SSR சத்யா பிக்சர்ஸ் வழ ங்கும் இசைஞானி இளையராஜா அவர்கள் இசை மழையில் SSR சத்யா Bsc.,M.A,Mphil., LLB, ஜெனிபெர் மார்கிரட் MA. B.Ed.. அவர்கள் மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கும் பசும்பொன் சித்தர் ஸ்ரீ முத்துராமலிங்க தேவர் அவர்களின் வாழ்க்கை வரலாற்று காவியம் தேசிய தலைவர் இசை முன்னோட்டம் இன்று (10/10/25) சிறப்பாக நடந்தேறியது..கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் முன்னிலையில் மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா அவர்கள் குறுந்தகடை வெளியிட இளையதிலகம் பிரபு அவர்கள் பெற்று கொண்டு சிறப்பித்தார்கள்…
தேசிய தலைவர் தேவராகவே வாழ்ந்திருக்கும் வரலாற்று நாயகன் ஜே.எம்.பஷிர் தேவர் தோற்றத்திலேயே விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தது அனைவரின் பராட்டுதலையும் பெற்றது குறிப்பிடத்தக்கது…
இயக்கம் – ஆர்.அரவிந்த்ராஜ் B.A,Df.Tech.
சிறப்பு விருந்தினராக திரு V. பழனிவேல் திரு.மூர்த்தி தேவர், திரு ராஜ் மோகன், திரு.ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் கலந்து கொள்ள இசை முன்னோட்டம் வெளியிடப்பட்டது..
கருப்பு வெள்ளை சினிமா, கலர் சினிமா டிஜிட்டல் சினிமா, ஏஐ சினிமா என செலுலாய்டு உலகம் காலத்திற்கு ஏற்ப சில மாற்றங்களை கண்டிருக்கிறது. அந்த வகையில் சந்தோஷ் நம்பிராஜன் இயக்கத்தில் “அகண்டன்” தமிழ் சினிமாவில் புதியதொரு அத்யாயத்தை தொடங்கியிருக்கிறது.
உலக நாடுகள் பலவற்றிலும் பல்வேறு விருதுகளை அள்ளிக்குவித்த படம் செழியன் இயக்கத்தில் வெளியான “டூலெட்”. இந்த திரைப்படத்தின் நாயகனாக அறிமுகமானவர் சந்தோஷ் நம்பிராஜன். அதன் பின் ” வட்டார வழக்கு”, “உழைப்பாளர் தினம்” என இவர் நடித்த படங்கள் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டவை. இவர் நடிப்பில் அடுத்த விரைவில் வெளியாகும் “ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன்” இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் கலந்து பலரது கவனத்தையும் ஈர்த்தது. சொட்ட வைக்கும் காதல் ரசத்தோடு “காதலிசம்” திரைப்படமும் இணையத்தில் லிவிங் டுகெதர் ? கல்யாணமா? எது வருங்கால தலைமுறைக்கு சிறந்தது என்று பேசி பலராலும் பாராட்டப்பட்டது.
தமிழில் முதல் முயற்சியாக ஐபோன் 11 மேக்ஸில் ஒரு சினிமாவை வார்த்தெடுத்திருக்கிறார் சந்தோஷ். ஆம் செல்போனில் எடுக்கும் படங்கள் ஒரு வீடு, சின்ன கிராமம் அதைத்தாண்டி அந்த பட்ஜெட்டில் யோசிக்க முடியாது. அந்த தியரியை உடைத்து இந்தியா, சிங்கப்பூர், மலேசியா என மூன்று நாடுகளில் போனில் சூட் செய்து சாத்தியம் என்பதை “அகண்டன்” திரைப்படத்தில் நிரூபித்திருக்கிறார்.
“அகண்டன்” திரைப்படம் தமிழ்சினிமாவிற்கு புதிய வாசலை திறக்கிறது. இனி செல்போனில் படம் பார்ப்பது மட்டுமல்லாமல் படம் எடுத்து வெளியிடவும் முடியும். இந்த “அகண்டன்” படம் அகண்ட திரையான திரையரங்கிற்கு வருவது தமிழ் சினிமாவில் ஒரு புதிய பாய்ச்சல். புதிய முயற்சிக்கு பூஞ்செண்டு தந்து வரவேற்கும் பத்திரிகை, தொலைக்காட்சி இணையதள நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
படத்தை சந்தோஷ் நம்பிராஜனும், அவரது சகோதரர் பிரேம்சந்த் நம்பிராஜனும் இணைந்து நம்பிராஜன் இன்டர்நேஷனல் சினிமாஸ் சார்பில் தயாரித்துள்ளனர். சிங்காவுட் என்ற சிங்கப்பூர் நிறுவனம் இணை தயாரிப்பு.
நடிகர்கள் சந்தோஷ் நம்பிராஜன், ஹரினி, பிரபல சிங்கப்பூர் நடிகர் யாமீன் மற்றும் பலர் நடித்துள்ளனர். நான்கு சண்டை காட்சிகள் பிரமிக்க வைக்கும்.
சென்னை, 9 அக்டோபர் 2025: காவேரி மருத்துவமனை குழுமம், தனது ஆழ்வார்பேட்டை மருத்துவமனையானது கௌரவமிக்க ஜாயிண்ட் கமிஷன் இன்டர்நேஷனல் (JCI) 8-வது பதிப்பு அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதை பெருமிதம் கலந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. இதற்கு முன்னதாக 2025 ஜனவரி மாதத்தில் இக்குழுமத்தின் வடபழனி மருத்துவமனை இதே அங்கீகாரத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரட்டை அங்கீகாரத்தின் மூலம், இந்தியாவில் JCI-ன் பல அங்கீகாரத்தைப் பெற்ற பல மையங்களைக் கொண்ட வெகு சில பிரத்யேக மருத்துவமனைகளின் பட்டியலில் காவேரி இணைந்திருக்கிறது. இதன்வழியாக, உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சேவைக்கான ஒரு நம்பகமான மையம் என்ற தனது வலுவான அந்தஸ்தை காவேரி மருத்துவமனை குழுமம் மீண்டும் உறுதி செய்துள்ளது. JCI 8-வது பதிப்பின் தரநிலைகள், உலகளாவிய சுகாதாரப் பராமரிப்பில் மிகவும் கடுமையான மற்றும் மேம்படுத்தப்பட்ட அளவுகோல்களைக் குறிக்கின்றன. அளவிடக்கூடிய 1,094 கூறுகளை உள்ளடக்கிய இந்தத் தரநிலைகள் பின்வருவனவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கின்றன: ● நோயாளியின் பாதுகாப்பே முதன்மையானது: கண்டிப்பாக பின்பற்றப்படும் நோய்த்தொற்று கட்டுப்பாட்டு முறைகள், சிறப்பான மருந்தளிப்பு மேலாண்மை மற்றும் அறுவை சிகிச்சையில் பாதுகாப்பு நெறிமுறைகளைத் தவறாமல் பின்பற்றுதல். ● மருத்துவ சிகிச்சையில் மேன்மை: சிகிச்சை விளைவுகளை தொடர்ச்சியாகக் கண்காணித்தல், சான்றுகள் அடிப்படையிலான மருத்துவ நெறிமுறைகளைப் பயன்படுத்துதல் மற்றும் நோயாளியின் பராமரிப்பில் பல்துறை நிபுணத்துவத்தை ஒருங்கிணைத்தல். ● வெளிப்படைத்தன்மை மற்றும் உரிமைகள்: நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் தெளிவான தகவல் பரிமாற்றம், நோயாளிகளது உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் சிகிச்சையில் பகிர்வு அடிப்படையில் இணைந்து