~ இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ள இந்த மலையாள ஹாரர்–திரில்லர் படத்தில் அர்ஜுன் அசோகன், கோகுல் சுரேஷ், சைஜு குரூப், பாலு வர்கீஸ், மாளவிகா மனோஜ், ஷிவதா ஆகியோர் நடித்துள்ளனர். ZEE5-இல் வரும் செப்டம்பர் 26 முதல் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் ஸ்ட்றீமிங் செய்யப்படவுள்ளது ~
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் மலையாள ஹாரர்–காமெடித் திரைப்படமான சுமதி வளவு திரைப்படத்தை வரும் செப்டம்பர் 26 அன்று உலக டிஜிட்டல் பிரீமியராக வெளியிடுகிறது. இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன் அசோகன், கோகுல் சுரேஷ், சைஜு குரூப், பாலு வர்கீஸ், மாளவிகா மனோஜ் மற்றும் ஷிவதா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், நாடு முழுவதும் பார்வையாளர்கள் ரசிக்கும்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
இப்படம் கேரளாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற வளைவை மையமாகக் கொண்டது. சுமதி வளவு எனப்படும் அந்த வளைவில், சுமதி என்ற இளம் பெண் துயரமான முறையில் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகு, அது பீதியூட்டும் இடமாகப் பேசப்பட்டு வருகிறது. அந்த வளைவைக் கடக்கும் ஒவ்வொருவரும் விசித்திரமான அதீத அனுபவங்களில் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த வளைவில் நேரிடும் அமானுஷ்ய சம்பவங்கள் பலரின் வாழ்க்கையை மாற்றி விடும் விதத்தில், புராணமும் நிஜமும், துயரமும் பயமும், கடந்தகாலமும் நிகழ்காலமும் ஒன்றோடொன்று கலந்த கதையாக இது நகர்கிறது.
இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் கூறியதாவது.., “சுமதி வளவு கேரளா மக்களின் வாழ்க்கை கதைகளிலிருந்து வந்தாலும், இது நவீன பார்வையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பயத்தைத் தாண்டி, துயர சம்பவங்கள் நினைவில் விட்டுச்செல்லும் மனித உணர்ச்சிகளையும் இப்படம் வெளிப்படுத்துகிறது. நினைவு, புராணம் மற்றும் மர்மம் ஆகியவற்றுக்கிடையிலான முரண்பாட்டை இந்தப் படம் காட்டுகிறது. ZEE5 மூலமாக உலகெங்கும் பார்வையாளர்களிடம் இப்படம் செல்லும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.”
நடிகர் அர்ஜுன் அசோகன் கூறியதாவது.., “இந்த படம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அமானுஷ்ய சம்பவங்களையும் உணர்ச்சிகளையும் இணைத்துக் காட்டுகிறது. பீதியூட்டும் அந்த வளைவில் சிக்கிக் கொள்கிற கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. பயம், பலவீனம், தைரியம் ஆகியவற்றை ஒரு வித்தியாசமான முறையில் ஆராய முடிந்தது. சுமதி வளைவு பல மொழிகளில் ZEE5-இல் வெளிவருவது எனக்குப் பெருமை தருகிறது.”
நடிகை மாளவிகா மனோஜ் கூறியதாவது.., “சுமதி வளவு கேரளாவின் கலாச்சார வேர் கொண்டதோடு, அதில் நிறைய மர்மமும் சஸ்பென்ஸும் நிரம்பியுள்ளது. இப்படத்தில் ஒரு திறமையான நட்சத்திரக் குழுவுடன் பணிபுரிந்தது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. மர்மம், உணர்ச்சி, திகில் ஆகியவற்றை ஒருங்கே இணைக்கும் இந்தப் படம் பார்வையாளர்களை நிச்சயம் கவரும். ZEE5-இல் படம் வெளியாகும் தருணத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.”
