, Karnataka Postal Circle, in association with Hombale Films, proudly released a Special Cover, a set of two Picture Postcards, and a Cancellation Stamp celebrating the vibrant cultural heritage of Karnataka. The release highlights the sacred Bootha Kola ritual, as powerfully depicted in the National Award-winning film Kantara.

    The event, held in Bengaluru on 22nd September, was graced by members of the media and representatives of the Karnataka Circle. The unveiling was done by Kantara’s writer, director and actor Rishab Shetty, Sri Sandesh Mahadevappa, Director Postal Services (HQ), Karnataka Postal Circle,Sri H M Manjesha, Chief Postmaster, Bengaluru GPO and Producer Vijay Kiragandur of Hombale Films.

    The specially designed Cancellation Stamp, featuring the image of Bootha Kola, added another layer of honour to the release, making it a true collector’s edition that reflects Karnataka’s living traditions.

    Speaking on the occasion, Rishab Shetty shared, “Kantara was created as a celebration of our roots and rituals. To see India Post immortalize this journey through a Special Cover and postcards is truly an honour. It is a recognition not just for the film, but for the culture and the people who inspired it.”

    As a special gesture, Rishab Shetty also autographed one of the Picture Postcards with the words ‘Kayakave Kailasa’ – a timeless philosophy that echoes through Kantara’s narrative, symbolising the sanctity of labour and devotion.
    Producer Vijay Kiragandur said, “This recognition from India Post is a great honour, not only for the film but also for Karnataka’s rich cultural traditions. It is a proud moment for all of us at Hombale Films. Such initiatives help preserve our heritage and pass it on to future generations. We are humbled that Kantara has become a medium to showcase our roots on such a prestigious platform.”

    The Special Cover, Picture Postcards, and Cancellation Stamp together stand as a tribute to Kantara’s portrayal of the deep spiritual connection between man, nature, and tradition. Through this initiative, India Post and Hombale Films aim to preserve and showcase Karnataka’s heritage, reminding us of timeless values of harmony, faith, and reverence for culture.

    The release is a proud moment for the Karnataka Postal Circle and Hombale Films, blending the legacy of India Post with the cinematic legacy of Kantara. It stands as a symbolic gesture of honouring tradition, art, and the eternal bond between culture and community.

  • சினிமா துறையின் மக்கள் தொடர்பாளர் “நிகில் முருகன்”தமிழ்நாடு அரசின் பெருமைமிகு விருதான கலைமாமணி விருது!!!!

    தமிழ்நாடு அரசின் பெருமைமிகு விருதான கலைமாமணி விருதுக்கு என்னை “சினிமா துறையின் மக்கள் தொடர்பாளர் (நிகில் முருகன்) ”

    தேர்வு செய்ததற்காக மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு மு.பெ. சாமிநாதன் அவர்களுக்கும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் நிர்வாகிகள் மற்றும் தேர்வு குழு உறுப்பினர்களுக்கும், எனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், என் குடும்பத்தினர் மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்ட திரையுலகினருக்கும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கலைமாமணி விருது அளிக்கும் ஊக்கத்துடன் உங்கள் அனைவருடனும் இணைந்து தொடர்ந்து பயணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    நன்றி…
    வணக்கம்
    நிகில் முருகன்

  • நேதாஜி புரொடக்சன்ஸ் சோழ சக்ரவர்த்தி & ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் வழங்கும், இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் ‘திரெளபதி 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

    நாடு முழுவதும் நவராத்திரி கொண்டாட்டம் சிறப்பாக நடைபெறும் வேளையில், சினிமா ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு ‘திரெளபதி2’ காரணமாக அமைந்துள்ளது. மும்பையில் தொடங்கிய படப்பிடிப்பு அரியலூர் ஷெட்யூலுடன் வெற்றிகரமாக முடிந்துள்ளது. விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் அறிவிப்பில் இருந்து முதல் பார்வை போஸ்டர் வரை பிரம்மாண்டமான காட்சிகள் மற்றும் உணர்வுப்பூர்வமான ஹிஸ்டாரிக்கல் ஆக்‌ஷன் கதையாக படம் அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிலும் சினிமா வட்டாரத்திலும் எழுந்துள்ளது.

    படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்து மோகன் ஜி மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டதாவது, “படப்பிடிப்பு பற்றி எவ்வளவு துல்லியமாக இயக்குநர் திட்டமிட்டாலும், தயாரிப்பாளரின் ஆதரவு வலுவாக இருக்கும்போதுதான் படம் சரியாக வரும். இதற்கு தயாரிப்பாளர் சோழ சக்ரவர்த்தி சாருக்கு நன்றி. சினிமா மீதான ஆர்வம், நல்ல படங்களை ஆர்வமுடன் பார்ப்பது, சினிமா உருவாகும் முறையை புரிந்து கொள்வது என எங்களுக்குத் தேவையான அனைத்தை விஷயங்களை செய்து கொடுத்து, முழு சுதந்திரம் அளித்ததோடு, உயர்தரத்தில் படம் வரவேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார்” என்றார்.

    தயாரிப்பாளர் சோழ சக்ரவர்த்தி பகிர்ந்து கொண்டதாவது, “தொழில்முனைவராக நான் சினிமாத்துறைக்குள் நுழைந்தாலும் அதன் ஏற்ற இறக்கங்கள் பற்றியும் தெரியும். மோகன் ஜி உடன் பணிபுரிந்தது எனக்கு சிறப்பான அனுபவம். எந்தவொரு குழப்பமோ சந்தேகமோ இல்லாமல் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நிறைவடைந்தது தயாரிப்பாளராக எனக்கு பெருமகிழ்ச்சி. சினிமா மீதான நம்பிக்கையும் இன்னும் அதிகரித்துள்ளது. நடிகர் ரிச்சர்ட் ரிஷி மற்றும் ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றி. இவர்கள் கொடுத்த ஆதரவு என்னை இன்னும் அதிக படங்கள் தயாரிக்க ஊக்கமளித்துள்ளது” என்றார்.

    தமிழ்- தெலுங்கு என இரு மொழிகளில் ஹிஸ்டாரிக்கல் ஆக்‌ஷன் கதையாக உருவாகியுள்ள ‘திரெளபதி 2’ படத்தை ஜி.எம். ஃபிலிம் கார்பரேஷனுடன் இணைந்து நேதாஜி புரொடக்சன்ஸ், சோழ சக்ரவர்த்தி தயாரித்துள்ளார்.

    14 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் கதையை பிரம்மாண்ட காட்சிகளுடனும் திறமையான நடிகர்களுடனும் அந்த காலத்திற்கே பார்வையாளர்களை அழைத்து செல்ல இருக்கிறது இந்தத் திரைப்படம். போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், டிசம்பர் மாதம் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தின் புரோமோஷன் பணிகளை படக்குழு விரைவில் தொடங்க உள்ளது.

    நடிகர்கள்: ரிச்சர்ட் ரிஷி, ரக்‌ஷனா இந்துசுதன், நட்டி நடராஜ், Y.G. மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராஜ் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கெளராங், திவி, தேவயாணி ஷர்மா மற்றும் அருணோதயன்.

    தொழில்நுட்பக்குழு விவரம்:

    எழுத்து, இயக்கம்: மோகன் ஜி,
    வசனம்: பத்மா சந்திரசேகர் மற்றும் மோகன் ஜி,
    இசை: ஜிப்ரான் வைபோதா,
    ஒளிப்பதிவு: பிலிப் ஆர். சுந்தர்,
    நடனம்: தனிகா டோனி,
    சண்டைப்பயிற்சி: ஆக்‌ஷன் சந்தோஷ்,
    படத்தொகுப்பு: தேவராஜ்,
    கலை இயக்கம்: கமலநாதன்.

  • Netaji Productions Chola Shakkaravarthi & G.M. Film Corporation present

    Filmmaker Mohan G Directorial

    Richard Rishi starrer “Draupathi 2” shooting wrapped up!|

    As the nation celebrates Navaratri, fans of historical cinema have reason to rejoice: the makers of much-anticipated Draupathi 2, the title based on the religiously celebrated and worshipped entity, have a good news to share. The team that kick-started the shooting in Mumbai has successfully wrapped up the entire filming with Ariyallur schedule. The film is directed by critically-acclaimed filmmaker Mohan G, featuring Richard Rishi in the lead role. Right from the film’s announcement and dashing the first look poster that gave a promising impression about this film being created as a visually grand and emotionally compelling historical drama, the expectations sky-rocketed among the cinephiles and industry.