முடிவெடுத்தல். ● அவசரகால சிகிச்சைக்கான தயார்நிலை: சிக்கலான மருத்துவச் சூழல்களைக் கையாள நிறுவப்பட்டிருக்கும் மேம்பட்ட அமைப்புகள், நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் உயிர்காக்கும் சிகிச்சைகள் கிடைப்பதை உறுதி செய்வது. ● தொடர்ச்சியான மேம்பாடு: சிகிச்சையின் தரத்தை மேம்படுத்த பணியாளர்களுக்கு, குறித்த காலஅளவுகளில் முறையான தொடர் பயிற்சி, மருத்துவத் தணிக்கைகள் மற்றும் சிகிச்சை பராமரிப்பின் தரத்தை தொடர்ந்து மேம்படுத்த நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்துதல். ● பசுமை மருத்துவமனை: காவேரி மருத்துவமனையைப் பொறுத்தவரை, நோய்களுக்கு சிகிச்சையளிப்பதுடன் அதன் கடமை முடிந்துவிடுவதில்லை என்று உறுதியாக நம்புகிறது. நோயாளிகள் வாழும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும், எதிர்காலத் தலைமுறையினருக்குப் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் நீடித்த சுகாதார சேவையை உறுதி செய்வதும் தனது கடமை பொறுப்பில் உள்ளடங்கியது என்ற கண்ணோட்டத்துடன் இம்மருத்துவமனை செயல்படுகிறது. உலகளாவிய தரங்களுக்கு நிகரான சிகிச்சை மற்றும் செயல்பாட்டின் வழியாக, காவேரி மருத்துவமனை இன்றைய நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல், நாளைய சமூகத்தின் ஆரோக்கியத்திற்கும் பொறுப்பேற்கிறது. ‘உலகளாவிய சுகாதாரத் தாக்கம்’ என்பது ஒரு தரம் மட்டுமல்ல, அது ஒரு வாக்குறுதி: நோயாளிகளுக்குப் பாதுகாப்பான, சமூகத்திற்கு அறிவார்ந்த, பூமிக்கு உகந்த உலகத் தரம் வாய்ந்த சேவையை வழங்குவோம் என்பதே காவேரி மருத்துவமனை வழங்கும் வாக்குறுதி. தர அங்கீகாரம் பெற்ற இச்சாதனை குறித்து, காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:
“இந்த சாதனை ஒரு நிறுவன மைல்கல்லை விட அதிகம் – இது சென்னைக்கு பெருமை சேர்க்கும் தருணம். காவேரி ஆழ்வார்பேட்டை மற்றும் வடபழனியில் இரட்டை JCI அங்கீகாரம், உலகளாவிய சுகாதார மையமாக நமது நகரத்தின் வளர்ந்து வரும் அந்தஸ்தைப் பிரதிபலிக்கிறது.
சிகிச்சை பெறுபவர் பாதுகாப்பு, தொற்று கட்டுப்பாடு, மருத்துவ நிர்வாகம் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கான உலகளாவிய தரநிலைப்படுத்தப்பட்ட அமைப்புகளை JCI அங்கீகாரம் உறுதி செய்கிறது. சேர்க்கை முதல் வெளியேற்றம் வரை – பராமரிப்பின் ஒவ்வொரு படியும் – குறைவான மருத்துவ பிழைகள், விரைவான மீட்பு மற்றும் சிகிச்சை பெறுபவர் திருப்திக்கு வழிவகுக்கும் சான்றுகள் சார்ந்த நெறிமுறைகளைப் பின்பற்றுகிறது.
அதே நேரத்தில், செயல்திறன், குறைக்கப்பட்ட வீணாக்கம் மற்றும் சிறந்த ஒருங்கிணைப்பு ஆகியவை ஒட்டுமொத்த பராமரிப்பு செலவைக் குறைக்க உதவுகின்றன. “முதல் முயற்சியிலேயே விஷயங்களைச் சரியாகச் செய்வதன் மூலம், சுகாதாரப் பராமரிப்பை உயர் தரத்துடனும் மலிவு விலையுடனும் ஆக்குவதில் நாங்கள் உறுதியாக செயல்படுகிறோம்.” இந்த அங்கீகாரம் எங்களிடமும் சிகிச்சை பெறுபவர்களுக்கு உலகின் சிறந்த தரங்களுடன் இணக்கமான பராமரிப்பைப் பெறுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.”
பொதுமக்களைப் பொறுத்தவரை, இந்த அங்கீகாரம் பாதுகாப்பான அறுவை சிகிச்சைகள், குறைந்த நோய்த்தொற்று அபாயங்கள், துல்லியமான நோய் கண்டறிதல் மற்றும் மேம்பட்ட சிகிச்சை முடிவுகள் ஆகியவற்றை இம்மருத்துவமனை உறுதி செய்கிறது என்பதை உணர்த்துகிறது. மேலும், ஆசியாவின் மருத்துவத் தலைநகரம் என்று நீண்ட காலமாக அங்கீகரிக்கப்பட்ட சென்னை, உலகளாவிய சிகிச்சை பராமரிப்புத் தரங்களைத் தொடர்ந்து பின்பற்றுவதோடு, அவைகளையும் மிஞ்சி சிறந்து விளங்குகிறது என்ற உத்திரவாதத்தை சர்வதேச நோயாளிகளுக்கும் இந்த அங்கீகாரம் வழங்குகிறது. JCI-ன் தர அங்கீகாரம் பெற்ற இரு கிளைகளுடன் இயங்கும், காவேரி மருத்துவமனை குழுமம், மருத்துவச் சிகிச்சையில் மேன்மை மற்றும் நோயாளிகளுக்கான பாதுகாப்பில் ஒரு புதிய தரஅளவுகோலை நிர்ணயிக்கிறது. இதன் மூலம், இந்திய மக்களுக்கும் மற்றும் உலகளாவிய சமூகத்தினருக்கும் நம்பகமான, மிக உயர்ந்த சிகிச்சை பராமரிப்பை உறுதி செய்யும் மருத்துவச் சேவையின் தலைநகராக புகழ் பெற்றிருக்கும் சென்னையின் நற்பெயரை இது மேலும் வலுப்படுத்துகிறது. மேம்பட்ட தொழில்நுட்பம், பல்துறை சார்ந்த நிபுணத்துவம் மற்றும் கனிவான பராமரிப்பு சேவை ஆகியவற்றின் மூலம், காவேரி மருத்துவமனை சென்னையின் சுகாதாரச் சூழலமைப்பில் உயர்மேன்மை என்ற சொற்றொடரின் பொருளை மறுவரையறை செய்கிறது. தரநிலைக்கான இரட்டை அங்கீகாரத்தை காவேரி குழுமம் பெற்றிருப்பது, மருத்துவப் பயணிகளால் விரும்பப்படும் அமைவிடமாகவும், இந்திய மக்களின் நம்பிக்கைக்குரிய தேர்வாகவும் திகழும் சென்னையின் நற்பெயருக்கு கிடைத்திருக்கும் ஒரு வலிமையான அங்கீகாரமாகும்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா நடிப்பில், பூரி ஜெகன்நாத், சார்மி கௌர், JB நாராயணராவ் கொண்ட்ரொல்லா, பூரி கனெக்ட்ஸ், JB மோஷன் பிக்சர்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் #PuriSethupathi படத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், இணைந்துள்ளார்.
தனித்துவமான இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணையும் பான்-இந்தியா திரைப்படமான இன்னும் பெயரிடப்படாத #PuriSethupathi பட படப்பிடிப்பு வெகு வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை பூரி ஜெகன்நாத் தனது பூரி கனெக்ட்ஸ், (Puri Connects) நிறுவனத்தின் மூலம், சார்மி கௌர் மற்றும் JB நாராயணராவ் கொண்ட்ரொல்லா (JB Motion Pictures) ஆகியோருடன் இணைந்து தயாரித்து வருகிறார்.
