Blog

  • BLACK THREAD premium Menswear launched at Taramani

    BlackThread the modern classic, lightweight luxury everyday Menswear for all seasons launched by Honourable Tan Sri M.Ramasamy – Vice President of Malaysian Indian Congress & Chairman of Mic Perak, Malaysia,Honourable Puan Sri Indra Ramasamy smp Malaysia, Actor Master Mahendran, Mr.Karthik Founder of BLACK THREAD.

    Black Thread has opened its Third Outlet store dedicated to menswear collections. The retail space is located in Taramani Intended to serve as a one-stop shopping destination, the menswear store offers a wide selection of pieces from the category, In Shirts, Polos, Jeans, Linen pants Cargis, corduroy Travel available from Sizes S to 2xL.

    A private shopping experience in the form of an exclusive area further enhances space for Lightweight luxury everyday wear for all seasons. Black Thread vision is to provide Quality with affordable prices stands unique in the modern classic look & Budget Friendly.

    Black Thread is a crafted Premium Fabrics with Elegant Designs & Good Threads announces 50% Discounts and buy 2 get one free offer and much more.

    Black Thread located at No.1 Kambar Street, Thanthai Periyar Nagar, Taramani Chennai – 600113.

  • சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11ல் இசை ஞானி இளையாராஜாவை கொண்டாடும் விதமாக ‘Celebrating இசை’ !!

    சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 பாடகர் சரணுக்கு, இளையராஜா டீசர்டை பரிசளித்த யுவன்சங்கர் ராஜா !!

    இயக்குனர் வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, கங்கை அமரன் கலந்துகொண்ட இளையராஜா ஸ்பெஷல் சூப்பர் சீனியர் சீசன் 11 !!

    தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வரும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின், 11 வது சீசன் வெகு கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிகழ்ச்சியில் இந்த வாரம் இசைக்கடவுள் இசை ஞானி இளையாராஜாவை கொண்டாடும் விதமாக ‘Celebrating இசை’ என்ற தலைப்பில் அடுத்த மூன்று எபிசோடுகள் நடைபெறவுள்ளது. முழுக்க முழுக்க இளையராஜா பாடல்களை பங்கேற்பாளர்கள் பாடவுள்ளனர்.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் கங்கை அமரன் ஆகிய இருவரும் கலந்துகொண்டு பாடகர்களை ஊக்குவித்தனர்.

    அச்சு அசல் இளையராஜாவின் பிரதி போலவே பாடும் பாடகர் சரணுக்கு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இளையராஜாவின் புகைப்படம் பதித்த டீசர்டை பரிசளித்து வாழ்த்தியது மிக நெகிழ்வான தருணமாக அமைந்தது.

    தமிழக மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்ட இளையராஜாவின் இசையை கொண்டாடும் வகையிலும், அவரின் தீவிரமான ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. வழக்கத்தை விடவும் இந்த வாரம் நிகழ்ச்சி பெரிய அளவில் களைகட்டும் என ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.

    பல இளம் திறமையாளர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி, இந்த முறையும் பல அதிரடி புதுமைகளுடன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.

    சூப்பர சிங்கர் சீனியர் 11 நிகழ்ச்சியை சனி, ஞாயிறு கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியிலும், ஜியோ ஸ்டார் ஓடிடி தளத்திலும் கண்டுகளியுங்கள்.

  • அந்த 7 நாட்கள் திரை விமர்சனம்

    வானியற்பியல் (Astrophysics) ஆராய்ச்சி மாணவரான நாயகன் அஜிதேஜ், சூரியகிரகண ஆய்வில் “பழமையான டெலஸ்கோப் மூலம் வாணி ஆய்வு செய்கிறார் அப்பொழுது பாதிப்பால் அதிசய திறன் ஒன்றை அடைகிறார். அதன் மூலம் பிறருக்கு நடக்க இருக்கும் கெட்ட விசயங்களை முன் கூட்டியே அறிந்துக் கொள்கிறார். இதற்கிடையே, 7 நாட்களில் தனது காதலி ஸ்ரீஸ்வேதாவுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட போவதை தனது அதிசய ஆற்றல் மூலம் அறிந்துக் கொள்ளும் நாயகன், அதில் இருந்து அவரை காப்பாற்ற முயற்சிக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா ?, இல்லையா ? என்பது தான் ‘அந்த 7 நாட்கள் திரைப்படத்தின் திரைக்கதை.

  • பல்டி திரை விமர்சனம்

    பல்டி கபடி படம் 4 நண்பர்கள் விளையாட்டாக செய்யும் தவறினால் அவர்களுக்கே தெரியாமல் ஒரு கேங்ஸ்டர் உலகிற்குள் சென்று அவர்களை வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை விறுவிறுப்பாக மற்றும் எமோஷ்னல் ட்ராமாவாக படமாக்கி திரையில் ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர் உன்னி.

    பஞ்சமி, பொற்றாமரை இரண்டு கபடி குழு-க்கும் எப்போதும் கடும் போட்டி நடக்கிறது, பொற்றாமரை டீம் செல்வராகவன் வைத்துள்ளார், அவர் அதிக வட்டிக்கு  விடுபவர். இவருக்கு அவருடைய டீம் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக கொஞ்சம் நாள் என் கபடி குழுவில் விளையாடுகிறார்களா என்று பஞ்சமி கபடி குழு விடம் கேட்க, கேப்டன் சாந்தனுவும் பணத்திற்காக சம்மதிக்கிறார் .
    கபடி வீரரான சாந்தனு பணத்திற்கு ஆசைப்பட்டு ஒரே நேரத்தில் இரண்டு டீம் இடம் சம்மதம் தெரிவிக்கிறார் ஆனால், சாந்தனு ஏற்கனவே அல்போன்ஸ் புத்திரன் வைத்திருக்கும் ஷோ பாய்ஸ் கபடி டீம்-ல் ஆட சம்மதிக்க, பணத்திற்காக தற்போது பொற்றாமரை டீம்-ல் விளையாட சம்மதிக்க அல்போன்ஸ் புத்திரன் ஈகோ அதிகமான, அவர் செல்வராகவனுக்கு சொந்தமான ஒரு கார்-யை தூக்குகிறார், அந்த கார் தங்களால் தான் போனது என்பதால் சமாதானம் பேச போன ஷான் நிகம், சாந்தனும் மற்றும் அவர் நண்பர்களை அல்போன்ஸ் தாக்க, அங்கு அவரை தாக்கி விட்டு ஷான் நிகம் & கோ கார்-யை எடுத்து வர, அடுத்தடுத்து இவர்கள் பகை எங்கு கொண்டு சென்றது
    சாந்தனு தன் நண்பர்களுக்காக ஏன் எதிராக மாறினார்?
    நாயகன் ஷான் நிகம் செல்வராஜ் எதிர்த்தது ஏன்?
    நான்கு நண்பர்களின் வாழ்க்கை கபடி விளையாட்டின் மூலம் எந்த சூழ்நிலை ஏற்படுத்தியது?
    திரைப்படத்தின் நாயகி  செல்வராகவனை எதிர்த்தது ஏன்? போன்ற கேள்விக்கு பதில் பல்டி திரைப்படத்தின் கதை.

    செல்வராகவன் வில்லத்தனம் நடிப்பிலும் திரையிலும் ரசிக்க வைத்துள்ளார், ஜீ-மா கதாபாத்திரம் நல்ல நடிப்பு. அதிலும் இரண்டாம் பாதியில் ஜீ-மா ஆடும் ஆட்டத்தில் 4 நண்பர்கள் சிக்கும் இடம் நல்ல திருப்பம்.