    Sharing the good news on completing the shoot, Director Mohan G states, “No matter how meticulously a director plans, the execution ultimately depends on the strong support of the producer, particularly for logistical challenges. Although this marks the maiden production of Chola Shakkaravarthi sir, his insatiable passion for cinema and prior experience of watching more films, and understanding the art and the creation process, ensured that we upheld the highest standards of quality and creative freedom throughout.”

    Producer Chola Shakkaravarthi says, ”As an entrepreneur entering the film industry, I was conscious of its unpredictable nature of showbiz. However, working alongside Mohan G and his meticulously structured approach impressed me greatly. The shooting was completed ahead of schedule, and he has been a producer’s delight in clearing off my doubts of cloudiness and dilemma, by assuring that cinema industry is a good place to stay back and explore the dreams. My humble thanks to actor Richard Rishi and the whole team for being an immense support. Their unconditional support has reinvigorated my enthusiasm and strengthened my resolve to produce more films of this calibre.”

    Draupathi 2, a Tamil-Telugu bilingual historical action drama, is being produced by Chola Shakkaravarthi of Netaji Productions in association with G.M Film Corporation.

    While Rakshana Indusudan plays the female lead, Natti Natraj plays a significant role. The film also features Y. G. Mahendran, Nadodigal Barani, Saravana Subbiah, Vel Ramamoorthy, Siraj Johnny, Dinesh Lamba, Ganesh Gaurang, Divi, Devayani Sharma, and Arunodayan.

    The dialogues for the film are jointly written by writer Padma Chandrasekhar and Mohan G. Music is composed by Ghibran Vaibodha. Cinematography is handled by Philip R. Sundar, choreography by Thanika Tony, stunt coordination by Action Santosh, editing by Devaraj, and art direction by Kamalnathan.

    The project’s completion marks a significant milestone, heralding a film that promises to transport audiences to the grandeur of 14th-century South India with compelling storytelling, striking visuals, and a stellar ensemble cast. With the postproduction work briskly progressing, the makers will be soon releasing the promotional posters that could head the film towards the December release.

  • திரையிட்ட இடங்களில் எல்லாம் திருவிழா என்கிற அளவுக்கு மாபெரும் வெற்றி படைப்பாக படையாண்ட மாவீரா,

    மக்களையும் திரைப்பட ரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டிருக்கிற படையாண்ட மாவீரா திரைப்படத்தின் விமர்சனங்கள் திறனாய்வுகள் அனைத்திலும் எனது வசனத்தை குறிப்பிட்டு பாராட்டுகிற உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி

    திரையரங்குகளில் எல்லாம் மக்கள் பேராதரவை தந்து கொண்டிருக்கிறார்கள்..

    பல இடங்களில் உற்சாகமாக கைத்தட்டி ஆரவாரம் செய்து வரவேற்று வாழ்த்துகிறார்கள்.

    தமிழர்கள்,மற்றும்
    திரைக்கலை ரசிகர்கள் அனைவருக்குமான
    இந்த திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த மகத்தான பணியை செய்யும் உங்கள் அனைவருக்கும் படையாண்ட மாவீரா வசனகர்த்தா ஆகிய எனது சார்பிலும் படக்குழுவினர் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவரின் சார்பிலும் மனம் நிறைந்த நன்றி.

    அன்புடன்
    பாலமுரளி வர்மன்

  • உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சி நடத்தும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா!

    இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!