தெலுங்கு திரையுலகின் அதிர்ஷ்ட நாயகி சம்யுக்தா, இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இத்திரைப்படத்தின் நடிகர், தொழில்நுட்பக் குழுவின் விபரங்களை படக்குழு ஒவ்வொன்றாக வெளியிட்டு வரும் நிலையில், சமீபத்தில் “அர்ஜுன் ரெட்டி”, “கபீர் சிங்”, “அனிமல்” போன்ற படங்களில் தனது இசையால் ரசிகர்களைக் கவர்ந்து பிரபலமான தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், இப்போது #PuriSethupathi படத்திற்காக இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எமோஷன் (Emotion) ஆக்ஷன் மற்றும் மாஸ் என அனைத்தும் கலந்த புதுமையான இசை அனுபவத்திற்குத் தயாராகுங்கள்.
நடிகை தபு மற்றும் விஜய் குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில், பிரம்ஹாஜி மற்றும் VTV கணேஷ் நகைச்சுவை வேடங்களில் தோன்றுகின்றனர்.
படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கவுள்ளது, இதில் முக்கிய நடிகர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்த பான்-இந்தியா எண்டர்டெய்னர் #PuriSethupathi படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
நடிகர்கள் : விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, விஜய் குமார்
தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்குநர் : பூரி ஜெகன்நாத் வழங்குபவர் – சார்மி கௌர் தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத், சார்மி கௌர் தயாரிப்பு நிறுவனம் : பூரி கனெக்ட்ஸ், JB மோஷன் பிக்சர்ஸ் இசை: ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் CEO : விசு ரெட்டி மக்கள் தொடர்பு : யுவராஜ் மார்க்கெடிங் : ஹேஷ்டேக் மீடியா
National Award-winning Composer Harshavardhan Rameshwar On Board For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur, JB Narayan Rao Kondrolla, Puri Connects, JB Motion Pictures’ #PuriSethupathi
Dashing director Puri Jagannadh and versatile actor Vijay Sethupathi’s much-anticipated Pan-India film, #PuriSethupathi is fast progressing with its shoot. Puri Jagannadh is producing the movie under the banner of Puri Connects, in collaboration with Charmme Kaur and JB Narayan Rao Kondrolla of JB Motion Pictures. Tollywood’s lucky charm, Samyuktha, plays the female lead opposite Vijay Sethupathi.
The makers are unveiling the details of the cast and crew one by one. Freshly, they announced that National Award-winning composer Harshavardhan Rameshwar, best known for his work in films like Arjun Reddy, Kabir Singh, Animal, and more, has come on board to compose the music for #PuriSethupathi. Get ready for a new-age musical experience that blends action, emotion, and elevation.
Tabu and Vijay Kumar are the prominent cast, while Brahmaji and VTV Ganesh will be seen in hilarious roles.
The film’s new schedule begins next week, with the lead cast participating.
This Pan-India entertainer, #PuriSethupathi, will be released in five languages- Telugu, Tamil, Kannada, Malayalam, and Hindi.
The much-loved 80s Stars Reunion, a cherished annual tradition among South Indian film industry stalwarts, was held in Chennai on October 4th, 2025, marking a heartfelt return after three years.
Originally planned for last year, the reunion had to be postponed due to the devastating floods in Chennai. This year, the gathering was reorganized — not as a grand celebration, but as an intimate and meaningful meeting of friendship, unity, and solidarity in light of recent events that have touched the state deeply.
At the collective request of the actors, Rajkumar Sethupathy and Sripriya graciously hosted the reunion at their home, in place of the customary five-star venue. The evening was curated by Lissy Lakshmi, Poornima Bhagyaraj, Khushbu Sundar, and Suhasini Maniratnam.
The decision reflected the spirit of simplicity and closeness that defines the bond among these artists who shared the screen and the stage through the vibrant decade of the 1980s.
A total of 31 actors attended the reunion, travelling from across Tamil Nadu, Kerala, Karnataka, Andhra Pradesh, Telangana, and even the Hindi film industry. The evening was filled with warmth, reflection, and camaraderie — reminding everyone that while the years have passed, the friendships forged in the 80s remain steadfast.
The actors shared memories, ideas, and reflections on cinema and life, celebrating the diversity that unites them beyond borders and languages. As dawn approached, each one departed for their respective homes and workplaces — carrying with them the comfort of togetherness and the renewed strength of enduring friendship.
“It wasn’t a night of celebration this time,” said one of the organisers, Suhasini Maniratnam. “It was a quiet gathering of friends who have known each other for decades — to express unity, empathy, and gratitude for the bonds that have outlasted fame and time,” said Lissy Lakshmi.
The 80s Stars Reunion continues to stand as a symbol of lasting friendship, unity in diversity, and the timeless spirit of Indian cinema
80ஸ் ஸ்டார்ஸ் ரீயூனியன்: 1980கள் மற்றும் 90களில் திரையுலகை கலக்கிய நட்சத்திரங்கள் சென்னையில் சங்கமம்
ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீபிரியா இல்லத்தில் நடைபெற்ற இனிய நிகழ்வில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரைத்துறைகளை சேர்ந்த 31 நடிகர்கள் பங்கேற்பு
ஒன்றாகப் படித்த பள்ளி, கல்லூரி நண்பர்கள் மீண்டும் கூடுவது போல 1980கள் மற்றும் 90களில் இந்திய திரையுலகை கலக்கிய நட்சத்திரங்கள் வருடத்திற்கு ஒரு முறை சந்தித்து நட்பை வலுவாக்கி, நினைவுகளை உயிர்ப்பித்து வருகின்றனர். கனமழை காரணமாக கடந்த ஆண்டு இந்த நிகழ்வு நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு 80ஸ் ஸ்டார்ஸ் ரீயூனியன் நடந்தேறியது. ஆர்ப்பாட்ட கொண்டாட்டமாக இல்லாமல் அன்பின் வெளிப்பாடாக இந்த நிகழ்வு நடைபெற்றது.
சென்னையில் ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீபிரியா தம்பதியரின் இல்லத்தில் அக்டோபர் 4 மாலை நடைபெற்ற இந்நிகழ்வை லிஸ்ஸி லட்சுமி, பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பு மற்றும் சுஹாசினி மணிரத்னம் ஒருங்கிணைத்தனர்.
இந்த இனிய நிகழ்வில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரைத்துறைகளை சேர்ந்த 31 நடிகர்கள் மற்றும் நடிகைகள் பங்கேற்றனர். அன்பு, நட்பு, மற்றும் ஒற்றுமை நிறைந்த இந்த சங்கமத்தில் கலந்துகொண்டவர்கள் தங்கள் நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர். மாலையில் தொடங்கிய ரீயூனியன் காலை வரை நடைபெற்றது. பின்னர் அனைவரும் அடுத்த வருடம் ஒன்று கூடுவோம் எனும் உறுதியோடும் நீங்கா நினைவுகளோடும் விடைபெற்றனர்.
இது குறித்து பேசிய ஏற்பாட்டளர்கள் சுஹாசினி மணிரத்னம் மற்றும் லிஸ்ஸி லட்சுமி, “இந்த நிகழ்வை ஒருங்கிணைத்ததில் பெரும் மகிழ்ச்சி. எங்களுக்கிடையேயான நட்பு, அன்பு மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இந்த சங்கமம் அமைந்தது,” என்றானர்.
80ஸ் ஸ்டார்ஸ் ரீயூனியன் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்:
தெலங்கானா அரசின் ஆதரவு பெற்ற அமைப்பான TVAGA உடன் இணைந்து முக்கிய நிகழ்வை ஒருங்கிணைப்பதன் மூலம் பொழுதுபோக்குத் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு புரொடியூசர் பஜார் வித்திடுகிறது
ஃபிப்செயின் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முக்கிய அங்கமான புரொடியூசர் பஜார் தனது பயணத்தை தொடங்கிய நாள் முதலே தொழில்நுட்பத்தின் வாயிலாக இந்திய திரைத்துறை வர்த்தகத்தை செம்மைப்படுத்த பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் வெற்றிப் பயணத்தின் முக்கிய மைல்கல்லாக தெலங்கானா அரசின் ஆதரவு பெற்ற அமைப்பான தெலங்கானா வி எஃப் எக்ஸ், அனிமேஷன் மற்றும் கேமிங் சங்கத்துடன் (TVAGA) இணைந்து இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தொழில்நுட்பத் துறை நிகழ்வான இந்தியா ஜாய் 2025ன் முக்கியப் பகுதியான இந்தியன் ஃபிலிம் மார்க்கெட்டை புரொடியூசர் பஜார் நடத்தவுள்ளது.