ரசிகர்களே அற்புதமான ஹாரர் அனுபவத்தை, தவற விடாதீர்கள். சுமதி வளவு – உலக டிஜிட்டல் பிரீமியர், செப்டம்பர் 26 முதல், ZEE5-இல் மட்டும் – மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் ஸ்ட்ரீமிங்காகிறது.
Today, I began a new venture close to my heart – Kanmani Annadhana Virundhu, named after my mother.
My goal of this initiative is to make food varieties that are usually enjoyed only by the wealthy accessible to people who never come across such food varieties. Food should not be a privilege, it should be a joy that brings smiles to every heart.
I am humbled to have started this journey with the Nari Kuravargal community of children and elders. Seeing their happiness as they enjoyed the variety of foods filled my heart with gratitude. ❤️
With all your love and blessings, I hope to continue this journey of filling everyone’s hunger and make them enjoy variety of foods.
என் அம்மாவின் பெயரில் என் மனதுக்கு நெருக்கமான ‘கண்மணி அன்னதான விருந்து’ இன்று தொடங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
வசதி படைத்தவர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய உணவுகள் எளியவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. அந்த பிம்பத்தை உடைத்து அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே கண்மணி அன்னதான விருந்தின் நோக்கம். உணவு என்றும் எட்டாக்கனியாக இருக்கக்கூடாது. அது ஒவ்வொருவரின் முகத்திலும் புன்னகையை தர வேண்டும்.
இந்தப் பயணத்தை நரிக்குறவர்கள் இன பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் தொடங்கியதில் மகிழ்ச்சி. பல வகையான உணவுகளை அவர்கள் விரும்பி சுவைத்தது எனக்கு மனநிறைவாக இருந்தது.
உங்கள் அனைவரின் அன்புடனும் ஆசீர்வாதத்துடனும் அனைவரின் பசியையும் விருப்பத்தையும் பூர்த்தி செய்யும் இந்தப் பயணத்தை மனநிறவுடன் தொடர்வேன் என நம்புகிறேன்.
Music in cinema often sets the emotional tone, and Dude, the upcoming film from Mythri Movie Makers, proves this yet again. After the high-energy hit Oorum Blood, the second single Nallaru Po has emerged as a soulful, emotional anthem that’s striking a powerful chord—especially with women listeners.
Composed by Sai Abhyankar and sung by Tippu and Mohit Chauhan, the track is a heartfelt blend of melody and meaning. Lyricist Vivek weaves words that speak of longing, love, and letting go, anchored in the poignant sentiment of “Engirunthaalum Vaazhga”, a blessing for someone to thrive, no matter where they are.
What truly sets Nallaru Po apart is its emotional maturity. Unlike songs that glorify bitterness after a breakup, this one chooses compassion. The hero doesn’t shame or blame the girl who leaves him, instead, he lets go with grace. This refreshing portrayal has resonated strongly with female audiences, many praising it for its non-toxic, respectful message.
The song’s launch among college students received an overwhelming response, solidifying its place as a chart-topper with real emotional depth.
Dude is written and directed by Keerthiswaran and produced by Mythri Movie Makers’ Naveen Yerneni and Y Ravi Shankar. Alongside Pradeep Ranganathan and Mamitha Baiju, the ensemble cast includes R. Sarath Kumar, Hridhu Haroon, Rohini, Aishwarya Sharma, and Dravid Selvam, among others.
திரைப்படங்களின் இசையும் பாடல்களும் பலருக்கும் உணர்வுப்பூர்வமாக இரண்டற கலந்திருப்பது. இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ‘Dude’ படம் மீண்டும் நிரூபித்துள்ளது. ஹை எனர்ஜி பாடலாக வெளியான ‘ஊரும் பிளட்டும்’ பாடல் ஹிட்டுக்கு பிறகு தற்போது இரண்டாவது பாடலான ‘நல்லாரு போ’ ஆன்மாவை தொடும் உணர்வுப்பூர்வமான பாடலாக வெளியாகியுள்ளது. குறிப்பாக பெண் இசை ரசிகர்கள் இந்தப் பாடலை கொண்டாடி வருகின்றனர்.