  • ரைட் திரை விமர்சனம்

    “ரைட்” திரைப்படம் ஒரு காவல் நிலையத்தை மையமாகக் கொண்டு நடைபெறும் சஸ்பென்ஸ் திரில்லர் வகை படமாகும் இதில் நடித்த அனைவரும் தங்களது பங்களிப்பு சிறப்பாக கொடுத்துள்ளனர் திரைக்கதை தொடக்கத்தில் காவல் நிலையத்தில் இருக்கும் காவலர்கள் பிரதமர் வருகையால் பாதுகாப்பிற்காக இன்ஸ்பெக்டர் நட்டியுடன்  ஒரு டீமோடு போய் விட, ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டர் , பெண் போலீஸ் , ஏட்டு, அந்த ஏட்டுக்கு பொருட்களை திருடிக் கொண்டு வந்து தரும் ஒரு திருடன், லாக்கப்பில் சில கைதிகள் மட்டும் இருகின்றனர் . தன் மகன் (அருண் பாண்டியன்) காணாமல் போனது குறித்து  புகார் தர வந்த அவரை அசிங்கப்படுத்தி அனுப்புகின்றனர் ஏட்டுவும் சப் இன்ஸ்பெக்டரும்.
     அரசியல்வாதியின் மகன் தனது அடியார்களை போலீஸ் ஸ்டேஷன் வந்து லாக்கப்பில் உள்ள கைதிகளை ஏட்டுவின் உதவியோடு மீட்டுக் கொண்டு போகிறான் .


     அருண் பாண்டியன் மகனைக் கண்டு பிடிக்கச் சொல்லி  கமிஷனர் அலுவலகம் செல்கிறார் அங்கும் அவர் அவமானத்துக்கு ஆளாகிறார்.

     இந்த நிலையில் திருட்டில் இருந்து மீட்கப்பட்ட நகைகளை மக்களுக்குக் கொடுக்கும் நிகழ்ச்சி காவல் நிலையத்தில் நடக்க, அதோடு சம்மந்தம் இல்லாமல் ஒரு லேப் டாப்பும் சேர்ந்து இருக்கிறது .  எப்படி வந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை.
     அந்த நேரம் பார்த்து  கல்யாண ஏற்பாட்டுக்காக  லீவில் இருக்கும் பெண் சப் இன்ஸ்பெக்டர் பத்திரிக்கை கொடுக்க வருகிறார் .
     அவர் ஐ மேக் லேப் டாப்பை இயக்குவது பற்றி ஏட்டுவுக்கு கற்றுக் கொடுக்க,
     ஆன் செய்யப்பட்டதும் தானாக இயங்கும் கம்பியூட்டர் ,வழியே வரும் ஒரு குரல், ஏட்டு  உட்கார்ந்து இருக்கும் இருக்கைக்கு கீழும் , ஸ்டேஷனை சுற்றியும் வெடிகுண்டு  இருக்கிறது . யார் வேண்டுமானலும் உள்ளே வரலாம். ஆனால் வந்தவர் வெளியே போக நினைத்தால் பாம் வெடிக்கும் . எல்லோரும் சாவீர்கள் என்கிறது .
     ஆட்கள் உள்ளே வர, வெளியே ஓடிய ஒருவன் வெடித்து உயிர் ஆபத்துக்குப் போக, எல்லோருக்கும் சீரியஸ்நெஸ் புரிகிறது .
     எல்லோரும் உயிரோடு தப்பிக்க வேண்டும் என்றால் நீதிபதி ஸ்டேஷனுக்கு வந்து விசாரணை செய்ய வேண்டும் என்கிறது  மிரட்டல் குரல்.
    நீதிபதி  வர, போலீஸ் ஸ்டேஷனுக்குள் கோர்ட் செட்டப் உருவாகிறது .
    அரசியல்வாதிகளுக்கு  துணை போவதற்காக,  போலீசே ஒரு பெண்ணுக்கு அநியாயம் இழைத்த கதையை சொல்லி , அவன் கொண்டு வரப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் . இல்லை எனில் பாம் வெடிக்கும் என்கிறது மிரட்டல் குரல்  அடுத்து
    பெண்ணுக்கு அநியாயம் இழைத்த யார்?
    அருண் பாண்டியன் மகனை மீட்டாறா?
    காவல் நிலைய ரைட்டர்  வெடிகுண்டில் இருந்து மீட்கப்பட்டாரா?
    கால் நிலத்தில் பாம் வைத்தது மிரட்டியது யார்?
    போன்ற கேள்விக்கு பதில் ரைட் திரைப்படத்தின் கதை மற்றும் காவல் நிலையத்தில் என்ன நடக்கிறது என்பதை திகில் பரவ சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுப்ரமணியன் ரமேஷ்குமார்.

  • டிரான்: ஏரஸ்’ படத்தில் நடித்துள்ள ஜாரெட் லெட்டோ தனது ஹீரோ ஜெஃப் பிரிட்ஜஸ் பற்றி சிலாகிக்கிறார்!

    ‘டிரான்: ஏரஸ்’ படத்தில் ஜாரெட் லெட்டோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவரது மறக்க முடியாத பயணமாக ஜெஃப் பிரிட்ஜஸ் உடன் இணைந்து பணியாற்றியதை சொல்கிறார். ஆஸ்கார் விருது வென்ற ஜெஃப் பிரிட்ஜஸ் உடன் படப்பிடிப்பு தளத்தில் ஒன்றாக நேரம் செலவழித்ததையும், 1982 ஆம் ஆண்டு கல்ட் கிளாசிக் படத்தில் கெவின் ஃபிளினை திரையில் கொண்டு வந்தது பற்றியும் சிலாகித்து பேசினார்.

    பட புரோமோஷனில் பேசிய ஜாரெட், “அவர் என்னுடைய சிறந்த நண்பர். ஜெஃப் அன்பானவர், நகைச்சுவை உணர்வு கொண்டவர், பண்பானவர் என அவரைப்பற்றி நீங்கள் என்ன நினைத்தாலும் அதற்கு சரியாகப் பொருந்திப் போவார். படப்பிடிப்பு தளத்தில் அவருடன் செலவழித்த நேரம் என்றும் மறக்க முடியாது. எனக்கு அவருடன் நேரம் செலவிட இன்னும் சில நாட்கள் இருந்திருக்கலாம் எனத் தோன்றியது. எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். அவர் தன்னை சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதோடு, சிறந்த வாழ்க்கைக்கு உதாரணமாகவும் இருக்கிறார். அவர் முதல் முறையாக படப்பிடிப்பு தளத்திற்கு வந்தபோது, எல்லோரும் கைதட்டி வரவேற்றார்கள்” என்றார்.

    லெட்டோவைப் பொறுத்தவரை பிரிட்ஜஸ் வெறும் சக நடிகர் மட்டுமல்ல! அவர்தான் டிரானின் ஆன்மா. அவர் இல்லாமல் டிரான் படத்தைப் பற்றி யோசிப்பது கூட சாத்தியமற்றது என்கிறார் லெட்டோ.

    பிரிட்ஜஸ் தனக்கு படப்பிடிப்பு தளத்தில் Air என செல்லப்பெயர் வைத்ததாகவும் மகிழ்வுடன் சொல்கிறார் லெட்டோ. “இத்தனை வருடங்களில் அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். உங்கள் ஹீரோவுடன் சேர்ந்து நீங்கள் நடிப்பது எத்தனை சிறப்பான தருணம்” என்றார்.

    மேலும் சிறுவயதில் அவரைப் பார்த்து வியந்தது பற்றியும் கூறுகிறார், “12 வயது சிறுவனாக முதன் முதலில் அந்தப் படம் பார்த்தது என் வாழ்க்கையை மாற்றியது. அந்தப் படத்தின் தொழில்நுட்பம், கிரியேட்டிவிட்டி, ஃபன், அட்வென்ச்சர் எல்லாமே என்னை ஈர்த்தது. முதல் இரண்டு டிரான் படங்களில் அவர் நடிப்பில் மிரட்டியிருப்பார். அவருடன் இணைந்து பணியாற்றியது என் அதிர்ஷ்டம். அவரது வழியில் என்றும் நடக்க முயல்வேன்” என்றார்.

    டிஸ்னியின் ‘டிரான்: ஏரஸ்’ அக்டோபர் 10, 2025 அன்று இந்திய திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

  • Jared Leto Gushes Over His Hero Jeff Bridges in Tron: Ares: He’s the Dude, Man. He’s the Best

    Jared Leto is stepping into the Grid with Tron: Ares, but for him, one of the most unforgettable parts of the journey has been sharing the screen with the franchise’s original star, Jeff Bridges. Speaking about their time together on set, Jared couldn’t hold back his admiration for the Oscar-winning actor who first brought Kevin Flynn to life in the 1982 cult classic.

    Speaking to Entertainment Tonight during the promotions, Jared said, “Oh, he’s the dude, man. He’s the best. Everything—he’s everything that you think he’s going to be. He’s kind, he’s fun, he’s funny, he’s generous. Safe to say, some of the most memorable moments from making the movie were the days that we had with Jeff. I wish I had more. I look forward to more in the future. He’s just a good person to be around, a great example of an awesome career. And I think the first time he walked on set, everyone just started applauding.”