ஆங்கிலத்தில் பி2பி (B2B) என்று அழைக்கப்படும் தொழில்துறை நிகழ்வான இந்தியன் ஃபிலிம் மார்க்கெட், இந்திய திரைப்பட மற்றும் ஏவிஜிசி (அனிமேஷன், வி எஃப் எக்ஸ், கேமிங், காமிக்ஸ்) துறைகளுக்கான பிரத்யேக வர்த்தக மையமாக செயல்பட்டு, தேசிய மற்றும் சர்வதேச அளவில் படைப்பாளிகள் மற்றும் உள்ளடக்கத்தை வாங்குவோருக்கிடையேயான பாலமாக செயல்படும்.
இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஹைதரபாத்தில் சமீபத்தில் கையெழுத்திடப்பட்டது. புரொடியூசர் பஜார் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் ஜி.கே. திருநாவுக்கரசு மற்றும் டிவிஏஜிஏ பொதுச்செயலாளர் மைக் மாதவ ரெட்டி இதில் கலந்து கொண்டனர். டிவிஏஜிஏ தலைமை செயல் அலுவலர் ஷேக் காஜா வாலி, புரொடியூசர் பஜார் இணை நிறுவனர் விஜய் டிங்காரி இந்த முன்னெடுப்பில் முக்கிய பங்காற்றினர்.
உள்ளடக்க உரிமைகளை எளிதில் விற்பதற்கான சிறப்பு ஏற்பாடுகளுடன், திரைப்படங்கள், இணையத் தொடர்கள், குறும்படங்கள், பிராந்திய படைப்புகள் உள்ளிட்ட அனைத்து வித படைப்புகளின் வர்த்தகத்திற்கான ஒற்றை சாளரமாக இந்தியன் ஃபிலிம் மார்க்கெட் திகழும். அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ், சன் நெக்ஸ்ட், ஜீ5, ஆஹா உள்ளிட்ட ஓடிடி தளங்கள், ஒலிபரப்பு நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் உள்ளிட்டவை இதில் பங்கேற்று படைப்புகளை வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து பரிவர்த்தனைகளும் வெளிப்படையான மற்றும் நேர்மையான முறையில் நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தியன் ஃபிலிம் மார்க்கெட்டில் வளரும் படைப்பாளிகள் தங்கள் கதைகள் மற்றும் திட்டங்களை தயாரிப்பாளர்கள், ஸ்டூடியோக்கள், ஓடிடி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு எடுத்துரைக்கும் சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
தமிழ் திரையுலகை சேர்ந்த முக்கிய அமைப்புகளான தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்டவற்றின் நிர்வாகிகளை சந்தித்த புரொடியூசர் பஜார் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் ஜி.கே. திருநாவுக்கரசு அவர்களை இந்நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். அவர்களும் இசைவு தெரிவித்தனர்.
இது குறித்து பேசிய புரொடியூசர் பஜார் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் ஜி.கே. திருநாவுக்கரசு, “தெலங்கானா வி எஃப் எக்ஸ், அனிமேஷன் மற்றும் கேமிங் சங்கத்துடன் இணைந்து இந்தியா ஜாய் 2025ன் இந்தியன் ஃபிலிம் மார்க்கெட்டை ஏற்பாடு செய்வதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம். தமிழ் திரைத்துறையின் முக்கிய அங்கங்களான தயாரிப்பாளர்கள் சங்கம், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட அனைவரையும் இந்நிகழ்வில் பங்கேற்க அழைக்கிறோம். படைப்பாளிகள் மற்றும் வாங்குவோருக்கிடையேயான முக்கிய பாலமாக செயல்படுவதில் மிக்க மகிழ்ச்சி,” என்றார்.
Next big leap by Producer Bazaar: Producer Bazaar to co-host India Joy 2025, India’s leading entertainment technology industry event, in partnership with Telangana VFX, Animation and Gaming Association (TVAGA)
Producer Bazaar is paving the way for the next phase of growth in the entertainment industry by co-hosting the flagship event with TVAGA, a Telangana government-backed organisation
Producer Bazaar, the flagship platform of Fipchain Technology Pvt. Ltd., has been taking various initiatives to streamline the Indian film industry through technology since the day of its inception.
In a major milestone in its journey, Producer Bazaar will host the Indian Film Market, a key part of India Joy 2025, India’s leading entertainment technology event, in association with Telangana VFX, Animation and Gaming Association (TVAGA), a Telangana government-backed organisation. The Indian Film Market is envisioned as a first-of-its-kind dedicated marketplace and networking hub for India’s Film and AVGC (Animation, VFX, Gaming, Comics) industries, bridging the gap between creators and buyers at both national and global levels.
A Memorandum of Understanding (MoU) in this regard was signed recently in Hyderabad. Producer Bazaar Founder and CEO G.K. Tirunavukarasu and TVAGA General Secretary Mike Madhava Reddy were present on the occasion. TVAGA CEO Shaik Kaja Vali and Producer Bazaar Co-Founder Vijay Dingari played a key role in the initiative.
The Indian Film Market, a B2B industry event, will serve as a dedicated trade hub for the Indian films by connecting creators and content buyers at the national and international levels.
With special arrangements for easy sale of content rights, the Indian Film Market will be a single window for trade of all types of works including films, web series, short films, regional content. OTT platforms including Amazon Prime, Netflix, Sun Nxt, Zee5, Aha, broadcasters, distributors, TV companies, etc. are expected to participate and buy content.
Organized to ensure that all transactions are conducted in a transparent manner, the Indian Film Market will also feature a special event where budding creators will pitch their stories and projects to producers, studios, OTT companies, etc.
Producer Bazaar founder and CEO G.K. Tirunavukarasu met with executives of key organisations in the Tamil film industry, including the Producers Council and the Active Producers Association, and invited them to participate in the event. They positively responded to the invite.
Speaking about the initiative, Producer Bazaar Founder and CEO G.K. Tirunavukarasu said, “We are delighted and proud to co-host India Joy 2025’s Indian Film Market, in association with the Telangana VFX, Animation and Gaming Association. We invite all the key players in the Tamil film industry, including the Producers Council, the Active Producers Association, producers, distributors, etc. to participate in this event. We are happy to act as a key bridge between creators and buyers.”
சென்னையில் லைட்ஸ் ஆன் அவார்ட்ஸ் (LIGHTZ ÖN AWARDS) இதுவரை 100 குறும்பட இயக்குநர்களுக்கு விருதுகள் கொடுத்து சாதனைப் படைத்துள்ளது, ஏழு வருடங்களாக தொடர்ந்து LIGHTZ ÖN AWARDS நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் அயலான் திரைப்பட இயக்குநர் ரவிக்குமார், பிளாக் பட இயக்குநர் பாலசுப்பிரமணி, பாம் திரைப்பட இயக்குநர் விஷால் வெங்கட் மற்றும் யாத்திசை திரைப்பட இயக்குநர் தரணி ராஜேந்திரன் மற்றும் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் மற்றும் நடிகர் வினோத் கிஷன் மற்றும் நடிகர்-இயக்குநர் ஆனந்த் ராம் ஆகியோர் கலந்து கொண்டு குறும்பட இயக்குநர்களுக்கு விருதுகளை கொடுத்து வாழ்த்துகளை வழங்கினார்.
இதுவரை பல புதிய இயக்குநர்களை LIGHTZ ÖN AWARDS உருவாக்கியுள்ளது. சினிமா மீது ஆர்வம் கொண்ட திறமை உள்ள இளைஞர்கள் சினிமாவிற்குள் வர காரணமாக LIGHTZ ÖN இருக்கிறது.
