Blog

  • அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் !!!!!!

    அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா.
    தற்போது அவர் சிறை சென்ற இரண்டு வருடம் ஆகிவிட்டது. இன்னும் ஒன்றரை வருடம் அவர் சிறையில் இருக்க வேண்டும். ஆனால் தண்டனையை முழுதாக அனுபவிக்கும் முன் அவர் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
    ஜெ., வழியில் ஏழை மக்களுக்காக ஆட்சி நடத்தும் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து.. தமிழிசை ட்விட்.

    முதல் திட்டம் என்ன


    அதன்படி சசிகலா இன்னும் சில நாட்களில் 10 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்த உள்ளார். இதன் மூலம் அவரது தண்டனை 4 வருடம் என்பது உறுதியாகும். அந்த அபராதத்தை கொடுக்கவில்லை என்றால், சசிகலா கூடுதல் நாட்கள் சிறையில் இருக்க வேண்டும். இதனால் விரைவில் சசிகலா இந்த அபராதத்தை செலுத்துவார் என்கிறார்கள்.

    அடுத்த திட்டம் என்ன

    இதற்கு அடுத்தபடியாக டிஐஜி ரூபா சசிகலா மீது கொடுத்து இருக்கும் 2 கோடி ரூபாய் லஞ்ச புகாரில் இருந்து வெளியே வர வேண்டும் என்று முடிவெடத்து இருக்கிறார். இந்த புகார் சசிகலாவின் நன்னடத்தையை பாதிக்கும் என்பதால், அதில் இருந்து எப்படியாவது வெளியே வர சசிகலா திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள். ஜூலை மாத இறுதிக்குள் இந்த புகாரில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று டிடிவி தினகரன் தரப்பு நம்புகிறது.

    என்ன நிலவரம்

    இதனால் பெரும்பாலும் சசிகலா நன்னடத்தை விதியை வைத்து சிறையில் இருந்து இன்னும் 5-6 மாதத்தில் வெளியே வருவார் என்கிறார்கள். அதாவது, வரும் நவம்பர் மாதம் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து 100 கைதிகள் வரை நன்னடத்தை விதியின் படி வெளியேற இருக்கிறார்கள். கர்நாடக மாநிலம் உருவான தினமான நவம்பர் 1ல் இந்த விடுதலை நடக்கும்.

    வருவார் வர வாய்ப்பு

    இந்த நிலையில் நவம்பர் 1ம் தேதி சசிகலாவும் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். இந்த பட்டியலில் ஏற்கனவே சசிகலா பெயர் இடம்பெற்றுள்ளது. இதை காரணமாக வைத்துத்தான், சசிகலாவை மீண்டும் அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்க வேண்டும் என்று தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

    ஆனால் இது எல்லாம் சசிகலாவிற்கு நன்னடத்தை சான்றிதழ் அளிக்கப்பட்டால் மட்டுமே நடக்கும். அந்த சான்றித

  • மே.வங்கத்தில் பதற்றம்.. தேர்தலுக்கு சில மணி நேரம் முன்னர் படுகொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர்