    For Leto, Bridges isn’t just a co-star but the soul of Tron. “It’s almost impossible to think of a Tron movie without him. Without him, you know? The malfunctioning program who wants to live.”

    The actor also revealed that Bridges even gave him a nickname (Air) on set. “As long as he wants it to stay, it stays,” Leto laughed. “But I’ve learned a lot from him over the years. He’s been a great teacher from afar. To work with one of your heroes is just a beautiful thing.”

    That hero-worship goes back to Leto’s childhood. “I walked into that movie when I was 12 years old, and it was one of those films that just changed my life. It was the technology, the creativity, the fun, the adventure. And he gave a brilliant performance in that first Tron, and of course the second one was incredible. So we are lucky to have him—and to kind of follow in his footsteps.”

    Disney’s TRON: Ares releases in Indian theatres on 10th October 2025 in English, Hindi, Tamil and Telugu.

  • இரவின் விழிகள் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

    “சின்ன படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காததற்கு ரெட் ஜெயண்ட்டை குற்றம் சொல்லாதீர்கள்” ; நடிகர் போஸ் வெங்கட் காட்டம்

    “படப்பிடிப்புக்கு முன்பு அம்பி.. படப்பிடிப்பு ஆரம்பித்ததும் அந்நியன்..” ; இரவின் விழிகள் இயக்குநருக்கு நாயகி நீமா ரே புகழாரம்

    “தமிழ் படைப்பாளர்களிடம் கிரியேட்டிவிட்டி எங்கே போனது ?” ; இரவின் விழிகள் விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் ஆதங்கம்

    “தயாரிப்பாளர்களே தங்கள் படங்களை சொந்தமாக ரிலீஸ் செய்ய வேண்டும்” ; இரவின் விழிகள் விழாவில் நடிகர் போஸ் வெங்கட்

    “சின்னப் படங்களை வாழவைக்க சூப்பர்ஸ்டார் ரஜினி போல சுயநலமில்லாத மனம் வேண்டும்” ; இயக்குநர் பேரரசு

    மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’.

    இந்தப்படத்தை இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்கியுள்ளார்.

    தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க மற்றொரு கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடித்திருக்கிறார்.

    கன்னடத்தில் வெளியான ‘பங்காரா’ என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நீமா ரே இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்….

    மேலும் முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்திற்கு ஏ.எம் அசார் இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஒளிப்பதிவை கவனிக்க, விடுதலை படத்தின் படத்தொகுப்பாளர் ஆர்.ராமர் மற்றும் வெங்கடேஷ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளனர்.

    சண்டைப் பயிற்சியை சரவெடி சரவணன் மற்றும் சூப்பர்குட் ஜீவா ஆகியோரும், நடனத்தை எல்கே ஆண்டனியும் வடிவமைத்துள்ளனர். பாடல்களை அரவிந்த் அக்ரம் எழுதியுள்ளார்.

    இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

    படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், பேரரசு, மு.களஞ்சியம், போஸ் வெங்கட், நடிகை நமீதாவின் கணவர் வீரா, நடிகை கோமல் சர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    இந்த நிகழ்வில்

    இயக்குநர் சிக்கல் ராஜேஷ் பேசும்போது,

    “படத்தின் தயாரிப்பாளர் மகேந்திரன் என் நண்பர். பலரிடம் இந்த கதையை நான் சொல்வதை பார்த்த அவர், நானே இந்த படத்தை தயாரிக்கிறேன் என்று முன் வந்தார். முதல் கட்ட படப்பிடிப்பிற்கு பிறகு மேற்கொண்டு நகர்வதில் சிக்கல் எழுந்தது.. ஆனால் கதை பிடித்து இருந்ததால் பல சிரமங்களை ஏற்றுக்கொண்டு இந்த படத்தைத் தயாரித்தார்.

    படத்தொகுப்பாளர் ராமர் படத்தொகுப்பை முடிந்தபின், படம் நன்றாக இருக்கிறது.. இன்னும் இரண்டு பாடல்களை சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்.

    மக்களை திருப்திப்படுத்துவதையும் தாண்டி இங்கே வியாபாரம் என்று ஒன்று இருக்கிறது. தயாரிப்பாளரும் நஷ்டப்படக்கூடாது என்பதால் அதை தயாரிப்பாளரிடம் சொன்னேன். அவர் அதற்கு ஒப்புக்கொண்டார். அது மட்டுமல்ல, படத்தில் ஏற்கனவே எடுத்த கொஞ்சம் திருப்தி இல்லாத கிட்டத்தட்ட 12 நாள் எடுத்த காட்சிகளை தூக்கிவிட்டு புதிதாக எடுத்தோம். அந்த அளவுக்கு ஒத்துழைப்பு தந்தார்.

    இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் கூட பெண்களை அடக்கி ஒடுக்கி வைக்கவே முயற்சி செய்தார்கள். அதன்பிறகு சில அரசியல் கட்சிகள், முற்போக்கு சிந்தனையாளர்கள் வந்து அவற்றை மாற்றி அமைக்க முயற்சி செய்தார்கள். அதற்கான சட்டங்களும் கொண்டுவரப்பட்டன.

    ஆனாலும் இப்போது வரை பெண்களுக்கான அநீதியும் கொடுமைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதைக் கேட்கும்போதே மனது அதிர்கிறது. அதன் விளைவு தான் இந்த இரவின் விழிகள் படம்.

    இந்த சமுதாயத்திற்கு நான் என்ன செய்ய வேண்டும், என்ன சொல்ல வேண்டும் என நினைத்தேனோ அதை தெளிவாகவும் தீர்க்கமாகவும் சொல்லி இருக்கிறேன்.

    இசையமைப்பாளர் நான் என் மனதில் என்ன வேண்டும் என நினைக்கிறேனோ, அதை அழகான பாடல்களாகக் கொடுத்தார்.

    ஏற்காடு பகுதியில் வாகனங்கள் கூட செல்ல முடியாத இடங்களில் படப்பிடிப்பை நடத்தினோம். ஒரு சண்டைக் காட்சியில் எண்பது அடி உயரத்திற்கு என்னை கம்பியில் கட்டி தூக்கியவர்கள், இரண்டு மூன்று நிமிடம் கீழே இறக்காமல் அந்தரத்திலேயே தொங்க விட்டு விட்டனர். அந்த சில நிமிடங்கள் கீழே பார்க்கும் போது மிகவும் திகிலாக இருந்தது” என்று பேசினார்.

    சூப்பர் சிங்கர் புகழ் பாடகர் விஷ்ணு சரண் பேசும்போது,

    “இந்த படத்தில் நான் பாடியிருக்கும் பாடல் படத்தின் ஜானரை வெளியே இருப்பது போல கொஞ்சம் ஸ்டைலாக இருக்கும். இசையமைப்பாளரைப் பொருத்தவரை ஒரு பாடலைப் பாடி ரெக்கார்டிங் செய்யும் வரை அவர் உட்காரவே மாட்டார்” என்று பேசினார்

    பாடலாசிரியர் அரவிந்த் அக்ரம் பேசும்போது,

    “இந்த படத்தில் ஐந்து பாடல்களை உருவாக்கியதில் எனக்கும் இயக்குநருக்கும் இசையமைப்பாளருக்கும் என ஐந்து விதமான பின்னணி கதைகள் இருக்கின்றன. என் பெயர் அக்ரம்… இசையமைப்பாளர் பெயர் அசார். ஆனால் நாங்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய முதல் பாடல் வாடா கருப்பா.. எப்படி எங்களை நம்பி இயக்குநர் இந்த பாடலைப் படைத்தார் என்பதே மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது” என்று பேசினார்.

    இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசும்போது,

    “சமீபத்தில் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது.. நாங்களும் தமிழிலிருந்து ஆஸ்கார் போட்டிக்கு அனுப்பும் படங்களைப் பார்த்து தேர்வு செய்யும் வேலைகளில் தீவிரமாக இருந்தோம். ஆனாலும் இந்த வருடம் அங்கே போட்டியிட தமிழ் படம் எதுவும் தேர்வாகவில்லை என்பது வருத்தம். ஆனால் தெலுங்கு, கன்னட படங்கள் இடம்பெறுகின்றன. இங்கே தமிழ் படைப்பாளர்களிடம் கிரியேட்டிவிட்டி எங்கே போனது ? சிறிய படங்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு அவர்கள் படங்கள் எந்த திரையரங்குகளில் எந்த காட்சி ஓடுகிறது என்கிற தகவல் கூட தெரிவதில்லை.