புதிதாக இரண்டு பெண் குறும்பட இயக்குநர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தை சேர்ந்த ‘முரண்’ என்கிற குறும்படமும் சிறப்பானதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
LIGHTZ ÖN YOUTUBE CHANNEL குறும்பட இயக்குநர்களுக்கான முதல் சேனலாக திகழ்வது பெருமைக்குரியது.
LIGHTZ ÖN AWARDS Sets a Record in Chennai
Chennai: The Lightz On Awards has achieved a remarkable milestone by honouring over 100 short film directors over the years. Now in its 7th consecutive edition, the awards continue to celebrate emerging creative talent in the Tamil short film industry.
The event was graced by several notable personalities from Tamil cinema, including director R. Ravikumar (Ayalaan, Indru Netru Naalai), director K.G. Balasubramani (Black), director Vishal Venkat (Bomb, Sila Nerangalil Sila Manidhargal), director Dharani Rajendran (Yaathisai), actor Vinoth Kishan, actor-director Ananth Ram (Nanban Oruvan Vandha Piragu), and PRO Nikil Murukan, who collectively presented the awards and congratulated the winners.
Over the years, Lightz On Awards has been instrumental in identifying and nurturing several promising filmmakers. The platform has become a stepping stone for passionate young talents aspiring to enter the Tamil film industry.
This year’s ceremony also saw two women short-film directors winning accolades, a sign of the growing diversity in the field. Additionally, Muran, a short film from the United Kingdom, was specially recognised for its outstanding direction and storytelling.
Adding to its list of accomplishments, the Lightz On YouTube Channel proudly holds the distinction of being the first digital platform dedicated entirely to short film directors, continuing its mission to spotlight emerging voices in cinema.
ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் ‘பேட்டில்’ திரைப்படத்தில் இயக்குநர்கள் சுப்பிரமணியம் சிவா, சரவண சுப்பையா மற்றும் நடிகர் முனீஷ்காந்த் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்
எலைட் டாக்கீஸ் பேனரில் கே. பாஸ்கரன் தயாரிப்பில் நாராயணன் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘பேட்டில்’ (‘Battle’). சமீபத்தில் வெளியான ‘தண்டகாரண்யம்’ படத்தின் உதவி எழுத்தாளராகவும் இயக்குநர் சக்திவேலிடம் இணை இயக்குநராகவும் பணியாற்றியவர் நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது.
ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் ‘பேட்டில்’ திரைப்படத்தில் ‘தங்கலான்’ புகழ் அன்புடன் அர்ஜுன், ‘காந்தி கண்ணாடி’ படத்தில் சிறு வயது அர்ச்சனா பாத்திரத்தில் நடித்த ஆராத்யா முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.
இயக்குநர்கள் சுப்பிரமணியம் சிவா, சரவண சுப்பையா, காயத்ரி, முனீஷ்காந்த், சுருளி, ‘இட்லி கடை’ படத்தில் சிறு வயது தனுஷ் பாத்திரத்தில் நடித்த திஹான் மற்றும் திவ்ய ஸ்ரீ உள்ளிட்டோர் ‘பேட்டில்’ படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ஒரு ராப் பாடகரின் வாழ்க்கையைப் பின்னி பிணைந்து முழுக்க சென்னை பின்னணியில் நடைபெறும் இக்கதை, அந்த பாடகர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை திரையில் காட்டுவதோடு ஒரு முக்கிய விஷயத்தையும் வெளிச்சம் போடுகிறது.
திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் நாராயணன், “ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை முழுக்க காட்டும் முதல் தமிழ் படம் இதுவென்று நினைக்கிறேன். ராப் பாடகர்கள் ஒன்று கூடும் இடத்தில் பேட்டில் என்ற நிகழ்வு நடைபெறும். அதை குறிக்கும் வகையிலும், நாயகன் எதிர்கொள்ளும் போராட்டங்களை விளக்கும் வகையிலும் இப்படத்திற்கு ‘பேட்டில்’ என்று பெயர் வைத்துள்ளோம்,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “சரியாக இரண்டு மணி நேரம் ஓடும் இப்படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெறுகின்றன. அர்ஜுன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், ஆராத்யா மிக முக்கிய வேடத்தில் கலக்கியுள்ளார். வலுவான வேடங்களில் இயக்குநர்கள் சுப்பிரமணியம் சிவா மற்றும் சரவண சுப்பையாவும், அமைச்சராக முனீஷ்காந்தும் நடிக்கின்றனர்,” என்று தெரிவித்தார்.
‘பேட்டில்’ படத்திற்கு ஜீவா இசையமைக்க, முன்னணி ஒளிப்பதிவாளர் செழியனின் உதவியாளரான யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய, பிரபல எடிட்டர் லெனின் உதவியாளரான காமேஷ் படத்தொகுப்பை கையாள்கிறார். ராவண ராம், கெபின், நிஷாந்த், கானா அப்பிலோ, சத்யபிரகாஷ் மற்றும் வைஷ்ணவி உள்ளிட்டோர் பாடல்களை பாடியுள்ளனர்.
எலைட் டாக்கீஸ் கே. பாஸ்கரன் தயாரிப்பில் நாராயணன் இயக்கத்தில் அன்புடன் அர்ஜுன், ஆராத்யா நடிக்கும் ‘பேட்டில்’ படத்தின் முதல் பார்வையை இயக்குநர் பா. ரஞ்சித் இன்று வெளியிட்டார்.
‘Battle’ – Starring Anbudan Arjun and Aaradhya is directed by Narayanan and produced by K Bhaskaran of Elite Talkies
Reflecting the life journey of a rap artist on screen, ‘Battle’ features directors Subramaniam Siva, Saravana Subbiah, and actor Munishkanth in important roles
‘Battle’, a film produced by K. Baskaran under Elite Talkies banner, marks the directorial debut of Narayanan. It is noteworthy that Narayanan worked as an assistant writer for the recently released film ‘Thandakaaranyam’ and as a co-director with director Sakthivel.
‘Battle’ which reflects the life journey of a rapper stars Anbudan Arjun of ‘Thangalan’ fame and Aaradhya, who played young Archana in the recently-released ‘Gandhi Kannadi’, in the lead roles.
Directors Subramaniam Siva, Saravana Subbaiah, Gayathri, Munishkanth, Suruli, Dhihaan, who played the role of young Dhanush in the film ‘Idly Kadai’, and Divya Shri are playing important roles in ‘Battle’.
The story, which is set in the backdrop of Chennai, weaves together the life of a rapper and shows the problems that the singer faces and also sheds light on an important issue.
Speaking about the film, director Narayanan said, “I think this is the first Tamil film to show the entire life journey of a rapper. An event called battle will take place when rappers gather. We have named the film ‘Battle’ to symbolise that and also to explain the struggles the protagonist faces,” he said.
He added, “The film, which runs for exactly two hours, has six songs. Arjun has given a great performance, and Aaradhya has beautifully played a very important role. Directors Subramaniam Siva and Saravana Subbaiah have done a great job, and Munishkanth plays a minister,” he said.
Jeeva has composed the music for ‘Battle’, Yuvaraj, a former assistant to leading cinematographer Chezhiyan, is handling the cinematography, and Kamesh, who worked as an assistant to famous editor Lenin, is handling the editing. Ravana Ram, Kevin, Nishanth, Gana Apellow, Sathyaprakash and Vaishnavi have crooned for the songs.
Director Pa. Ranjith released the first look of ‘Battle’ which stars Anbudan Arjun and Aaradhya in the lead roles, today. The film is produced by K. Baskaran of Elite Talkies and directed by Narayanan.
Foot Steps Production தயாரிப்பில், Kothari Madras International Limited இணைந்து வழங்க, இயக்குநர் S சிவராமன் இயக்கத்தில், சோனியா அகர்வால், விக்ராந்த் நடிப்பில், முழுமையான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “வில்” (உயில்).