    கொல்கத்தா: டெல்லி, மேற்குவங்கம் உட்பட 7 மாநிலங்களில் 6-ம் கட்டமாக மக்களவைத்தேர்தல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
    வாக்குப்பதிவு துவங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு, முன்னர் நேற்றிரவு மேற்குவங்கத்தில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்டவர் பாரதிய ஜனதாவை சேர்ந்த வாக்குச்சாவடி முகவரான ரமீன் சிங் என்பவர் ஆவார்.
    மேற்குவங்க மாநிலத்தின் ஜார்கிராம் மாவட்டத்தில் உள்ள கோபிபல்லபூர் என்ற இடத்தில், ரமீன் சிங் உடலில் காயங்களுடன் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். உயிரிழந்துள்ள ராமன் சிங் ஜுனசோல் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
    இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க பிரமுகரான கைலாஷ் விஜயவர்த்தியா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பின்புலத்தில் ரவுடிகள் சிலர்ரமீன் சிங்கை படுகொலை செய்துள்ளதாக குற்றம்சாட்டினார். ஜனநாயகத்திற்கு இது ஒரு சோகமான நாள் என குறிப்பிட்ட அவர், பாரதிய ஜனதா கட்சியின் வாக்குச்சாவடி முகவர் என்ற ஒரே காரணத்திற்காகவே ரமீன் சிங் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சாடினார்.
    இச்சம்பவம் பற்றி கருத்து தெரிவித்துள்ள ஜார்கிராம் பகுதி பாஜ தலைவரான சுகாமதே சாஷ்டி, கடந்த சில நாட்களாகவே கொல்லப்பட்ட ரமீன் சிங்கை ஆளும்கட்சியை சேர்ந்த சிலர் தொடர்ந்து மிரட்டி வந்ததாக கூறினார். இந்த விவகாரத்தில் ஒரு உயர் மட்ட விசாரணை மற்றும் உடனடி இழப்பீடு தேவை என்று தாங்கள் விரும்புவதாக கூறினார்.
    பல்வேறு எதிர்கட்சி தலைவர்களும் பாரதிய ஜனதா பிரமுகர் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பரபரப்பான சூழலில் மேற்குவங்கத்தில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருவதால் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்

  • தியாகத் தலைவர் நல்லகண்ணு ஆதரவாக வைகோ கடும் கண்டனம்!!!

    பொதுஉடைமை இயக்கத்தின் தியாகத் தலைவர் அண்ணன் திரு நல்லகண்ணு அவர்களை, அரசு குடியிருப்பிலிருந்து வெளியேற்றிய எடப்பாடி பழனிச்சாமி அரசின் நடவடிக்கை, மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் தருகிறது.

    தாமிரபரணி நதிக்கரையில் திருவைகுண்டத்தில் பிறந்து, இளம் வயதிலேயே விடுதலைப் போராட்டக் களத்தில் குதித்தவர். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டு, பின்னர் பொதுஉடைமை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட அண்ணன் நல்லகண்ணு, மக்கள் போராளியாக உருவெடுத்தார்.

    பொதுஉடைமை இயக்கத்தின் தீவிரமான தோழராக இருந்தபோது, நாடு விடுதலை அடைந்ததும் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட சூழலில், காவல்துறை அவரை கைது செய்து, அவரது மீசையையும் பொசுக்கிப் பிய்த்துச் சித்ரவதை செய்தது.

    புரட்சிகர சிந்தனைகளுடன் வலம்வந்த நல்லகண்ணு, பாலதண்டாயுதம் போன்ற தலைவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில், அவர்களுக்கு ஆயுள் தண்டனை அளித்தது நீதிமன்றம். ஏழு ஆண்டு காலம் வெங்கொடுமைச் சிறையில் தள்ளப்பட்டார் அண்ணன் நல்லகண்ணு.

    வாழ்நாள் முழுவதும் போராட்டக் களங்களிலேயே நிற்பவர். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் காவலராகப் போராடியவர். நான்குநேரி வானமாமலை கோயிலுக்குள் ஒடுக்கப்பட்ட மக்களை அழைத்துச் செல்லும் போராட்டம், வீடுகளுக்கு நிலை வைத்துக்கொள்ளும் உரிமையை நிலைநாட்டும் போராட்டம், செருப்பு அணிந்து பொது வீதிகளில் நடக்கும் போராட்டம் போன்றவை நல்லகண்ணு அவர்களின் போர்க்குணத்தை வெளிப்படுத்தியவை ஆகும்.

    தென் மாவட்டங்களில் சாதிக் கலவர நெருப்பு பற்றிப் படர்ந்தபொழுது, நல்லகண்ணு அவர்களின் மாமனார் அன்னச்சாமி வெட்டிக் கொல்லப்பட்டார். அந்த நேரத்தில் அண்ணன் நல்லகண்ணு அமைதியை நிலைநாட்ட ஆற்றிய அருந்தொண்டுதான் சாதித் தீயை அணைத்தது. தனது மாமனார் மரணத்துக்கு அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகையையும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட இரு சமூக குழந்தைகளின் கல்வி உதவிக்கே அளித்துவிட்டார். அண்ணன் நல்லகண்ணுவின் 80 ஆம் அகவையைக் கொண்டாடி, கம்யூனிஸ்ட் கட்சி திரட்டிக் கொடுத்த ஒரு கோடி ரூபாய் நிதியை கட்சிக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார்.