    என்னுடைய பொன்னுமணி படம் வெளியான காலத்தில் கூடவே 16 படங்கள் வெளியாகின. அதில் 12 படங்கள் வெற்றி பெற்றன. அது போன்று ஒரு காலம் வேண்டும், திருப்பிக் கொண்டு வாருங்கள் என கோரிக்கை வைக்கிறோம்.

    ரசிகர்கள் மொத்தமாக பல படங்களை பார்ப்பதற்கு வசதியாக வெளிநாடுகளில் இருப்பது போல சலுகைகளை திரையரங்கு உரிமையாளர்கள் அறிவியுங்கள்.

    இப்போதும் பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லாத சூழல்தான் இருந்து கொண்டிருக்கிறது. அது பற்றி தான் இந்த படம் பேசுகிறது. படத் தயாரிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை படத்தின் பப்ளிசிட்டிக்கு இப்போது யாரும் கொடுப்பதில்லை. அதுவே மைனஸ் ஆக அமைந்து விடுகிறது.

    பல படங்கள் இசை வெளியீட்டு விழாவின்போது தான் இப்படி ஒரு படம் இருக்கிறதா? என்பதே தெரிய வருகிறது. படத்தை மோசமாக விமர்சிக்கிறார்கள் என வலைதளக்காரர்களை திட்டுகிறோம். தப்பாக கூட நம் படத்தைத் திட்டுகிறார்களே என்று சந்தோஷப்படுங்கள். அதுவும் ஒரு பப்ளிசிட்டி தான்” என்று பேசினார்.

    இசையமைப்பாளர் ஏ.எம் அசார் பேசும்போது,

    “இரவின் விழிகள் ஒரு அருமையான சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது. ஐந்து பாடல்கள் ஐந்து விதமான ஜானரில் இருக்கும். அரவிந்த் அக்ரம் ஒரு முறை பாடல் எழுதிக் கொடுத்தார் என்றால் அதில் பெரும்பாலும் திருத்தமே இருக்காது. படத்தின் பாடல்களுக்கேற்ற விஷுவல்சும் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

    நாயகி நீமா ரே பேசும்போது,

    “மிஸ்டர் பர்ஃபெக்க்ஷனிஸ்ட் என்று இயக்குநர் ராஜேஷை சொல்லலாம். படப்பிடிப்பில் அவருக்கு எடுத்த சில காட்சிகளில் திருப்தி இல்லை என்றால் படப்பிடிப்பு முடிந்து இரண்டு வாரம் கழித்துக் கூட என்னை அழைத்து சில காட்சிகளை ரீ ஷூட் செய்தார்.. அதன்பிறகு மீண்டும் ஒருமுறை அவரைத் தொடர்பு கொண்ட போது ஹீரோவான அவரது காட்சிகளே கொஞ்சம் திருப்தி இல்லை என்று அதை மீண்டும் எடுப்பதற்காக போய்க்கொண்டிருப்பதாகச் சொன்னார். இப்படி ஒவ்வொன்றிலும் பர்ஃபெக்ஷன் பார்த்து பார்த்து இரவின் விழிகள் படத்தை உருவாக்கி இருக்கிறார். படப்பிடிப்பு சமயத்தில் இயக்குநரை பார்க்கும்போது எல்லாம் அந்நியன் படம் தான் ஞாபகத்திற்கு வரும்.

    படப்பிடிப்புக்கு முன்பு அம்பி போலவும் படப்பிடிப்பு ஆரம்பித்ததும் அந்நியன் போலவும் மாறிவிடுவார்” என்று பேசினார்

    நடன இயக்குனர் எல்.கே அந்தோணி பேசும்போது,

    “முதலில் ஒரு பாடலுக்கு தான் இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். அந்த ஒரு பாடல் சிறப்பாக வந்திருப்பதை பார்த்துவிட்டு, நான்கு பாடல்களையும் என்னையே நடனம் அமைக்கச் சொல்லிவிட்டார்கள். நான் கேட்பதற்கு முன்பே எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார்கள். தயாரிப்பாளரே கதாநாயகனாகவும் நடித்திருப்பதால் அவரை ஆடவைப்பதற்கு எக்ஸ்ட்ராவாக சம்பளம் கொடுத்தார்கள்” என்று பேசினார்.

    தயாரிப்பாளரும் நாயகனுமான மகேந்திரன் பேசும்போது,

    “வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் நடிப்பதற்காகத்தான் என்னை அழைத்தார் இயக்குநர் ராஜேஷ். ஆனால் படத்தின் கதையைக் கேட்டதும் நானே தயாரிக்கிறேன் எனக் கூறிவிட்டேன்.

    நீங்களே ஹீரோவாக நடியுங்கள் என்று கூறினார். நான் மறுத்தேன். ஆனால் நான் கஷ்டப்பட்டதை விட அவர் கஷ்டப்பட்டது தான் அதிகம். சில காட்சிகளில் திருப்தி வராவிட்டால் பத்து டேக் என்றாலும் விட மாட்டார்.

    ஒரு நாள் காலை சாப்பாடு கூட சாப்பிட விடாமல் என்னை வைத்து காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்தார். மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் விதமாகத்தான் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. ராஜேஷ் என்னிடம் இந்த கதையை சொல்லும்போது இந்த படம் ஒரு விதையாக விதைக்கப்பட்டு இருந்தது. அதை நான் செடியாக மாற்றி இருக்கிறேன். அதை மரமாக்கி அதில் உள்ள கருத்து என்கிற பழத்தை சாப்பிடுவதற்கு உறுதுணையாக இருக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசினார்.

    நடிகர் சிசர் மனோகர் பேசும்போது,

    “வெள்ளிமலை பகுதிக்கு படப்பிடிப்பிற்கு சென்றோம். 25 நாட்கள் எடுக்க வேண்டிய காட்சிகளை 15 நாட்களில் எடுத்து முடித்தார். அந்த அளவிற்கு இயக்குநர் யாரையும் உட்கார விடாமல் பம்பரமாக சுழல்வார். இந்த காலத்தில் பெண்களுக்கு தேவையான கருத்தை சொல்லும் விதமாக இந்தப்படம் உருவாகி இருக்கிறது” என்று பேசினார்.

    நடிகை கோமல் சர்மா பேசும்போது,

    “உண்மையான சுதந்திரம் என்பது இளைஞர்கள் எல்லாமே சுதந்திரமாக பேசுவது என்று தான் நான் நம்புகிறேன். உங்கள் கண்களில் நாட்டின் எதிர்காலத்தை பார்க்கிறேன். உங்கள் இதயத்தில் இருக்கும் தீ, நம் ஊருக்கு மட்டும் வெளிச்சம் கொடுக்காமல் இந்த உலகத்திற்கே ஒரு வழிகாட்டியாக மாறணும். உலக வரலாற்றை எடுத்துப் பார்த்தால் ஒவ்வொரு புரட்சிகளிலும் இளைஞர்கள் தான் தோளோடு தோள் நின்று இருக்கிறார்கள்.

    இன்றைய இளைஞர்களின் போர்க்களமே வேறு. அது துப்பாக்கியோ. வாளோ அல்ல.. ஒரு போஸ்ட்.. ஒரு ட்வீட்.. ரீல்ஸ் இவைதான். உங்கள் கையில் இருக்கும் செல்போன் ஒரு ஒளிகாட்டி.. வழிகாட்டி.. ஒரு சில ஃபாலோயர்களுக்காக உங்கள் வாழ்க்கையை அழித்து விடாதீர்கள். உங்கள் குரலை ஒரு நாட்டுக்காக காட்டுக்காக பயன்படுத்துங்கள். குரல் இல்லாத குழந்தைகளுக்கு குரலாக மாறுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கும் நதிகளுக்கு பயனுள்ளவர்களாக இருங்கள்.. சோசியல் மீடியாவில் வெறுப்பைக் காட்டினால் அது ஆயிரம் மடங்கு அதிகரிக்கும். நம்பிக்கை விதைத்தால் அது ஆயிரம் மடங்கு நம்பிக்கையை கொடுக்கும்.