இப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து படம் பற்றிப் பகிர்ந்து கொண்டனர்.
இயக்குநர் S சிவராமன் பேசியதாவது.., இந்த திரைப்படம் உருவாகக் காரணம் என் எடிட்டர் தினேஷ் தான். அவரிடம் கோர்டில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தைப் பற்றிச் சொன்ன போது, சார் இதைப் படமாக்கலாம் என்றார். ஜட்ஜாக நடிக்க யாரை அணுகலாம் என நினைத்த போது சோனியா அகர்வால் மேடம் ஞாபகம் வந்தது, மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். சோனியா அகர்வால் சகோதரர் சௌரப் அகர்வால் இசை கற்றுக்கொண்டிருப்பதைப் பார்த்து, அவரை இப்படத்தில் அறிமுகம் செய்தேன். மிக அற்புதமாக இசையைத் தந்துள்ளார். இப்படம் ஒரு உயில் சம்பந்தப்பட்டது, உயில் பல குடும்பங்களில் பிரச்சனையாக அமைந்துள்ளது. இது பற்றிய விழிப்புணர்வு தரும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. எடிட்டர் லெனின் சார் படம் பார்த்து என்னைப் பாராட்டினார் அதுவே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. கண்டிப்பாக மக்கள் இப்படத்தை ரசிப்பார்கள் என நம்புகிறேன். விக்ராந்த் இன்வஸ்டிகேடிவ் ஆபிஸராக நடித்துள்ளார். அலிகியா எல்லோரும் செய்யத் தயங்கிய ரோலில் சிறப்பாக நடித்தார் அவருக்கு நன்றி. இது அடிதடி, துப்பாக்கி எல்லாம் வரும் ஆக்சன் படமல்ல. ஃபீல் குட் படம். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
நடிகை அலீகியா பேசியதாவது.., திரையுலகிற்கு நான் புதியவள். இந்த வாய்ப்பைத் தந்த இயக்குநர் சிவராமன் அவர்களுக்கு நன்றி. சோனியா மேடம் கூட நடித்தது நல்ல அனுபவம். என்னை எல்லோரும் நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. அனைவரும் எங்கள் படத்திற்கு ஆதரவு தாருங்கள். நன்றி
நடிகை சோனியா அகர்வால் பேசியதாவது.. இந்தப்படம் எனக்கு மிக முக்கியமான படம். எனது தம்பி சௌரப் அகர்வால் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். என்னைப்போல அவருக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள். சிவராமன் சாருடன் ஏற்கனவே தனிமை படம் வேலை பார்த்துள்ளேன். மக்களின் தினசரி வாழ்க்கையிலிருந்து கதை சொல்வார். அவரே வழக்கறிஞராக இருந்தவர். இந்தக்கதையை மிகச்சிறப்பாக எடுத்துள்ளார். விக்ராந்துடன் வேலை பார்த்தது நல்ல அனுபவம். இப்படம் மிக நன்றாக வந்துள்ளது. சின்னப்படம் பெரிய படம் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை, காதல் கொண்டேன் 1 கோடியில் எடுத்து பிளாக்பஸ்டர் ஆனது. மக்களுக்கு எந்த கதை பிடிக்கும் என்பது அவர்களுக்குத் தான் தெரியும். இந்தப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
ஒரு குடும்பத்தில் ஒரு உயில் ஏற்படுத்தும் பிரச்சனை, நீதிமன்றத்திற்கு வழக்காக வருகிறது. அந்த வழக்கு என்ன ஆனது? உயிலின் பின்னால் இருக்கும் தியாகம் என்ன? என்பது தான் இந்தப்படம்.
இப்படத்தில் நடிகை சோனியா அகர்வால் முதன்மைப் பாத்திரத்தில், நீதிபதியாக மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சிறப்புத் தோற்றத்தில் நடிகர் விக்ராந்த் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
வழக்கறிஞராக பணியாற்றிய S சிவராமன், தான் சந்தித்த உண்மையான வழக்கை, மையமாக வைத்து இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். சோனியா அகர்வால் சகோதரர் சௌரப் அகர்வால் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
முழுக்க முழுக்க கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் சென்னை மற்றும் கோத்தகிரியில் படமாக்கப்பட்டுள்ளது.
உறவுகளின் சிக்கல்களை, ஒரு பெண்ணின் தியாகத்தினை பேசும், ஒரு அழகான படைப்பாக, அனைவரும் ரசிக்கும் வகையிலான படமாக இப்படம் உருவாகியுள்ளது.
வரும் அக்டோபர் 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தொழில் நுட்ப குழு
இயக்கம் : S சிவராமன் தயாரிப்பு: Foot Steps Production இணை தயாரிப்பு: Kothari Madras International Limited இசை: சௌரப் அகர்வால் ஒளிப்பதிவு : TS பிரசன்னா எடிட்டர்: G தினேஷ் பாடியவர்: கலை குமார் கலை இயக்குனர்: மணி நடன இயக்குனர்: அபு & சால்ஸ் சண்டைக்காட்சிகள்: தீ கார்த்திக் வசனம் : எஸ் சிவராமன் ஒலி வடிவமைப்பாளர்: RK அஸ்வத் (DAW RECORDS) ஃபோலே வடிவமைப்பாளர்: R.ராஜ் மோகன் டப்பிங் மற்றும் மிக்சிங் : DAW RECORDS டப்பிங் இன்ஜினியர்: வசந்த் DI & VFX: Fire Fox Studios போஸ்டர் : வியாகி ஸ்டில்ஸ்: நவின் ராஜ் டைட்டில் வடிவமைப்பு: சசி & சசி விளம்பர கட்ஸ் : அரவிந்த் B ஆனந்த் ஒப்பனை: பாரி, கயல் மக்கள் தொடர்பு : பரணி அழகிரி புரமோசன் : Starnest Media தயாரிப்பு நிர்வாகி: ரகுவரன்
இங்கு வந்த அனைத்து ஊடக நண்பர்களுக்கும் என் அன்பான நன்றி. இந்த படத்துக்கு “கம்பி கட்டுன கதை” என்று தலைப்பு வைத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. கதை அமைப்பை மேலும் சிறப்பாக உருவாக்க, பல விவாதங்களை நடத்தினோம். இந்தப் படம் கடந்த 22 ஆண்டுகளாக என்னுடன் பயணித்து வந்த ஒரு கனவு.
ஒரு காமெடி சாமியாரை மையமாகக் கொண்டு கதை உருவாக்கியிருந்தோம். நட்டி சார் இப்படத்திற்கு ஒப்புதல் அளித்ததும், நாங்கள் எழுதிய கதையே முழுமையாக மாறிவிட்டது. எல்லாருடைய வாழ்க்கையும் இப்படத்தில் மாறுபட்ட வகையில் வெளிப்பட்டிருக்கிறது. இந்த படம் எனது நண்பர்களுக்காக ஒரு வாய்ப்பாக அமைந்தது. ஆனால் இவர்கள் அனைவருமே அவர்களது துறைகளில் சிறந்தவர்கள்.
இந்த படம் மங்காத்தா பிக்சர்ஸ் தளத்தில் மிகவும் வலிமையாக உருவாகியுள்ளது. அனைவரும் மிகச் சிறப்பாக வேலை செய்துள்ளனர். இது ஒரு லாஜிக் இல்லாத கதை அல்ல – பகுதி 2 எடுக்கப்படும் அளவிற்கு வாய்ப்பு உள்ளது. எல்லோரும் இதைப் பார்த்து உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். 15 நாட்களில் படம் வெளியாகும். அனைவருக்கும் என் நன்றிகள்.