    தமிழக அரசு ‘அம்பேத்கர் விருது’ வழங்கி, அதனுடன் கொடுத்த ஒரு இலட்சம் ரூபாய் நிதியையும் விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கு அளித்துவிட்டார்.

    தமிழகத்தின் சுற்றுச் சூழலைக் காப்பதற்கு போராட்டக் களத்தில் முன்னோடியாக இருந்தவர். குற்றாலம் அருவிக்கு அருகில் ரேஸ்கோர்ஸ் அமைக்கும் முயற்சியைத் தடுத்தவர். தாமிரபரணி மணல் கொள்ளையைத் தடுக்க மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் போராடியவர். தாமிரபரணி ஆற்று நீரை வரைமுறையின்றி பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் சுரண்டுவதைத் தடுக்கப் போராடியவர். அவரது போராட்ட வரலாறு அத்தியாயங்கள் நீளமானவை.

    மக்கள் தொண்டராக எளிய வாழ்வில் எல்லோருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்து வரும அண்ணன் நல்லகண்ணு அவர்கள் தனது வாழ்விணையரையும் இழந்த நிலையில், 94 வயதில் தியாகராயர் நகர் அரசுக் குடியிருப்பில் வசித்து வந்தார்.

    2007 ஆம் ஆண்டு ஆருயிர் அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்கள் நல்லகண்ணு அவர்களுக்கு அரசுக் குடியிருப்பை இலவசமாக ஒதுக்கீடு செய்தார். ஆனாலும் அதற்கு குடியிருப்பு வாடகைத் தொகையை அரசுக்குச் செலுத்தி வந்தவர்.

    அண்ணன் நல்லகண்ணு அவர்களின் தியாகத்தைப் பற்றியும், மக்களுக்கு அவர் ஆற்றிய பொதுத் தொண்டையும் மதிக்கத் தெரியாத எடப்பாடி பழனிச்சாமி அரசு, அரசுக் குடியிருப்பிலிருந்து அவரை வெளியேற்றிய முறை வன்மையான கண்டனத்துக்கு உரியது. மன்னிக்க முடியாதது.

    பெருந்தலைவர் காமராசர் அவர்களின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தியாக சீலர் கக்கன் அவர்களுக்கு வழங்கப்பட்ட குடியிருப்பிலிருந்து அவரது குடும்பத்தினரை வெளியேற்றி இருப்பதும் கண்டிக்கத் தக்கது.

    எடப்பாடி பழனிச்சாமி அரசு இத்தகைய செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதுடன், அண்ணன் நல்லகண்ணு அவர்களுக்கும், கக்கன் குடும்பத்திற்கும் அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கித் தரவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

     

  • மக்களவை தேர்தலுக்கான வு 6ம் கட்ட வாக்குப்பதி தொடங்கியது7 மாநிலம், 59 தொகுதியில் 6ம் கட்ட

    7 மாநிலங்களில் உள்ள 59 மக்களவை தொகுதிகளில் இன்று 6ம் கட்ட மக்களவை தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    இன்றைய தேர்தலில் 3 முன்னாள் முதல்வர்கள், மத்திய அமைச்சர் மேனகா காந்தி, விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, ஏற்கனவே 425 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள? நிலையில், எஞ்சியுள்ள 118 தொகுதிகளுக்கு மேலும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி, இன்று பீகார் 8, அரியானா 10, ஜார்கண்ட் 4, மபி. 8, உபி. 14, மேற்கு வங்கம் 8, டெல்லியில் 7 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதையொட்டி பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் போலீசாரும், மத்தியப் படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    6ம் கட்ட மக்களவை தேர்தலில் காலை 10 மணி வரை பதிவான வாக்கு சதவிகித விவரம்