    புதிய இளைஞர்கள், வரும் தலைமுறைக்கும் வழிகாட்டியாக இருப்பீர்கள் என நம்புகிறேன்” என்று பேசினார்.

    நடிகை நமீதாவின் கணவர் வீரா பேசும்போது,

    “நான் ஆந்திராவைச் சேர்ந்தவன். ஆனாலும் தமிழ் மீது உள்ள காதலால் இங்கே வந்து குடியேறி விட்டேன். முன்பெல்லாம் அண்ணா, அக்கா என்று பாசத்தோடு இங்கே அழைத்தார்கள்.

    இப்போது எல்லாமே ப்ரோ என்று மாறிவிட்டது. தமிழ்நாட்டில் கலாச்சாரமும் சினிமாவும் ஒரு முக்கிய அங்கமாக இருந்தன. உலகமே வியந்து பார்க்கும் விதமாக இருந்தது. இப்போது அதில் சின்ன தேக்கம் இருக்கிறது. அதற்குக் காரணம் நாம் தான்.. நான் முதலில் ஒரு சினிமாவுக்கு தயாரிப்பாளராக இருக்கலாம்.. ஆனால் இரண்டாவது சினிமாவிற்கு நான் ஒரு பார்வையாளன் தான்..

    புஷ்பா, பாகுபலி மாதிரி படங்கள் வந்தால் தான் ரசிகர்கள் ரசிப்பார்களா என்றால், இல்லை. கடந்த வாரம் கூட தெலுங்கில் வெளியான சின்ன படங்கள் கூட மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. இங்கே தமிழில் நாங்கள் படங்களை தவறாக எடுக்கிறோமா, ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடுகெட்ட தவறுகிறோமா என்பது தெரியவில்லை. இந்த படம் மிகுந்த சிரமத்துடன் மிக நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து ஆதரவை தாருங்கள்” என்று பேசினார்.

    நடிகர் போஸ் வெங்கட் பேசும்போது,

    “இரவின் விழிகள் படம் ஊமை விழிகள் படம் போல வெற்றியடைய வேண்டும். அண்ணன் இயக்குநர் ஆர். வி உதயகுமார், பட ரிலீஸ் பற்றி பேசினார். ரிலீஸ் என்று சொன்னதுமே எல்லோரும் டக்கென திமுக பக்கம் தான் பார்வையைத் திருப்புவார்கள்.

    ஒருவேளை ரெட் ஜெயண்ட் பற்றி அவர்கள் சொன்னார்கள் என்றால் அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் ரெட் ஜெயண்ட் படம் தயாரிக்கவில்லையா என்ன ?

    என்னுடைய படம் வெளியான போது முதல் வாரம் 200 தியேட்டர்களுக்கு மேல் இருந்தது.. அடுத்த வாரம் 150 தியேட்டர்.. ஆனால் மூன்றாவது வாரம் பல தியேட்டர்களில் என் படம் இல்லை.. 25 நாள் அல்லது 50 நாள் போஸ்டர் ஒட்டுவதற்காக ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று திரையரங்கு உரிமையாளர்களிடம் கேட்டேன். அந்த வகையில் இப்போது ஒரு படத்தின் ஆயுள் காலம் 10 லிருந்து 20 நாள் என மாறிவிட்டது. அதன் பிறகு ஓடிடி வந்து விட்டது.

    சின்ன தயாரிப்பாளர்கள் தயவு செய்து படம் எடுக்க வரவேண்டாம் என விஷால் சொன்னபோது நான் தான் முதல் கண்டனக் குரல் கொடுத்தேன். ஆனால் அவர் என்ன அர்த்தத்தில் சொல்லி இருக்கிறார் என்றால் கொஞ்சம் உஷாராக இருங்கள் என்று தான் சொல்லியிருக்கிறார்.

    அதை அவர் சொல்லத் தெரியாமல் சொல்லிவிட்டார். அதனால் சில தயாரிப்பாளர்கள் ஓடியே விட்டார்கள் என்பதையும் மறுக்க முடியாது. ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவதற்கான வாய்ப்பை நாம் உருவாக்கித் தராதது நம் மீது உள்ள தவறுதான்.. அவர்கள் உள்ளே வருவதற்கு முக்கியமான ஒரு பாயிண்ட் இருக்க வேண்டும்.

    ஜாதி படமாக இருந்தால் கூட அதை பார்ப்பதற்கான ஒரு கூட்டம் வருகிறார்கள். விருதுகளுக்கான படங்கள் எடுப்பது வேறு, ஸ்டார் படங்கள் என்பது வேறு. ஆனால் மற்ற படங்களுக்கு தியேட்டர்களையோ விநியோகஸ்தர்களையோ ரசிகர்களையோ குறை சொல்லவே முடியாது.

    ஏற்கனவே ரிலீஸ் தேதியை திட்டமிட்டு விட்டு பெரிய படங்கள் வருகிறது என்பதால், நீங்கள் ஏன் பின்வாங்குகிறீர்கள்? பெரிய படம் தோற்றது இல்லையா ? பல நேரங்களில் பெரிய படம் தான் தோற்கிறது. ஏன் விட்டுக் கொடுக்கிறீர்கள் ? போராட வேண்டும்..

    நீங்கள் விலகும் போது அவர்களுக்கு விளையாடுவதற்கு களம் கிடைக்கிறது .அதிக காட்சிகள் கிடைக்கிறது. உங்கள் வீடு, சொத்தை யார் பெயரிலாவது எழுதி வைப்பீர்களா ? அப்புறம் பல கோடி பணம் போட்டு எடுத்த படத்தை மட்டும் யாரோ ஒருவரிடம் எப்படி கொடுக்கிறீர்கள் ? சொந்தமாக ஏன் ரிலீஸ் செய்யத் தயங்குகிறீர்கள் ? அப்படி என்றால் வியாபாரம் கற்றுக் கொள்ளாமல் உள்ளே வந்திருக்கிறீர்கள். வியாபாரத்தை தெரிந்து கொண்டு வாருங்கள்.

    அப்படி இல்லாமல் தோற்றுப் போய் விட்டேன் என்று அழுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை..

    எனக்கு இப்போது டிஸ்ட்ரிபியூஷன் கற்றுக்கொள்ள ஆசையாக இருக்கிறது. விரைவில் அதில் இறங்கப் போகிறேன். அங்கே தான் எல்லா படங்களும் கடைசியாக பிரச்சனையில் வந்து நிற்கிறது. யாரிடமாவது படத்தை ரிலீஸ் செய்யக் கொடுத்துவிட்டு ஏன் கெஞ்ச வேண்டும்? இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்களே தங்கள் படங்களை சொந்தமாக ரிலீஸ் செய்ய வேண்டும்.. யார் பின்னாடியும் போக வேண்டாம்” என்று கூறினார்..

    இயக்குநர் மு.களஞ்சியம் பேசும்போது,

    “நடிகர் போஸ் வெங்கட் பேசும்போது படம் ரிலீஸ் என்று வந்து விட்டால் எல்லோருமே திமுக பக்கம் தான் திரும்புகிறார்கள் என்று சொன்னார். ஒரு நிறுவனம் தாங்கள் வெளியிடும் படங்களே அதிக திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என தொடர்ந்து பார்த்துக் கொண்டால் நாங்கள் வேறு யார் பக்கம் திரும்ப வேண்டும்?

    சின்ன படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. சமீபத்தில் வெளியான ஒரு படம் நன்றாக இருக்கிறது என விமர்சனம் வந்தது. ஆனால் எந்த திரையரங்கில் ஓடுகிறது என்றே தெரியவில்லை. படத்துறையை ஒழுங்கு படுத்துவதற்காக இருக்கக்கூடிய திரைப்பட சங்கங்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் இவர்கள் எல்லோரும் இதைப் பற்றி எப்போதுமே கவலைப்படுவது இல்லை.

    அதற்கு காரணம் அரசியல். அவர்கள் கோபித்துக் கொள்வார்களோ, வருத்தப்படுவார்களோ என்கிற பயம்.