    KYN வழங்கும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ‘The U1niverse Tour’ இசை நிகழ்ச்சி டிசம்பர் 13 முதல் தொடங்க இருக்கிறது. முதலாவதாக, சென்னை YMCA மைதானத்தில் தொடங்க இருக்கிறது. டிக்கெட் பதிவு செய்யும் முதல் ஆயிரம் பேருக்கு யுவனின் கையொப்பமிட்ட டி-ஷர்ட் இலவசமாக வழங்கப்படும். இதுமட்டுமல்லாது, 10 அதிர்ஷ்டசாலி ரசிகர்களுக்கு யுவனுடன் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

    உங்களுக்கான டிக்கெட்டை KYN செயலியில் பதிவு செய்யுங்கள். யுவன் இசையை கொண்டாடும் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

  • Prasanth Varma, Kalyan Dasari, S. J. Suryah, Riwaz Ramesh Duggal, RKD Studios, PVCU’s Adhira Shoot in Progress

    Creative genius Prasanth Varma, who has carved a niche for himself with his unique and larger-than-life entertainers, is set to collaborate with RKD Studios again for a larger-than-life superhero spectacle! After breaking new ground in Tollywood with the zombie genre and daring to bring India’s first original superhero saga HanuMan, the visionary filmmaker is now taking his dream a step further. His next chapter introduces a new hero – Kalyan Dasari, making his grand debut as the lead in Adhira, alongside prominent actor S. J. Suryah. RKD Studios, being led by Riwaz Ramesh Duggal, is bankrolling this grand-scale prestigious project, marking a significant production venture for the company. This crazy project is being directed by Sharan Koppisetty.

    Rooted in the essence of Indian itihasas yet packaged with modern cinematic flair, Adhira is set to carry forward the ambitious vision of the Prasanth Varma Cinematic Universe (PVCU). Prasanth Varma is laying the foundation for India’s own homegrown superhero universe. Each story stands apart with its unique premise, visual grammar, and larger-than-life storytelling, while still weaving into an interconnected world. The shoot of the movie is presently underway. Meanwhile, the makers revealed S. J. Suryah’s character poster.

    In the backdrop, a colossal volcano erupts with a fiery rage, spewing molten lava as thick ash that engulfs the skies. Emerging from the chaos, S. J. Suryah stands menacingly with bull-like horns, his fierce gaze amplified by his raw tribal attire, embodying the aura of a ruthless demon. In front of him, Kalyan Dasari kneels with unshaken resolve, looking upward with determination blazing in his eyes. Clad in sleek, modern, battle-ready armor, he exudes the aura of a true superhero, perfectly justifying the name Adhira. The poster vividly teases an epic showdown between the mighty hero Adhira and the formidable demon, promising a clash of power, grit, and destiny.

    Witness the epic battle between hope and darkness! Kalyan Dasari reckons his super-powers, an electrifying force of justice, battling to protect Dharma from destruction. Adhira is a volcanic eruption that will erupt and spark your emotions in the theatres. As Adhira battles chaos, action explodes at lightning speed, leaving you on the edge of your seat. With heart-stopping stunts, breathtaking visuals, and high-octane drama, this film is a “thunderclap” that will leave you breathless.

    Shivendra, who previously worked with Prasanth Varma for HanuMan, handles the camera for the new movie. Sri Charan Pakala known for his riveting background scores joins the crew as Music Director, where as Sri Nagendra Tangala handles the Production Design. The other cast and technical crew of this movie will be revealed later.

    Cast: Kalyan Dasari, S. J. Suryah

    Technical Crew:
    Created by: Prasanth Varma
    Banner: RKD Studios
    Presented by: RK Duggal
    Produced by: Riwaz Ramesh Duggal
    Directed by: Sharan Koppisetty
    Music Director: Sri Charan Pakala
    Executive Producer: Venkat Kumar Jetty
    DOP: Shivendra Dasaradhi
    Production Designer: Sri Nagendra Tangala
    Costume Designer: Lanka Santoshi
    Publicity Designer: Ananth Kancherla
    PRO: Sathish Kumar,S2 Media
    Social Media & PR: MATH, Haashtag Media

  • பிரசாந்த் வர்மா, கல்யாண் தாசரி, எஸ்.ஜே.சூர்யா, ரிவாஸ் ரமேஷ் டுக்கால், ஆர்கேடி ஸ்டுடியோஸ், PVCU வின் ‘அதீரா’ படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது !!

    அதீராவின் காலம் தொடங்கி விட்டது!