    பீகார் – 9.03%  ஹரியானா – 8.79%
    மத்திய பிரதேஷ் – 12.54%
    உத்தர பிரதேஷ் – 9.37%
    மேற்கு வங்காளம் – 16.99%
    ஜார்கண்ட் – 15.36%
    டெல்லி – 7.91%

  • தணிக்கை குழுவில் U/A சான்றிதழை பெற்ற ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு

    சுட்டுப்பிடிக்க உத்தரவு’ அதன் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் எதிர்பாராத விதத்தில் வெளியாகி, மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை தூண்டி விட்டிருக்கிறது. குறிப்பாக, இயக்குனர்கள் மிஷ்கின், சுசீந்திரன் ஆகியோருடன் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி ஆகியோரும் இணைந்து நடிப்பது படத்துக்கு ஒரு பெரிய ஈர்ப்பை கொடுத்துள்ளது. படத்தின் காட்சி விளம்பரங்கள் இன்னும் பெரிய அளவில் சுவாரஸ்யமாக அமைந்து, படத்தை மேலும் சிறப்பாக கொண்டு சென்றது. அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீஸை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த படம் தணிக்கை சான்றிதழையும் பெற்று விட்டது. சமீபத்தில் இந்த திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் படத்துக்கு U/A சான்றிதழை அளித்திருக்கிறார்கள்.
    சுட்டுப்பிடிக்க உத்தரவு ஒரு தீவிர ஆக்ஷன் த்ரில்லர் படம். தினேஷ் காசி சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். கூடுதலாக, அவரும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதோடு, டூப் இல்லாமலும், கயிறு இல்லாமலும்  சண்டைக் காட்சிகளில் அவரே துணிந்து செய்திருக்கிறார். உயரமான ஒரு கட்டடத்திலிருந்து குதிக்கும்போது அவரது கால் முறிந்து விட்டது. ஆனாலும் அடுத்த 30 நிமிடங்களில் சக்கர நாற்காலியில் படப்பிடிப்புக்கு திரும்பி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். இந்த படத்தின் 80% படப்பிடிப்பு சண்டக்கலைஞர்களை வைத்து தான் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது, இந்த படம் ஒரு மிகச்சிறந்த ஆக்‌ஷன் படமாக இருக்கும் என உறுதியளிக்கலாம்.
    ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ராம் பிரகாஷ் ராயப்பா இந்த படத்தை இயக்குகிறார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் P.K.ராம் மோகன் இந்த படத்தை தயாரிக்கிறார். சுஜீத் சாரங் (ஒளிப்பதிவு), ஜாக்ஸ் பிஜாய் (இசை) மற்றும் ஜி.ராமராவ் (படத்தொகுப்பு) ஆகியோர் டிரைலரிலேயே தங்கள் முத்திரையை பதித்து விட்டனர். படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் தயாரிப்பாளர்களால் வெளியிடப்படும்.
  • களவாணி – 2 படத்திற்கு ” பகுதி ” தடை மட்டும் நீங்கியுள்ளது