சாய் அபயங்கர் இசையமைப்பில், ஏக்கம், காதல், பிரிவு ஆகியவற்றின் கலவையாக விவேக் பாடல் வரிகள் எழுதியிருக்க, திப்பு மற்றும் மோஹித் செளஹான் இந்த அர்த்தமுள்ள மெலோடி பாடலை பாடியுள்ளனர். நமக்கு பிடித்தவர்கள் எந்தக் காரணத்திற்காக நம்மை விட்டு பிரிந்தாலும் ‘எங்கிருந்தாலும் வாழ்க…’ என வாழ்த்துவதை கருவாகக் கொண்டு இந்தப் பாடல் உருவாகியுள்ளது.
பொதுவாக மற்ற பிரேக்கப் பாடல்களில் கசப்பும் வேதனையும் இருக்கும். ஆனால், இந்த பிரிவுணர்ச்சியை முதிர்ச்சியாக கையாண்டிருப்பதன் மூலம் மற்ற பிரேக்கப் பாடல்களில் இருந்து ‘நல்லாரு போ’ பாடல் தனித்து தெரிகிறது. காதலித்த பெண் தன்னை விட்டு பிரிந்ததும் அவளை குறை கூறாமல், மரியாதை குறைவாக நடத்தாமல் அவளை அப்படியே பிரிய அனுமதிக்கிறான் ஹீரோ. இந்த மரியாதைக்குரிய, நான் – டாக்ஸிக் பிரிவை பெண் ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
உண்மையான உணர்வை மதிக்கும் இந்தப் பாடல் கல்லூரி மாணவர்கள் மத்தியில் வெளியிடப்பட்டு மிகுந்த வரவேற்பு பெற்றது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் பேனரில் நவீன் யெர்னேனி மற்றும் Y. ரவி ஷங்கர் தயாரித்திருக்கும் ‘Dude’ படத்தை கீர்த்தீஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்க அவர்களுடன் ஆர். சரத்குமார், ஹிருது ஹாரூன், ரோகிணி, ஐஸ்வர்யா சர்மா, டிராவிட் செல்வம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சட்டப் பள்ளியின் பத்தாவது ஆண்டு நிறைவு விழா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று 20/09/2025 நடைபெற்றது. தலைமை விருந்தினராக மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதி. திரு என். கோட்டீஷ்வர்சிங் , கெளரவ விருந்தினராக மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதிபதி. திரு.ஆர்.மகாதேவன் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு.மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு. எம். நிர்மல் குமார், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. ஜி.கே. இளந்திரையன், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி. திரு.டி.பரத சக்கரவர்த்தி, மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திருமதி.ஆர்.கலைமதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இவ்விழாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் தலைவர் திரு. எம் .எஸ். அமல்ராஜ் அவர்களும் முன்னாள் இந்திய சட்ட ஆணைய உறுப்பினரும் பேராசிரியருமான முனைவர் எஸ். சிவக்குமார் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் . வேல்ஸ் பல்கலைக் கழகத்தின் துணைத் தலைவர் . முனைவர். ப்ரீத்தா கணேஷ் அவர்களை மாண்புமிகு உச்ச நீதிமன்ற , உயர் நீதிமன்ற நீதிபதிகளையும் மதிப்பிற்குரிய சிறப்பு மற்றும் கெளரவ விருந்தினர்களையும் மற்றும் விழா ஏற்பாட்டாளர்களையும் வாழ்த்தி வரவேற்புரை அளித்தார். அதனை தொடர்ந்து வேல்ஸ் சட்டப்பள்ளியின் முதல்வர் முனைவர் பேராசிரியர் எஸ். அம்பிகா குமாரி அவர்கள் வேல்ஸ் சட்டப்பள்ளியின் பத்தாண்டு கால சாதனைகளையும், மாணவர்களின் பன்முகத்திறன்களையும், வேல்ஸ் சட்டப்பள்ளியின் சட்ட ஆராயச்சிகளையும் இன்னும் பிற சாதனைகளையும் குறித்த அறிக்கையை வாசித்தார். பின்னர் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர்.