    தனது தனித்துவமான இயக்கத்தில் ரசிகர்களைக் கவர்ந்துள்ள சினிமா வித்தகர் பிரசாந்த் வர்மா, மீண்டும் ஆர்கேடி
    ஸ்டுடியோஸுடன் இணைந்து ஒரு மாபெரும் சூப்பர் ஹீரோ பிரம்மாண்டத்தை உருவாக்க உள்ளார்.

    டோலிவுட்டில் ஜாம்பி வகை படத்தை அறிமுகப்படுத்தியதும், இந்தியாவின் முதல் ஒரிஜினல் சூப்பர் ஹீரோ சாகாவான ஹனுமான் படத்தை உருவாக்கியதும் இவர்தான். அந்த கனவை இன்னொரு படி முன்னேற்றும் விதமாக, இப்போது அவர் தனது அடுத்த அத்தியாயமான அதீராவை அறிமுகப்படுத்துகிறார். இதில், கல்யாண் தாசரி ஹீரோவாக தனது பிரம்மாண்ட அறிமுகத்தைச் செய்கிறார். அதோடு, முன்னணி நடிகர் எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

    ரிவாஸ் ரமேஷ் டுக்கால் தலைமையிலான ஆர்கேடி ஸ்டுடியோஸ், இந்த பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரித்து வருகிறது. இந்த புதிய திரைப்படத்தை ஷரண் கோப்பிசெட்டி இயக்குகிறார்.

    இந்திய இதிகாசங்களின் சாரத்தை கொண்டும், நவீன திரைத்திறனுடன் இணைந்தும் உருவாகும் அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும். இந்த யுனிவர்ஸின் ஒவ்வொரு பகுதியும் தனித்துவமான பின்புலம், காட்சியமைப்பு, மற்றும் மிகப்பெரிய கதைக்களம் கொண்டதாக இருக்கும். ஆனாலும் அவை அனைத்தும் ஒன்றாக இணைந்து ஒரு முழுமையான சூப்பர்ஹீரோ யுனிவர்ஸாக விரிகின்றன.

    இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், படக்குழு எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டுள்ளது.

    போஸ்டரில் ஒரு மாபெரும் எரிமலை வெடித்து, தீக்கங்குகளை வெளிப்படுத்துகிறது. ஆகாயம் முழுவதும் புகை மற்றும் சாம்பலால் மூடப்படுகிறது. அந்தக் குழப்பத்திலிருந்து, எஸ்.ஜே.சூர்யா, காளை போன்ற கொம்புகளுடன், பழங்குடி போர்வீரர் தோற்றத்தில், கொடூரமான அசுரனாக எழுகிறார். அவருக்கு முன், கல்யாண் தாசரி சூப்பர் ஹீரோ வேடத்தில், நவீன போர்க்கவசம் அணிந்து, தன்னம்பிக்கையுடன் மண்டியிட்டு எழுந்து நிற்கிறார். இந்த காட்சி, ஒரு அபாரமான ஹீரோ–வில்லன் மோதலை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

    நம்பிக்கை vs இருள் எனும் இந்த மாபெரும் போராட்டத்தில், அதீரா தனது மின்னல் சக்திகளை வெளிப்படுத்தி, தர்மத்தைக் காப்பாற்றுகிறார். எரிமலை போல வெடிக்கும் அதீரா, பார்வையாளர்களின் உணர்ச்சிகளை திரையரங்கில் கவரப்போகிறார். அதிரடி சண்டைகள், மூச்சுத் திணற வைக்கும் காட்சிகள், மற்றும் பரபரப்பான டிராமா—இவை அனைத்தும் “மின்னல் முழக்கம்” போல உங்களை மெய்சிலிர்க்க வைக்கும்.

    பிரசாந்த் வர்மாவுடன் ஹனுமான் படத்தில் பணியாற்றிய ஷிவேந்திரா கேமரா பொறுப்பை ஏற்றுள்ளார். பின்னணி இசையில் சிறப்பான திறமைகொண்ட ஸ்ரீ சரண் பகாலா இசையமைக்கிறார். ஸ்ரீ நாகேந்திர தங்காலா புரொடக்‌ஷன் டிசைன் கவனிக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரைப் பின்னர் அறிவிக்கப்படவுள்ளனர்.