    களவாணி 2 படத்தை நடிகர் விமல் தயாரிப்பதாக கூறி மெரினா பிக்சர்ஸ் சிங்காரவேலனிடமிருந்து 13.10.2017-ல் பணத்தை  பெற்று கொண்டு காப்பி ரைட் ஒப்பந்தம் செய்து கொடுத்தார். ஆனால் சொன்னபடி படத்தை தன் பெயரில் தயாரிக்காமல் இயக்குநர் சற்குணம் தயாரிப்பது போல் சித்தரித்து இருந்தார். படத்தின் காப்பிரைட் உரிமையை பெற்றிருந்த மெரினா பிக்சர்ஸ் சிங்காரவேலன், படத்தின் தமிழக விநியோக உரிமையை தனலட்சுமி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்திடம் வழங்கி இருந்தார்.
    படத்தின் தமிழக விநியோக உரிமை தங்களிடம் தரப்படாமல் இருந்ததால் தனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தை அணுகி 6 வார இடைக்கால தடை பெற்றிருந்தது. இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சிங்காரவேலன், விமல், சற்குணம், ஆகியோர் சேர்க்கப்பட்டு இருந்தனர்.
    இந்நிலையில் திடீர் திருப்பமாக மூன்றாம் எதிர்மனுதாரர் இயக்குநர் சற்குணம் நீதிமன்றத்தை அணுகி விமல் செய்து கொடுத்த ஒப்பந்தத்திற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும்,  அதனால்  தடையில் இருந்து தனக்கு மட்டும் விலக்கு அளிக்க மனு அளித்தார்.
    அவர் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் இயக்குநர் சற்குணம் மட்டும் படத்தை வெளியிட தடையில்லை எனவும், மற்றவர்கள் வெளியிட தடை  நீடிப்பதாகவும், கூடுதல் ஆவணங்களுடன் மனுதாரர் மனுதாக்கல் செய்து வழக்கை நடத்தி கொள்ளலாம் எனவும் தீர்ப்பளித்துள்ளது.
    இந்த தீர்ப்பை எதிர்த்து தனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் அப்பீல் மனு செய்ய உள்ளது. வழக்கு முடியும் வரை படத்தை வெளியிட்டால், தாங்கள் செலுத்திய பணத்திற்கு நீங்கள் தான் பொறுப்பு  என்று படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கும் ஸ்கிரீன் சீன் நிறுவனத்திற்கும், கஸ்தூரி பிலிம்ஸ் நிறுவனத்திற்கும், முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், வெளிநாடு விநியோகஸ்தர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப தனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
    படத்திற்கு பகுதி தடை மட்டுமே நீங்கி  இருப்பதால் பட வெளியீட்டிற்கு தொடர்ந்து முட்டுக்கட்டை நீடிக்கும் நிலை உருவாகியுள்ளது.

  • அயோக்யா படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்திய நடிகர் பார்த்திபன்!!!

    அயோக்யா திரைப்படம் குறித்து அந்தப் படத்தில் நடித்த பார்த்திபன் விமர்சனம் செய்துள்ளார். அயோக்யா திரைப்படம் குறித்து நடிகர் பார்த்திபன் ட்விட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், 1994ஆம் ஆண்டு வெளியான ‘உள்ளே வெளியே’ படத்தை லவுட்டி தன்னையே நடிக்க வைத்தது என்ன ஒரு அயோக்கியாத்தனம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் கதை திருடியது குற்ற உணர்ச்சி இல்லாமல் எப்படி? என இயக்குநருக்கு கேள்வி எழுப்பிய பார்த்திபன், வழக்கு செய்யாமல், பெருமையுடன் பதிவிடுகிறேன் எனவும் கூறியிருந்தார்.

    நடிகர் பார்த்திபனின் இந்த ட்வீட் அயோக்யா படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் சமூகவலைதளங்களிலும் வைரலானது. இந்நிலையில் தனது ட்வீட்டின் பின்னணி குறித்து பார்த்திபன் விளக்கமளித்துள்ளார்.

    இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், ஒப்பீட்டால் ரிப்பீட்டாகும் ரசிகர்கள்! ‘அயோக்கியா’-என் பதிவு ஒரு விளம்பர யுத்தி என்பதை யாராவது கண்டுபிடித்து விடுவார்களோ என யோசித்துக் கொண்டிருந்தேன். நல்ல வேளை!. ‘டெம்பர்’ வரும்போது தெரியாது. தமிழாகும் போது தெரியும். இதை கூடிப்பேசி கூத்தடிப்போம் ஷூட்டிங் ஸ்பாட்டில்.