    இன்னொரு பக்கம் பெரிய படம் வெளியாகும்போது அனைத்து திரையரங்குகளிலும் அந்த படத்தையே வெளியிட்டால் சின்ன படங்களுக்கு எப்படி இடம் கிடைக்கும் ? உண்மையிலேயே பொறுப்புணர்வோடும் மக்கள் குறித்த சிந்தனையோடும் சிறிய படங்கள் தான் எடுக்கப்படுகின்றன. பெரிய நடிகர்களின் படங்கள் அப்படி எந்த சமூக நோக்கத்திலும் எடுக்கப்படுவதில்லை. சொல்லப்போனால் சமூக சீரழிவுக்கு வித்திடுகின்றன. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் இணையதளம் மூலமாக அதிகமாக ஏமாற்றப்படுகிறார்கள். அவர்கள் வாழ்க்கை எப்படி சீரழிகிறது என்பதை பற்றித்தான் இந்த இரவின் விழிகள் படம் பேசுகிறது.

    அந்த இணையதளங்களின் பாதிப்பு தான் சினிமாவிற்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிறிய படங்களை திரையரங்குகளுக்கு கொண்டு வருவது என்பதே பண விரயம் என்பது போன்ற சூழ்நிலையைத் தான் தமிழ் சினிமா ஏற்படுத்தி வைத்திருக்கிறது.. ஆந்திராவில் எல்லாம் சினிமாவில் ஒரு ஒழுங்குமுறை இருக்கிறது. ஒரு பெரிய படம் வந்தால், கூடவே 10 சின்ன படங்களையும் ரிலீஸ் செய்ய வேண்டும் என எங்கள் இயக்குநர் சங்கம் மட்டும் தான் கவலைப்படுகிறது. ஆனால் அதை நடைமுறைப்படுத்த வேண்டியவர்கள் அதை செய்ய மறுக்கிறார்கள்” என்று பேசினார்.

    இயக்குநர் பேரரசு பேசும்போது,

    “இங்கே அதிமுக, திமுக, நாம் தமிழர், பாஜக என பல கட்சிகளை சேர்ந்தவர்கள் பேச வந்திருக்கிறோம். நாயகி நீமாரே இயக்குநரைப் போல மிமிக்கிரி செய்து பேசுவதைப் பார்க்கும்போதே அவர் சிறந்த நடிகையாக இருக்கிறார் என்பது தெரிகிறது.

    சீமான் அண்ணன் பேச வேண்டியதை மு.களஞ்சியம் பேசிவிட்டார். இயக்குநர் சிக்கல் ராஜேஷ் என்னைப்போல ஊர் பாசம் கொண்டவர். அதனால் தான் தன்னுடைய ஊர் பெயரையும் சேர்த்து வைத்துக் கொண்டார்.

    பெண்கள் ஆண்களுக்கு நிகராக வந்து விட்டார்கள், புரட்சிப் பெண் என்றெல்லாம் சொல்கிறோம். ஆனால் இன்று அவர்களை விட மிக மோசமான நிலையில் வேறு யாருமில்லை.. அது குறித்த விழிப்புணர்வை இந்த படம் சொல்ல வருகிறது. இன்று படம் எடுப்பது பெரிய விஷயமில்லை. அதை ரிலீஸ் செய்வது தான் கஷ்டமாக இருக்கிறது.

    இன்றைக்கு சினிமாவில் உள்ள மிகப்பெரிய இடர்ப்பாடு இதுதான். திரைப்படத்தை ரிலீஸ் செய்வது தான் முதல் வெற்றியாக இருக்கிறது. அன்று இந்த சினிமா நன்றாக இருக்க வேண்டுமென அனைவருமே நினைத்தார்கள். ஆனால் இன்று என் படம் மட்டுமே ஓட வேண்டும், நான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என பலரும் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

    இன்னொரு தயாரிப்பாளரின் படத்திற்கு திரையரங்குகள் கொடுக்க வேண்டுமே என அவர்கள் நினைப்பது இல்லை.

    அந்த வகையில் இன்று சினிமாவை அழிப்பது சுயநலம் தான்/ அப்படி நினைத்தால் ஒரு காலகட்டத்தில் சினிமாவும் அழிந்து இந்த சுயநலத்தில் இருப்பவர்களும் அழிந்து போவார்கள். முன்பெல்லாம் படம் பார்க்கும் ரசிகர்கள், சில முக்கியமான பத்திரிகைகளில் வெளியாகும் விமர்சனங்களுக்காக காத்திருந்து அதை படித்துவிட்டு படம் பார்க்க சென்றார்கள்.

    விமர்சனம் வரவில்லை என்றால் போன் போட்டுக் கேட்டார்கள். ஆனால் இன்று ஒரு சிலர் செய்யும் விமர்சனங்களை பார்க்கும்போது ஏன் தான் இவர்கள் இப்படி விமர்சனம் பண்ணுகிறார்கள் என தோன்றுகிறது. வன்மத்தைக் கக்குகிறார்கள்.

    அப்படிப்பட்டவர்களின் விமர்சனத்தை தான் இன்றைய ரசிகர்களின் மன நிலையும் நம்புகிறது. யாரையாவது திட்டினால் தான் அவர்களுக்கு சந்தோசமாக இருக்கிறது. பாசிட்டிவாக சொன்னால் அதை ஒதுக்கி விடுகிறார்கள்.

    சின்ன படம் ஓட வேண்டும் என நினைப்பவர்கள் அனைவருமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஒரு நல்ல படம் வெளியானால் அந்த படக்குழுவினரை தன் வீட்டிற்கே வரவழைத்து வாழ்த்துகிறார்.

    இன்றைக்கு அப்படிப்பட்ட மனம் வேறு யாரிடம் இருக்கிறது? ரஜினி சாரே நன்றாக இருக்கிறது என சொல்லிவிட்டார் என்பதற்காக பல பேர் அந்த படத்தை பார்க்கிறார்கள். அந்த வகையில் ஒரு சிறிய பட வெற்றிக்கு சூப்பர் ஸ்டார் உதவி செய்கிறார். ஏனென்றால் அவர் சினிமா நன்றாக இருக்க வேண்டுமென நினைப்பவர்.

    அவருடைய ஒரு பட வெற்றி விழாவில் இயக்குநர் சேரன் படத்தைப் பாராட்டி அவருக்கு தங்கச்சங்கிலி போட்டு பரிசளிக்கிறார்.. எந்த ஹீரோவுக்கு இப்படி ஒரு மனசு வரும்..? அதே போல இப்போது இருக்கும் பெரிய ஹீரோக்கள், உங்களுக்குப் பிடித்த சின்ன படங்கள் இருந்தால், அது நன்றாக இருந்தால் தாராளமாக மனது விட்டு பாராட்டுங்கள்..” என்று பேசினார்.

    மக்கள் தொடர்பு ; A.ஜான்

  • PK7 Studios presents – JOCKEY

    Greetings to cinema lovers,

    I am Director Dr. Pragabhal. After successfully directing Muddy, India’s first-ever full-length film on mud racing, I am now bringing another unique and thrilling subject to Indian cinema – a story set against the backdrop of the traditional Madurai Goat Fight.

    During my travels across Madurai, I witnessed these goat fights for the first time. They fascinated me – not only because of their intensity but also because of the deep bond between the goats and their handlers. This bond, which inspired the goats to fight with such passion, made me realize that the goat fight was not just a sport but also a cultural expression tied to Tamil heritage.

    I began documenting and researching this tradition in depth, even staying in Madurai since 2022 to write the story. For the film to be authentic, I knew the actors had to build a real bond with the goats. So, we purchased goats, trained with them, fed them, lived with them, and created a genuine connection.

    Casting was a challenge – actors had to dedicate time, undergo physical training, and face real risks like injuries during practice. Two actors who showed true commitment were Yuvan Krishna and Ridhan Krishnas, who embraced the challenge wholeheartedly. They lived in Madurai, trained with the goats and handlers, and prepared themselves physically and mentally. Actress Ammu Abhirami also plays the female lead, with Madhu Sudhan Rao in a key role.

    For realism, we worked closely with Madurai locals and goat handlers. Real goat Emotions were shot authentically, with actors participating directly. The bond between the hero and his goat forms the emotional core of the story.

    The villain’s role is equally strong, handling three fierce goats. His preparation demanded long training, immense physical strength, and emotional connection with the animals.