    நடிகர்கள்

    கல்யாண் தாசரி, எஸ்.ஜே.சூர்யா

    தொழில்நுட்பக் குழு

    உருவாக்கம் : பிரசாந்த் வர்மா

    பேனர் : ஆர்கேடி ஸ்டுடியோஸ்

    வழங்குபவர் : ஆர்கே டுக்கால்

    தயாரிப்பு : ரிவாஸ் ரமேஷ் டுக்கால்

    இயக்கம் : ஷரண் கோப்பிசெட்டி

    இசையமைப்பாளர் : ஸ்ரீ சரண் பகாலா

    எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசர் : வெங்கட் குமார் ஜெட்டி

    ஒளிப்பதிவு : ஷிவேந்திரா தாசரதி

    புரொடக்‌ஷன் டிசைனர் : ஸ்ரீ நாகேந்திர தங்காலா

    உடை வடிவமைப்பு : லங்கா சாந்தோஷி

    பப்ளிசிட்டி டிசைனர் : ஆனந்த் கஞ்சேர்லா

    பி.ஆர்.ஓ : சதீஷ்குமார் S2 Media

    Prasanth Varma, Kalyan Dasari, S. J. Suryah, Riwaz Ramesh Duggal, RKD Studios, PVCU’s Adhira Shoot in Progress

    The era of Adhira begins!

    Creative genius Prasanth Varma, who has carved a niche for himself with his unique and larger-than-life entertainers, is set to collaborate with RKD Studios again for a larger-than-life superhero spectacle! After breaking new ground in Tollywood with the zombie genre and daring to bring India’s first original superhero saga HanuMan, the visionary filmmaker is now taking his dream a step further. His next chapter introduces a new hero – Kalyan Dasari, making his grand debut as the lead in Adhira, alongside prominent actor S. J. Suryah. RKD Studios, being led by Riwaz Ramesh Duggal, is bankrolling this grand-scale prestigious project, marking a significant production venture for the company. This crazy project is being directed by Sharan Koppisetty.

    Rooted in the essence of Indian itihasas yet packaged with modern cinematic flair, Adhira is set to carry forward the ambitious vision of the Prasanth Varma Cinematic Universe (PVCU). Prasanth Varma is laying the foundation for India’s own homegrown superhero universe. Each story stands apart with its unique premise, visual grammar, and larger-than-life storytelling, while still weaving into an interconnected world. The shoot of the movie is presently underway. Meanwhile, the makers revealed S. J. Suryah’s character poster.

    In the backdrop, a colossal volcano erupts with a fiery rage, spewing molten lava as thick ash that engulfs the skies. Emerging from the chaos, S. J. Suryah stands menacingly with bull-like horns, his fierce gaze amplified by his raw tribal attire, embodying the aura of a ruthless demon. In front of him, Kalyan Dasari kneels with unshaken resolve, looking upward with determination blazing in his eyes. Clad in sleek, modern, battle-ready armor, he exudes the aura of a true superhero, perfectly justifying the name Adhira. The poster vividly teases an epic showdown between the mighty hero Adhira and the formidable demon, promising a clash of power, grit, and destiny.

    Witness the epic battle between hope and darkness! Kalyan Dasari reckons his super-powers, an electrifying force of justice, battling to protect Dharma from destruction. Adhira is a volcanic eruption that will erupt and spark your emotions in the theatres. As Adhira battles chaos, action explodes at lightning speed, leaving you on the edge of your seat. With heart-stopping stunts, breathtaking visuals, and high-octane drama, this film is a “thunderclap” that will leave you breathless.

    Shivendra, who previously worked with Prasanth Varma for HanuMan, handles the camera for the new movie. Sri Charan Pakala known for his riveting background scores joins the crew as Music Director, where as Sri Nagendra Tangala handles the Production Design. The other cast and technical crew of this movie will be revealed later.