  • வெப் சீரிஸ்களை குறைசொல்ல தேவையில்லை சனம் ஷெட்டி

    தமிழில் அம்புலி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, கதம் கதம், சவாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மாறிமாறி நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் மிஷ்கினிடம் துணை இயக்குனராக பணியாற்றிய அர்ஜுன் கலைவன் என்பவர் இயக்கிவரும் புதிய படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் சனம் ஷெட்டி.
    ‘பர்மா’ படத்தில் நடித்த மைக்கேல் கதாநாயகனாக நடிக்கிறார். ரிவெஞ்ச் திரில்லர் ஜானரில், அதே சமயம் ஒரு அர்த்தமுள்ள காதல் கதையாக இந்த படம் உருவாகி வருகிறது.. சாதாரண நடுத்தர வீட்டுப்பெண்ணாக நாயகனின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சனம் ஷெட்டி.
    .
    சனம் ஷெட்டி நடிப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகியுள்ள ‘டிக்கெட்’ என்கிற ஃபேண்டஸி  படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இது தவிர தற்போது  வெப் சீரிஸ்  பக்கமும் கவனத்தைத் திருப்பியுள்ள இவர் அதிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
    படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது எதற்காக வெப் சீரியஸ் என கேட்டால், “தற்போது எல்லாமே டிஜிட்டல் மயமாகி வருகிறது. அதுமட்டுமல்ல ஒரு நடிகையாக வெப் சீரிஸ் மற்றும் சினிமா இரண்டுக்கு பெரிய வித்தியாசம் எனக்கு தெரியவில்லை. இரண்டுக்கும் ஒரே விதமான உழைப்பைத்தான் கொடுக்கவேண்டி இருக்கிறது. அவை வெளியாகும் தளங்கள் தான் வேறு. தமிழில் வெப் சீரிஸ்கள் ரொம்பவே குறைவாக வருகின்றன. ஆனால் இதற்கான பார்வையாளர்கள் நிறைய இருக்கிறார்கள்.. அதனால் அதற்கான தேவை அதிகமாக இருக்கிறது” என்கிறார்.
    வெப் சீரிஸ் என்கிற பெயரில் சென்சார் அனுமதி தராத விஷயங்களையெல்லாம் உள்ளே புகுத்துவது நியாயமா என்கிற ஒரு கேள்வியையும் அவரிடம் கேட்டால், “கதையை இயல்பான விதத்தில் சொல்ல வேண்டும் என்பதற்காக சில நேரத்தில் எதார்த்தமாக சில விஷயங்களை இணைத்திருப்பார்கள்.. அதில் நாம் தவறு கண்டுபிடித்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை” என்கிறார் சனம்ஷெட்டி.
  • சரண் இயக்கும் மார்கெட் ராஜா MBBS படத்தில் நடிகர் ஆரவ் – நடிகை நிகிஷா படேல்

    இயக்குநர் சரண் இயக்கும் படத்தில் நடிகர் ஆரவ் – உடன் இணைந்துள்ளார் நடிகை நிகிஷா படேல். இப்படத்தின்  தலைப்பு மார்கெட் ராஜா MBBS ஆகும்.
    “நான் இந்தபடத்தில் ஆரவ் உடைய காதலியாக நடித்திருக்கிறேன்  மேலும் படத்தில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நான் ஏற்கனவே முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக காத்துக்கொண்டு இருக்கிறேன். இயக்குநர் சரண் என்னை மிகவும் ஃபேஷனான கதாபாத்திரத்தில் வடிவமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் K.V குகன் தனது வேலையை அருமையாக செய்துள்ளார்.”
     நிகிஷா படேல் தற்போது G.V. பிரகாஷ் குமார் நடித்து இயக்குநர் எழில்  இயக்கும் திகில் படத்திலும் இணைந்துள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பையும்  முடித்துவிட்டார். சமீபத்தில் தான் இவர்  T-series இந்தி இசை ஆல்பத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவர் நடித்த இரண்டு திரைப்படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கிறார்.
  • மதன் கார்க்கி உற்சாகப்படுத்தியுள்ளது எது !

    கடினமான உழைப்பு, உறுதியான அர்ப்பணிப்பு இருந்தால் வெற்றி நிச்சயம் வரும். ஆனால் அது புதுமையான விஷயத்தை முயற்சிக்கும் போது கிடைத்தால் அது மிகப்பெரிய சாதனை. பின்பற்றுவதற்கு பாதை எதுவும் இல்லாமல், ஒரு புதிய பாதையை உருவாக்கும் முயற்சி அது. DooPaaDoo என்பது இசையில் புதிய முயற்சிகளை ஊக்கப்படுத்தும் ஒரு இடம். திறமையான இசைக்கலைஞர்களை கண்டுபிடிப்பது, அவர்களுடன் இணைந்து இசையை உருவாக்குவது தான் இவர்களின் நோக்கம். இன்று, ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தின் முழுமையான ஆல்பத்தை உருவாக்கி, தமிழ் இசை துறையில் DooPaaDoo தன் பெயரை பதித்திருக்கிறது. DooPaaDoo சுயாதீன இசை கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு வசதியான தளத்தை உருவாக்கி கொடுக்கிறது.