இங்கு வந்த அனைவருக்கும் வணக்கம். இங்கு இருக்கிற ஒவ்வொருவரும் என் நண்பர்கள்தான். இந்த படத்தை பற்றி சொல்ல வேண்டியது நிறைய இருக்கிறது. நாங்கள் இந்த கதையை உருவாக்கியதில் பெருமை கொள்கிறேன். இது ஒரு நல்ல முயற்சி. எல்லோரும் உறுதியாக இந்த படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டும். நன்றி!
🎤 கதாநாயகன் நட்டி அவர்கள் பேசியது:
அனைவருக்கும் வணக்கம். தயாரிப்பாளர் ஐயாவிற்கு நன்றி. தயாரிப்பு நிறுவனம் மங்காத்தா மூவீஸ் – இவர்களுக்கு நன்றி.
முதலாம் படம் எடுக்கிறதுன்னால, பட்ஜெட் குறைக்க முயற்சி பண்ணுவாங்க. ஆனா எதுவும் குறையாம பண்றவங்க – அவருதான் இந்த தயாரிப்பாளர். ஒரு சாதாரண விஷயம் தான், கதை இங்கே இருந்தது – ஆனா ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் படம் உருவானது.
ஆர்ட் டைரக்டர் சிவா, கேமராமேன் ஜெய் அவர்களுக்கு நன்றி. இந்த படத்துக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.
முருகானந்தம் சார், சிங்கம் புலி, தயாரிப்பாளர், இயக்குனர் கொடுத்த ஆதரவுதான் இந்த படத்தை வெற்றியாக்கியிருக்கு.
ஸ்ரீரஞ்சினி, ஷாலினி – நீங்கள் இருவரும் அருமையாக நடித்தீர்கள். வாழ்த்துகள்! முத்துராமன் சார், மகேஷ் சார், சாம்ஸ் சார், கோதண்டம் சார் – அனைவருக்கும் நன்றி.
இந்த படத்தில் ஸ்கிரிப்ட் என்ன வேண்டும் என்றதோ அதைத்தான் நாங்கள் செய்தோம். அனைத்து டெக்னீஷியன்களுக்கும் நன்றி.
மாஸ் ஆடியோ அவர்களுக்கும், உத்தரா புரொடக்ஷன்ஸ் அவர்களுக்கும் நன்றி. பத்திரிகையாளர், ஊடக நண்பர்களுக்கும் நன்றி.
இந்த படம் தீபாவளிக்கு திரையரங்கில் வெளியாகிறது – கண்டிப்பா வந்து பாருங்க. நன்றி. குறிப்பாக இசையமைப்பாளர் சதீஷ் அவர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள். இசை அமைப்பாளர் சதீஷ் அவர்கள் பேசியது:
எல்லோருக்கும் வணக்கம்.
இன்று எனக்கு ஒரு சிறப்பான நாள். இது எனது வாழ்க்கையில் ஒரு மைல்கல் நாள்.
இந்தப் படத்தை நான் செய்ததில்லை; இந்த படமே என்னை தாண்டி வந்து என்னை உருவாக்கியது.
“ஏதும் இல்லா எல்லாம்” பாடலுக்காக எனது குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பாடலாசிரியர் கார்த்தி, பாடகர்கள் வி.வி. பிரசன்னா மற்றும் சஹானா அவர்களுக்கும் நன்றிகள்.
மாஸ் ஆடியோ உரிமையை வாங்கியவர்களுக்கு நன்றிகள்.
முக்கியமாக, என் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த நன்றிகள். 🙏
🎬 இயக்குனர் மற்றும் நடிகர் சிங்கம்புலி அவர்கள் பேசியது:
“கம்பி கட்டும் கதை” தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. இந்த சிறப்பு விழாவில் பங்கேற்கும் இயக்குநர் அவர்களுக்கு வணக்கம், தயாரிப்பாளர் அவர்களுக்கு என் நன்றிகள்.
இந்தப் படத்தில் நாமும் ஒரு சிறிய பங்களிப்பு செய்ய இருக்கிறோம். நடிகர் நட்டி சர் உடன் நடிக்கப்போகிறோம்.
எனக்கு முருகானந்தம் அவர்களை மிகவும் பிடிக்கும் – நல்ல மனுசன், நல்ல பேச்சாளி.
நட்டி சர், நீங்களும் எனக்கு மிகவும் பிடித்தவர்கள். “மிளகா”யிலிருந்து “மகாராஜா” வரைக்கும் எனது பயணத்தில் நீங்களும் இருந்தீர்கள்.
இந்தப் படத்தில் உள்ள அனைவரும் மிகச் சிறந்த வேலை செய்துள்ளனர் – இசையமைப்பாளர் சதீஷ் அவர்களுக்கு வாழ்த்துகள், எடிட்டர் ஃபாசில் அவர்களுக்கு நன்றி.
நடிகர் சாம்ஸ், நாயகி மற்றும் இரண்டாம் நாயகி ஆகியோர் எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
இந்த உலகம் எங்களுக்குக் கொடுக்கிற ஒரு வித்தியாசமான வாய்ப்பு இது. மக்கள் அளிக்கும் புகழே நமக்கு பாராட்டு.
மீடியா நண்பர்களே – இந்தப் படத்தை ஆதரிக்கவும். இது ஒரு நல்ல கதை, ஒரு நல்ல படைப்பு. அனைவருக்கும் அது கொண்டு சேரட்டும் என வாழ்த்துகிறேன்.
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
✍️ பாடல்வரிகள் எழுதிய கு. கார்த்திக் அவர்கள் பேசியது:
அன்னை தமிழ் மற்றும் நம் மொழிக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இந்த படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கிடைத்தது. கம்பி கட்டுன கதை ஒரு குடும்பத்துக்கு ஏற்ற படம். தீபாவளி வெளியீடாகும் இப்படத்திற்கு நான்கு பாடல்களை எழுதியிருக்கிறேன். தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவிற்கு என் நன்றிகள். பத்திரிகை நண்பர்கள் இந்த படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு சேர்க்க வேண்டுகிறேன். என்னை இந்த படத்துக்காக அணுகிய சசி செல்வம் அவர்களுக்கு நன்றி!
✍️ பாடல்வரிகள் எழுதிய ஆப்பா ராஜா அவர்கள் பேசியது:
அனைவருக்கும் வணக்கம். இந்த இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி. இப்போது தமிழ் பாடல்கள் குறைந்து வருவதால் இந்த மாதிரியான படங்களுக்கு உங்கள் ஆதரவு மிகவும் தேவையாக இருக்கிறது. நன்றி!
🎨 கலை இயக்குநர் சிவகுமார் அவர்கள் பேசியது:
அனைவருக்கும் என் நன்றிகள். இந்தப் படத்திற்கு நீங்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.
🎥 கேமராமேன் MRM ஜெய் சுரேஷ் அவர்கள் பேசியது:
இங்கு வந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி. கம்பி கட்டுன கதை ஒரு சிறந்த தீபாவளி ட்ரீட். எல்லோரும் இதைப் பார்த்து ஆதரிக்க வேண்டும். தயாரிப்பாளர் ரவி சார் மற்றும் உத்திரா புரொடக்ஷன்ஸ் குழுவிற்கு நன்றி. நட்டி சார், சிங்ம் புலி சார், சாம் சார் ஆகியோர்களுடன் பணியாற்றிய அனுபவம் சிறப்பாக இருந்தது. நன்றி!
🎭 நடிகர் KPY Kothandam அவர்கள் பேசியது:
மேடையில் அமர்ந்துள்ள ஜாம்பவான்களுக்கு வணக்கம். இந்த படம் வெற்றிபெறும். ரசிகர்களுக்கு நன்றி. எல்லோரும் மொத்தமாக இதில் வேலை செய்திருக்கிறோம்.