    Cast: Kalyan Dasari, S. J. Suryah

    Technical Crew:
    Created by: Prasanth Varma
    Banner: RKD Studios
    Presented by: RK Duggal
    Produced by: Riwaz Ramesh Duggal
    Directed by: Sharan Koppisetty
    Music Director: Sri Charan Pakala
    Executive Producer: Venkat Kumar Jetty
    DOP: Shivendra Dasaradhi
    Production Designer: Sri Nagendra Tangala
    Costume Designer: Lanka Santoshi
    Publicity Designer: Ananth Kancherla
    PRO: Sathish Kumar,S2 Media
    Social Media & PR: MATH, Haashtag Media

  • chapters of the Indian leader’s life. The film was officially announced on September 17, coinciding with PM Modi’s 75th birthday.

    Malayalam star Unni Mukundan is set to portray Prime Minister Narendra Modi in the upcoming biopic Maa Vande, a multilingual film that aims to explore the lesser-known, emotional chapters of the Indian leader’s life. The film was officially announced on September 17, coinciding with PM Modi’s 75th birthday.

    Produced by Silver Cast Creations and directed by Kranthi Kumar C. H., Maa Vande promises to go beyond politics, highlighting the deeply personal aspects of Modi’s journey—from his humble beginnings in Gujarat to his rise as one of the most influential figures in contemporary India.

    “I am humbled to share that I will be portraying the Honourable Prime Minister of India, Shri Narendra Damodardas Modi Ji, in Maa Vande,” Mukundan said in an official statement. “Having grown up in Ahmedabad, I first knew him as the Chief Minister during my childhood. Years later, in April 2023, I had the privilege of meeting him in person—a moment that left an indelible mark on me.”

    The actor, known for his intense performances in Malayalam cinema, described the role as “overwhelming and inspiring.” Mukundan also revealed that two words spoken by Modi—“Jhookvanu Nahi” (Never bow down)—have stayed with him and now serve as a guiding principle in both his personal life and professional approach to the role.

    The film’s title, Maa Vande (translated as Mother, I Salute Thee), reflects its emotional anchor: the relationship between Modi and his late mother, Heeraben Modi. Director Kranthi Kumar noted that this bond is central to the narrative, offering a lens through which viewers can better understand Modi’s formative years and character.

    “This isn’t a political drama or propaganda,” the director said. “At its heart, this is a story about a son and his mother. It’s about how love, discipline, and values shape the journey of a man who would go on to lead a nation.”

    Backed by a high-profile technical team, Maa Vande brings together some of Indian cinema’s finest talent. The cinematography will be handled by K. K. Senthil Kumar (Baahubali), editing by A. Sreekar Prasad, and production design by Sabu Cyril. Music will be composed by Ravi Basrur, best known for his work in the KGF franchise, with action sequences choreographed by King Solomon.

    The film is slated for a pan-Indian release in multiple languages, including Hindi, Malayalam, Tamil, Telugu, Kannada, and English. Production is expected to begin soon, with a theatrical release planned for late 2026.

    Unni Mukundan, who has steadily expanded his fan base across South India and beyond, said the role represents not just an acting challenge, but a personal calling.

    “This is not just another character for me—it’s a responsibility,” he said. “It’s about honouring the journey of a man who came from very little and gave his everything to serve the nation. I hope to do justice to the essence of that journey.”

    As anticipation builds, Maa Vande could become one of the most talked-about biopics in recent Indian cinema, drawing attention not only for its subject matter but for its emotional and artistic ambitions.
    On the occasion of actor Unni Mukundan’s birthday today the makers are releasing new posters.

  • பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் கதாபாத்திரத்தில் நடிப்பது பெரிய பொறுப்பு” நடிகர் உன்னி முகுந்தன்!

    பிரதமர் நரேந்திர மோதியின் பயோபிக்காக பல மொழிகளில் உருவாகும் ‘மா வந்தே’ படத்தில் நரேந்திர மோதியாக நடிக்கிறார் மலையாள நடிகர் உன்னி முகுந்தன். மோதியின் அதிகம் வெளிவராத உணர்வுப்பூர்வமான பக்கங்களை பேசுவதை நோக்கமாக கொண்டுள்ளது இந்தப் படம். நரேந்திர மோதியின் 75 ஆவது பிறந்த தினமான செப்டம்பர் 17 அன்று இந்தப் படம் குறித்தான அறிவிப்பும் வெளியானது.

    சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் கிராந்தி குமார். C. H. இயக்கும் ‘மா வந்தே’ படம் மோதியின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்வை உணர்வுப்பூர்வமாக பேசும். குஜராத்தில் ஆரம்பித்த அவரது பயணம் இந்தியாவை செதுக்கும் நபராக அவர் எவ்வாறு மாறினார் என்பதையும் காட்ட இருக்கிறது.

    இதுகுறித்து உன்னி முகுந்தன் பகிர்ந்து கொண்டதாவது, “மரியாதைக்குரிய இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர தாமோதரதாஸ் மோதி அவர்களாக ‘மா வந்தே’ படத்தில் நடிப்பது எனக்கு பெருமை. அகமதாபாத்தில் சிறுவனாக நான் வளர்ந்தபோது அவரை முதலில் முதலமைச்சராக தான் தெரியும். அதன் பிறகு ஏப்ரல் 2023 ஆம் ஆண்டு அவரை நேரில் சந்தித்தது என் வாழ்வின் மறக்க முடியாத தருணம். இது எனக்கு இன்னொரு கதாபாத்திரம் அல்ல! பெரிய பொறுப்பு. எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர் இந்திய தேசத்தின் வளர்ச்சிக்காக அனைத்தையும் தியாகம் செய்ததை பற்றி பேசும் இந்தக் கதைக்கு நியாயம் செய்வேன் என்று நம்புகிறேன்” என்றார்.

    மலையாள சினிமாவில் தனது திறமையான நடிப்புக்கு பெயர் பெற்ற உன்னி முகுந்தன், மோதி கதாபாத்திரத்தில் நடிப்பது தனக்கு பெருமகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருபதாகவும் கூறுகிறார். “ஒரு விஷயத்தில் இருந்து எப்போதும் பின்வாங்கக் கூடாது” என்று தன்னிடம் மோதி சொன்னதை தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையிலும் பின்பற்றுவேன் என்கிறார்.

    மோதிக்கும் அவரது மறைந்த தாயார் ஹீராபென் மோதிக்கும் இடையிலான உணர்வுப்பூர்வமான பிணைப்பை பிரதிபலிக்கும் வகையில் ‘மா வந்தே’ (அம்மா நான் உன்னை வணங்குகிறேன்) எனப் படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது. இதுவே படத்தின் மையக் கருவாக இருக்கும் என்றும் இந்தப் படம் மூலம் மோதியின் இன்னொரு பக்கத்தையும் அவரின் வளர்ச்சியையும் பார்வையாளர்கள் நன்றாக புரிந்து கொள்ள முடியும் என்கிறார் இயக்குநர் கிராந்தி குமார்.

    மேலும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, “இது அரசியல் கதையோ பிரச்சாரமோ கிடையாது. அன்பான தாய்- மகன் பற்றியது. அன்பு, ஒழுக்கம் போன்றவை ஒரு தேசத்தை வழிநடத்தும் மனிதனின் பயணத்தை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பது பற்றியது” என்றார்.

    இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஆங்கிலம் என பான் இந்திய மொழிகளில் படம் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் புரொடக்‌ஷன் பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது.

    ‘மா வந்தே’ படம் மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் நிலையில் சினிமாவில் அதிகம் பேசப்பட்ட பயோபிக் படங்களில் ஒன்றாக ‘மா வந்தே’ இருக்கும் என படக்குழு உறுதியளிக்கிறது.
    உன்னி முகுந்தனின் பிறந்த நாளான இன்று படக்குழுவினர் சிறப்பு போஸ்டர்ஸ் வெளியிட்டு தங்கள் அன்பை வெளிப்படுத்தினர் .

    தொழில்நுட்பக் குழு விவரம்:

    ஒளிப்பதிவு: கே. கே. செந்தில்குமார் (‘பாகுபலி’ படப்புகழ்),
    படத்தொகுப்பு: ஏ. ஸ்ரீகர் பிரசாத்,
    தயாரிப்பு வடிவமைப்பு: சாபு சிரில்,
    இசை: ரவி பஸ்ரூர் (‘கேஜிஎஃப்’ படப்புகழ்),
    சண்டைப்பயிற்சி: கிங் சாலமன்.