    பாடலாசிரியர் மற்றும் DooPaaDooவின் இணை நிறுவனருமான மதன் கார்க்கி இது குறித்து கூறும்போது, “இது என்னை மிகவும் . நான் இதை பெருமையால் சொல்லவில்லை, திறமையான சுயாதீன கலைஞர்கள் எங்கள் தளத்தின் மூலம் இசைத்துறையில் புகழ் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 2017ல் ராகவா லாரன்ஸ் மாஸ்டரை சந்தித்தபோது, ​​நாங்கள் அவருக்கு DooPaaDoo பற்றிய புதிய கருத்துகளை அறிமுகப்படுத்தினோம். புதிய முயற்சிகளை பரிசோதித்து பார்க்க எந்த தயக்கமும் இல்லாமல் ஒப்புக் கொண்ட அவர், எங்கள் ஸ்டுடியோவிற்கு வந்தார். அவரது படத்தின் கதையின் சூழ்நிலைகளை அடிப்படையாக கொண்டு பாடல்களை பட்டியலிட்டோம். நாங்கள் அவருக்கு அளித்த அனைத்து பாடல்களையும் கேட்ட அவர், ஆறு பாடல்களை தேர்ந்தெடுத்தார். மேலும் மீதமுள்ள பாடல்களை அவரது அடுத்தடுத்த படங்களில் பயன்படுத்துவதாக எங்களுக்கு உறுதியளித்தார். காஞ்சனா 3ல் மிகவும் தனித்தன்மையான விஷயம் என்னவென்றால், பாடலின் பின்னணியில் உள்ள எந்த பெயரையோ அல்லது கலைஞர்களின் அடையாளங்களையோ நாங்கள் வெளிப்படுத்தவில்லை. நாங்கள் நினைத்தது வெற்றியாக மாறி, DooPaaDooவை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தியிருக்கிறது. கலைஞர்களின் பெயர்களை தெரிந்து கொள்ளாமலேயே காஞ்சனா 3 பாடல்களை ரசிகர்கள் ரசிப்பதை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை இது விரைவில் ஒரு நடைமுறையாகவும் மாறலாம். அதாவது, ஒரு சிறந்த இசையின் வெற்றி கலைஞரின் திறமை, பாடல்களின் தரம் மற்றும் கலையின் புத்துணர்வைப் பொறுத்து இருக்குமே தவிர, அந்த இசையுடன் சம்பந்தப்பட்ட பிராண்டை ஒட்டி இருக்காது” என்றார்.

    தங்களது எதிர்கால திட்டங்கள் குறித்து DooPaaDooவின் தலைவர் & CEO கவுந்தேயா கூறும்போது, “நாங்கள் இன்னும் பல இயக்குனர்களுடன் இணைந்து செயல்பட முயற்சிக்கிறோம். சுயாதீன கலைஞர்களை இன்னும் நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்கவும், அவர்களின் புகழை விரிவுபடுத்தவும் முயற்சிக்கிறோம். ராகவா லாரன்ஸ் மாஸ்டர், DooPaaDooவை அவர் படத்துக்கு முயற்சித்ததோடு நில்லாமல், மற்ற இயக்குனர்களுக்கும் பரிந்துரை செய்வதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். DooPaaDoo காஞ்சனா 3 மூலம் 6 கலைஞர்களுக்கு வாய்ப்பை பெற்று தந்ததில் மகிழ்ச்சி அடைகிறது. மேலும் இதில் இருந்து இன்னும் பலரை அறிமுகப்படுத்த விரும்புகிறோம்” என்றார்.