📱நாம டப்பிங் பண்ணிக்கிட்டே இருந்தோம் – நமக்கு பேசற மொழியே தெரியாம போச்சு! ஆனா இந்த படத்தை பற்றி நாம பேச வேண்டியது தான். ஒரு நடிகனாக நான் என்ன பண்றேன்னு கேட்டா, அது உங்கள் எதிர்பார்ப்புக்கு மேல இருக்கும். இந்தப் படத்தை ஹார்ட் ஒர்க் போட்டு செஞ்சிருக்கார் நட்டி சார். நேரமும் பணமும் இழந்துதான் இந்த படத்தை மேடை ஏற்றிருக்கிறார். எல்லோரும் தியேட்டர்ல வந்து பாருங்க. நன்றி.
🎭 நடிகர் முத்துராமன் அவர்கள் பேசியது:
இங்கு வந்த அனைவருக்கும் வணக்கம். மங்காத்தா மூவிஸ் மற்றும் உத்திரா புரொடக்ஷன்ஸ் குழுவிற்கு நன்றி. கம்பி கட்டுன கதை ஒரு நல்ல காமெடி படம். பாத்து நல்லா சிரிச்சிட்டு வீடு போங்க. நன்றி!
🎬 இயக்குநர் ராஜநாதன் பெரியசாமி அவர்கள் பேசியது:
அனைவருக்கும் வணக்கம். இங்கு வந்த அனைவருக்கும் நன்றி. எலிசபெத் தலையில கம்பி இருக்கிறது – அதாவது காமெடியா வைச்சிருக்கோம். இந்த படத்தை அவ்வளவு மாஸாகவே செஞ்சிருக்கோம். இசை உரிமைகள் வாங்கிய நிறுவனத்திற்கும் நன்றி. ஹரி உத்திரா அவர்களுக்கு நன்றி. இன்னும் நிறைய பேச வேண்டியது இருக்கிறது. இப்போது சொல்ல முடியாத நிலை. நன்றி!
🎤 முதல் கதாநாயகி ஸ்ரீரஞ்சினி அவர்கள் பேசியது:
அனைவருக்கும் வணக்கம். இங்கு இருக்கிறதற்கே எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மலையாளத்தில் மூன்று படங்களில் நடித்திருக்கிறேன். தமிழில் இது எனது முதல் படம்.
எல்லாரும் எனக்கு மிகவும் நல்ல ஆதரவு தந்தார்கள். இந்த குழுவுடன் பணியாற்றியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அனைவருக்கும் நன்றி. தயவுசெய்து இந்த படத்தை திரையரங்குகளில் வந்து பார்த்து ஆதரவு அளியுங்கள். நன்றி!
🌟 இரண்டாவது ஹீரோயின் ஷாலினி அவர்கள் பேசியது:
வணக்கம் அனைவருக்கும். பத்திரிகையாளர் மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி. உங்கள் ஆதரவு மிகவும் தேவை. என் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அவர்களுக்கு நன்றி. இந்த படத்தில் நான் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இது என் கரியரில் ஒரு முக்கிய படியாக இருக்கும் என்று நம்புகிறேன். நன்றி!
இவ்வாறு, “கம்பி கட்டுன கதை” படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பலர் உரையாற்றி, படத்துக்கான ஆதரவை பகிர்ந்துகொண்டனர். படம் தீபாவளிக்கு வெளியாகிறது. அனைவரும் திரையரங்கில் சென்று படத்தை பார்த்து ஆதரியுங்கள்!
🎤 விநியோகஸ்தர், உத்தரா புரொடக்ஷன்ஸ் ஹரி உத்தரா அவர்கள் பேசியது:
‘கம்பி கட்டுன கதை’ தீபாவளிக்கு வெளியாகிறது. இந்த படத்தை எங்களுக்கு கொடுத்த மங்காத்தா மூவீஸ் அவர்களுக்கு நன்றி. இந்த படத்தை எடுத்துக் கொண்டதற்கு என்பது பெருமை.
இது ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமா இருக்கும் என்று நம்புகிறேன். நாங்கள் இதற்கு முன்பு ‘வெப்’ என்னும் படத்தை வெளியிட்டோம். அந்த மாதிரியே இந்த படத்தையும் அனைவரும் ஒட்டுமொத்தமாக எடுத்துக்கணும்.
பல தமிழ்ச் சொற்கள் (ஸ்லாங்) இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த படத்தை வெளியிடுவது, இதற்கு நிறைய முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்பதில் நாங்கள் பெருமையடைகிறோம். இதில் நகைச்சுவை மிகுந்த அளவில் இடம் பெற்றுள்ளது. ‘ஜாவா’ சுந்தர்ரேசன் சார் நடித்திருக்கிறார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி!
🎤 இரண்டாவது நாயகன் முகேஷ் ரவி அவர்கள் பேசியது:
இங்கு வந்துள்ள அனைவருக்கும் வணக்கம். ‘கம்பி கட்டுன கதை’ என் முதல் படம். இந்த படத்தின் நடிகர், தொழில்நுட்பக் குழுவுடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது.
நேரலையில் (ஸ்பாட்ல) வசனம் பேசினேன். அந்த வாய்ப்பை வழங்கிய இயக்குனர் ராஜநாதான் பெரியசாமி சார் அவர்களுக்கு நன்றி. இந்த வாய்ப்பு கொடுத்ததற்காக நன்றி. அனைவருக்கும் நன்றிகள்.
🎤 திரைக்கதை ,வசனம் எழுத்தாளரும் ஆன நடிகர் முருகானந்தம் அவர்கள் பேசியது:
அனைவருக்கும் வணக்கம். குறுகிய கால கட்டத்தில் இந்த படத்தை எடுத்தது மிகச் சிறப்பான விஷயம். ஃபாசில் அவர்களுக்கு நன்றி.
அலுவலகம் போனதுமே 11 பேர் கொண்ட குழு இருந்தாங்க, அதில கொஞ்சம் பேசினாங்க. அப்படி தானே இந்த பயணம் துவங்கியது.
‘ஹீரோ யாருனு கேட்டாங்களே, நட்டி சார் சொன்னாங்க’—அப்படியே இந்த படம் துவங்கியது. கதை ஒத்துக்கொண்டதும், வண்டியை பிடிச்சு ஊருக்கு போய் படத்தையும் எடுத்தோம். அனைவரையும் குடும்பமா கவனிச்சீங்க. நீங்க நல்லா இருக்கணும்.
சதீஷ் இசையமைப்பாளர், நட்டி சார் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. பி.ஆர்.ஓ. ஷேக் அவர்களுக்கு நன்றி. சிங்கம் புலி அண்ணா, முத்துராமலிங்கம் சார், ஷாலினி, கோதண்டம், நட்டி சார், ரவி சார், மகேஷ் சார் எல்லாருக்கும் நன்றி.
இந்த படத்துக்குப் பிறகு ‘சதுரங்க வெட்டைக்கு முன், சதுரங்க வேட்டைக்கு பின்’னு நினைக்கிறேன். நன்றி!
🎤 ‘ஜாவா’ சுந்தரேசன் அவர்கள் பேசியது:
ஊடக நண்பர்களுக்கு வணக்கம். அருமையான ‘ரோசாப்பூவை’ குடுத்து வரவேற்றது நலமாக இருக்கிறது. நல்ல படம் எடுத்திருக்காங்க. சின்னதா, பெரியதா இல்ல – நல்ல படம் எடுக்கணும், மக்களிடம் சேரணும் என்பதுதான் முக்கியம்.
இந்த மாதிரி ஒரு நல்ல வேடம் கொடுத்த தயாரிப்பாளர், இயக்குனருக்கு நன்றி. இந்த படத்தை எடுத்துப் பார்த்து மக்களை சிரிக்க வைக்கணும் என்பதே அவருடைய நோக்கம் – அது ஒரு பெரிய விஷயம்.
நட்டி சார், ஹீரோ முகேஷ், சக நடிகர்கள், இசையமைப்பாளர் சதீஷ் – எல்லாருக்கும் நன்றி. தீபாவளிக்கு ‘கம்பி கட்டுன கதை’ படத்தை திரையரங்கில் வந்து பார்த்து ஆதரவு அளியுங்கள். நன்றி!