    Technically, the film was shaped by some of the best talents:

    • Cinematography: Udhayakumar and team captured challenging night and fight sequences with precision.
    • Editing: Srikanth, known for handling complex films.
    • Music: Sakthi Balaji blended Tamil folk instruments with cinematic appeal.
    • Art Direction: C. Udhayakumar recreated authentic Madurai houses and cultural backdrops without artificial sets.
    • Sound: Award-winning Raja Krishnan, supported by top technicians across departments.
      *Creative Producer: RP. Bala
      ** Fight*- Prabhu Jacky
      *Costume Designer: Joshua Maxwel

    This film presents goat fighting – a centuries-old South Indian cultural tradition – as an engaging, emotional, and entertaining cinematic experience. My intent is to make the world witness the unique relationship between goats and their handlers and showcase Madurai’s rich culture with honesty and intensity.

    After three years of hard work, I now present JOCKEY to you all.

    – Dr. Pragabhal

  • PK7 Studios தயாரித்து வழங்கும் “ஜாக்கி”

    சினிமாவின் ரசிகர்களுக்கு வணக்கம்,

    நான் இயக்குனர் Dr.பிரகபல். மழைக்காடுகளில் நடத்தப்படும் சவாலான Mud ரேஸ் பந்தயத்தை மையமாக வைத்து இந்தியாவில் முதல் முறையாக மட்டி என்ற திரைப்படத்தை வெற்றிகரமாக இயக்கி முடித்ததற்கு அடுத்ததாக, அதைவிட சுவாரஸ்யமான ஒரு கதையை தேடி இந்தியா முழுவதும் நிறைய பயணப்பட்டேன்.

    அப்படி மதுரைக்கு செல்லும்போது நான் கிடா சண்டை பந்தையத்தை நேரில் பார்த்தேன். அந்த பந்தையத்தை பார்க்கும் போதே, அது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அந்த கிடா சண்டைக்குள் ஒரு வாழ்வியலும், அது மட்டுமின்றி உணர்வு நிலையில் கிடாவிற்கும் அதன் கட்டாரிக்கும் ஒரு பிணைப்பு இருப்பதை கவனித்தேன்.

    அந்த பிணைப்பு தான் அந்த கிடா நன்றாக சண்டையிட ஊக்கமளிப்பதையும் கவனித்தேன். தமிழ் மக்களின் கலாச்சாரத்தோடு ஒன்றி போன ஒரு விளையாட்டு என்று கண்டறிந்தேன். இதுதான் நான் தேடி வந்த விஷயம் என உணர்ந்ததற்கு பிறகு அது சம்பந்தமான நிறைய தரவுகளை சேகரிக்க தொடங்கினேன்.

    அந்த தேடலில் தான் எனக்கு புரிய வந்தது நான் ஒரு பெரிய உலகிற்குள் வந்திருக்கிறேன் என்று. ஏனென்றால் இந்த மாதிரி சண்டை கிடாக்களை வளர்ப்பதற்காக அவர்களுடைய ஐ.டி. வேலைகளை கூட விட்டுவிட்டு, சொந்த ஊர்களுக்கு திரும்பிய நிறைய இளைஞர்கள் சந்தித்தது எனக்குள் பெரிய ஆச்சர்யத்தை உண்டாக்கியது.

    இது மட்டுமின்றி இன்னொரு காரணம், இந்த சண்டை கிடாக்கள் எல்லோருடைய குடும்பத்திலும் ஒரு நபராக மாறியிருந்ததை கண்டேன். மனிதர்களை போல, அந்த கிடா இறந்தால் கூட கடவுளாக வழிபடப்படும் வழக்கத்தையும் கண்டேன்.
    கிடாவை வளர்க்கும் கட்டாரி அதனுடன் பேசி, பழகி, நெடுநாள் பயணித்து அதை தயார்படுத்துகிறார். அது சண்டைக்கு செல்லும் முன் அதற்கு மாலை அணிவித்து, பூஜைகளை செய்து கொண்டாடி தயார்படுத்துகிறார். இப்படி கிடா சண்டை என்பது, அந்த மக்களின் உணர்வுகளோடு பின்னி பிணைந்துள்ளது என்று எனக்கு புரிய வந்தது.

    உடனே நான் மதுரையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, 2022 முதல் அங்கேயே தங்கி கதை எழுத ஆரம்பித்தேன். படத்தின் மூல கதையை எழுதி முடித்ததுமே, இந்த கதையை படமாக்க வேண்டும் என்றால், இதில் கெடா கட்டாரியாக நடிக்கப்போகும் நடிகருக்கும் கிடாவுக்கும் ஒரு நல்ல பிணைப்பு இருக்க வேண்டும் என்று எனக்கு தெரிந்துவிட்டது.

    அப்படியான நல்ல பிணைப்பை உருவாக்க, கிடாவுடன் நேரம் ஒதுக்கி அதற்கு உணவளித்து, அதை குளிப்பாட்டி, அதற்கான தங்குமிடங்களை அமைத்து அதை நன்றாக பராமரிக்க வேண்டும். அப்படி உணர்வாய் ஒன்றிபோனால் தான் கெடாவுடன் ஒரு பிணைப்பை உருவாக்க முடியும் என்று அறிந்ததுமே, நான் முதலில் நான்கு நல்ல வலுவான கிடாக்களை தேடி வாங்கினேன். கதாநாயகன், வில்லன் கதாபாத்திரங்களை தேர்வு செய்யவும் ஆரம்பித்தேன்.

    இந்த கதாபாத்திரங்களுக்கான தேர்வுகளில் நிறைய சிக்கல் இருந்தது. வரும் நடிகர்கள், இந்த கதாபாத்திரங்களுக்காக நிறைய நேரம் செலவழிக்க வேண்டும். அது மட்டுமின்றி இந்த கிடாக்களோட பயணப்படும் போதும், கிடா சண்டை கட்டாரி பயிற்சியின் போதும் நிறைய காயங்கள் ஏற்படவும், கைக் கால்கள் உடையவும், ஏன் மரணம் கூட நிகழ வாய்ப்பிருந்தது. நடந்த நிறைய உண்மை சம்பவங்களே இதற்கு சான்றாய் இருந்தது. இப்படியான அர்பணிப்புள்ள இரண்டு நடிகர்கள் தான் என்னுடைய முதல் படத்தில் நடித்த யுவன் கிருஷ்ணாவும், ரிதன் கிருஷ்ணாஸ்சும். இந்த கதையை பற்றி அவர்களிடம் சொன்னவுடன்
    அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் ஒப்புக்கொண்டார்கள். அதன் பின் அவர்கள் மதுரை வந்து, தங்கி, கிடாக்களுடனும், கிடா கட்டாரிகளுடனும் பழகி, அதற்கான பயிற்சிகளையும் மேற்கொண்டனர். மறுபக்கம், நானும் படத்திற்கான திரைக்கதையை எழுதிகொண்டிருந்தேன், நான் தமிழ்நாடு முழுக்க பயணப்பட்டிருக்கிறேன். ஆனால் தமிழ்நாட்டில் மதுரை மாநகருக்கு என்று தனி சிறப்புண்டு. அதற்கு காரணம், அதனுடைய தொன்மையான கலாச்சாரமும், பண்பாடும், வரலாற்று முக்கியத்துவங்களும் தான்.

    கிடா சண்டை என்பது தென்னிந்தியாவின் கலாச்சார விளையாட்டாக இருந்தாலும், தமிழ்நாட்டில் முக்கியமாக மதுரையில் மிகவும் வேரூன்றிப்போய் இருந்தது. அதுபோல் மதுரை மக்களின் வாழ்வியல், அவர்களின் பேச்சுவழக்கு, அவர்களுடைய குணாதிசயங்கள், என எல்லாமே மற்ற நகரங்களில் இருந்து மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தது. இந்த நுணுக்கங்களை எல்லாம் எதார்த்தம் குறையாமல் படத்திற்குள் கொண்டுவர கதாநாயகனையும், வில்லனையும் மதுரை நகரத்துக்குள் அனைத்து இடங்களுக்குள்ளும் நடமாடவிட்டு, பல்வேறு ஆட்களுடன் பேசவிட்டு, கொஞ்சம், கொஞ்சமாக மதுரை மக்களோடு, மக்களாக மாற்றினேன். இப்படியாக ஒருபக்கம் கிடாவுடனும், மறுபக்கம் மதுரை மக்களுடனும் பழக வைத்து, அவர்களை மதுரை தன்மைக்குள் கொண்டுவர எனக்கு இரண்டு வருடங்களுக்கு மேல் எடுத்துக்கொண்டது. அதற்கு பிறகுதான் கிடாக்களும், இவர்களின் குரலை கேட்டவுடனே ஓடி வருவது, தாவி குதிப்பது என சொல்வதை எல்லாம் கேட்கத் துவங்கியது.

    உடனே அந்த ஊரில் நடந்த உண்மையான கிடா சண்டை பந்தையத்தில் கதாநாயகன் யுவன் கிருஷ்ணாவையும், அவருடைய கிடாவையும் போட்டியிட வைத்தேன். அந்த பந்தையத்தில்
    அவர்கள் இருவரும் முதல் பரிசான பதக்கத்தை வென்று வந்தார்கள். அந்த பந்தையத்தின் போது தான் கதாநாயகனுக்கும், அந்த கிடாவுக்குமான உறவையும், பிணைப்பையும் உணர்ந்தேன்.

    அதேபோல் கதாநாயகன் யுவன் கிருஷ்ணா களத்தில் கிடாவை, கட்டாரியாக நின்று ஏவியதை பார்க்கும்போதே என்னுடைய கதையின் நாயகனாக தெரிந்தார். கிடா சண்டை என்று முடிவு ஆனதுமே நிறைய கிடா கட்டாரிகளோடு பேசி, அவர்களுடைய கதைகளை கேட்டு, அவர்களின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை எல்லாம் எடுத்து நிறைய உண்மைக்கு நெருக்கமாகவே, இந்த கதையை எழுதியுள்ளேன்.

    மதுரை மக்கள் எல்லாருமே நன்றாக ஒத்துழைத்தனர். இரண்டரை வருடத்திற்கு மேலான அனுபத்துடன் தான் நான் படப்பிடிப்பிற்கு சென்றேன். நான் படப்பிடிப்பிற்கு சென்ற பிறகு தான், எனக்குள் நடந்திருந்த மிகப்பெரிய மாற்றத்தை உணர்ந்தேன்.
    மதுரை மக்கள், கிடா சண்டை, மதுரையின் களம் என எல்லாவற்றுடனும் நான் ஒன்றிப்போயிருந்தேன். அதன் காரணமாக அந்த கலாசாரத்தை, மதுரை மக்களின் மற்றும் கிடா கட்டாரிகளின் உதவியோடு, மிகவும் நேர்த்தியோடும், உண்மைக்கு நெருக்கமாகவும் என்னால் படமாக்க முடிந்தது.

    இந்த படத்தில் கிடா சண்டைகளை காட்சிப்படுத்தியுள்ளேன். அதை உண்மைக்கு நெருக்கமாக, மிகவும் நேர்த்தியாக படமாக்கியுள்ளேன். திரையில் அந்த காட்சிகளில் கதாநாயகனுக்கும், கிடாவுக்கும் இருக்கும் பிணைப்பை பார்க்கும்பொழுது உங்களுக்கு தெரியவரும்.
    இந்த படத்தில், வில்லனுடைய கதாபாத்திரம் மிகவும் வலிமையானது. அதுவும் படத்தில், அவர் மூன்று வெவ்வேறு மிகவும் மூர்க்கத்தனமான கிடாக்களை கட்டுப்படுத்தி நடித்துள்ளார்.

    அவருக்குமே, மூன்று வித்யாசமான கிடாக்களுடன் பழக வேண்டும், ஒரு பிணைப்பை உருவாகக் வேண்டும். அதை நன்றாக சண்டையிட வைக்க வேண்டும் என்ற நிறைய சவால்களும், கிடாவினால் ஆபத்துகளும் இருந்தது. அவரும் அதற்காக நேரங்களை ஒதுக்கி, இரண்டரை வருடங்களுக்கு மேல் பயிற்சி பெற்றதால் தான் நன்றாக நடிக்க முடிந்தது.

    கிடா கட்டாரிகளுக்கு உடல் வலிமை மிகவும் அவசியம். களத்தில் கிடா எந்த அளவிற்கு வலிமையுடன் சண்டையிடுகிறதோ, அதைவிட அதிக வலிமையோடு கிடா கட்டாரியும் இருக்க வேண்டும். அது மட்டுமின்றி, அந்த வலிமையான கிடாவை பிடித்து கட்டுபடுத்த தெரிந்திருக்க வேண்டும். இவர்களின் குரலின் ஓசைகளின் மூலம் கிடாவை கட்டுப்படுத்தி, இவர்களுக்கு ஏற்றார் போல் சண்டையிட வைக்க வேண்டும். இதையெல்லாம் செய்ய அவர்கள் மிகவும் வலிமையுடன் இருந்தே ஆக வேண்டும்.

    அதற்காகவே, சாதாரண உடல் வாகுடன் இருந்த இரண்டு நடிகர்களும், இப்படத்திற்காக ஆரம்பம் முதலே நிறைய உடற்பயிற்சிகளை செய்து, கிடா கட்டாரிகளாக வேறொரு பரிணாமத்தை பெற்றிருக்கிறார்கள்.இந்த படத்தின் கதாநாயகியாக அம்மு அபிராமி நடித்திருக்கிறார், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் மது சூதன் ராவ் நடித்துள்ளார். மற்றும் சில தமிழ் நடிகர்கள் நடித்துள்ளனர்.

    தொழில்நுட்ப கலைஞர்களில், இந்த படத்தினுடைய படத்தொகுப்பாளர் ஶ்ரீகாந்த் மிகவும் திறமையான, நிறைய படங்களில் வேலை செய்த அனுபவம் உள்ளவர். அவர், இந்த கதையையும், படத்தையும் மெருகேற்ற நிறைய வேலைகளை செய்திருக்கிறார்.

    அதுபோல் ஒளிப்பதிவாளர் உதயகுமாரும் அவருடைய குழுவும், நிறைய சவால்களான விஷயங்களை செய்துதான், எல்லா கிடா சண்டை காட்சிகளையும், நிறைய இரவு நேர காட்சிகளையும், மிகவும் துல்லியமாக காட்சிப்படுத்தியுள்ளனர்.

    Music Director சக்தி பாலாஜி தமிழ் கலாச்சார முறையிலான வாத்தியங்களை பயன்படுத்தி மிகவும் அருமையாக இசை அமைத்துள்ளார். Creative Producer ஆக RP.பாலா பணிபுரிந்துள்ளார். கலை இயக்குனராக c.உதயக்குமார் படத்தில் பார்க்கும் அனைத்து வீடுகள் மற்றும் கெடா சண்டை செட்டுகள் என அனைத்தும் சினிமா செட்டுகள் போல் இல்லாமல் மதுரை மக்களின் உண்மையான வாழ்வியல் இடங்களாகவும் பொருட்களாகவும் வேலை செய்து காட்டியுள்ளார்,

    Production Controller ஆக சிவா பணிபுரிந்துள்ளார்கள், சண்டை காட்சிகள் ஜாக்கி பிரபு, உடைகள் ஜோசுவா மேக்ஸ்வெல் ஜே, ஒப்பனை பாண்டியராஜன், Sound Mixing இந்த வருடத்தின் தேசிய விருது வாங்கிய ராஜா கிருஷ்ணன், colorist ரங்கா, மற்றும் இந்த படத்தில் உழைத்து கொண்டிருக்கும் அத்தனை தொழில் நுட்ப கலைஞர்களும் கடினமாக உழைத்து கொண்டிருக்கிறார்கள்

    இந்த கதை பல நூற்றாண்டுகளாக, தென்னிந்தியாவின் கலாச்சாரத்தோடு பின்னி பிணைந்திருக்கிற ஒரு வீர விளையாட்டான கெடா சண்டையை மையமாகக்கொண்டதால். இதை எப்படியாவது சுவாரசியம் கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாக்கி, திரையரங்கிற்கு கொண்டு வர வேண்டும் என்றும். முக்கியமாக கிடாவுக்கும், அதன் கட்டாரிக்குமான உறவையும், இந்த விளையாட்டையும், உலகறிய செய்யவே, மிகவும் பொறுமையுடன், துல்லியமாக உணர்வுகளையும், கிடா சண்டையையும் காட்சிப்படுத்தியுள்ளேன்.
    என்னுடைய, இந்த மூன்று வருட உழைப்பை, இனி தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்க உள்ளேன்.

    இப்படிக்கு,
    Dr.பிரகபல்