ஐசரி.கே.கணேஷ் அவர்கள் தலைமை உரையை அளித்தார். அதில் அவர் பத்தாண்டு சட்டப்பள்ளியின் நிறைவை குறித்து பெருமிதம் தெரிவித்ததோடு அவர் கடந்து வந்த பாதை மற்றும் அனுபவங்களை மாணவர்களுக்கு கூறி அவர்களை ஊக்குவித்ததோடு சட்டப்பள்ளியின் முதல்வர் மற்றும் பேராசியர்களுக்கு வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தார். கௌர விருந்தினரான மாண்பு மிகு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி. திரு.மணிந்திர மோகன் ஶ்ரீவஸ்தவா அவர்கள் அளித்த உரையில் வேல்ஸ் சட்டப் பள்ளி முதல்வரின் மாணவர்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகளாகவும் திறமையான வழக்கறிஞர்களாகவும் இருப்பதை குறித்து பெருமிதம் தெரிவித்ததோடு சட்டத்தின் ஆட்சி (Rule of Law) குறித்து பேசி சட்டக்கல்வியின் முக்கியத்துவத்தை குறித்து விவரித்துப் பேசினார். மேலும் சட்டப் பேராசியர்கள் வழக்காடும் பணிகளை விடுத்து கற்றுக் கொடுக்கும் பணியை செய்வதால் அவர்கள் சமூகத்திற்கு சேவை செய்வதாக அவர்களைப் பாராட்டியதோடு வழக்கறிஞர் தொழில் பணம் ஈட்டுவதற்கான தொழில் அல்ல. அது சமூகத்திற்கு சேவையாற்றும் ஒரு தொழில் என்பதை தெளிவாக வலியுறுத்தினார் மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதிபதி . ஆர். மகாதேவன் அவர்கள் அளித்த உரையில் வேல்ஸ் பல்கலைக் கழக சட்டப் பள்ளியின் ஐசரி வேலன் மாதிரி நீதிமன்ற போட்டிகளினால் பல்வேறு உயர் நீதிமன்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஈர்ப்பை பெற்றதால் வேல்ஸ் சட்டப் பள்ளியின் சாதனைகள் பத்தாண்டுகளில் இத்துனை வளர்ச்சி பெற்றது வியப்பிற்குறியது என்றும் உலகத்தின் ஆகச்சிறந்த கல்விதுறை சட்டத்துறை எனவே அத்துறையை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். துறை சார்ந்த நாட்டம் துறை சார்பந்த அறிவு உங்களை வாழ்வின் அடுத்த கணத்திற்கு அழைத்துச் செல்லும் என்று கூறி வாழ்த்துக் கூறினார். இவ்விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதி. திரு என். கோட்டீஷ்வர்சிங் அளித்த விழாபேருரையில் வேல்ஸ் பல்கலைக்கழக சாதனைகளை வாழ்த்தி, மாணவர்ளுக்கு திறம்பட சட்டக் கல்வியை வழங்கியதற்காக நிறுவனத்தை பாராட்டினார். சட்டம் என்பது வெறுமனே பட்டம் பெறுவது மட்டும் அல்ல சட்டத்தின் ஆளுமை பற்றிய ஆழ்ந்த அறிவை பெறுவதே சட்டக்கல்வியின் உயரிய நோக்கம் என்று வலியுறுத்தினார். விடாமுயற்சி, கடினஉழைப்பு, அர்ப்பணிப்பு, ஒழுக்கம் , நிலைப்புத் தன்மை இக்கால வழக்கறிஞர்களுக்குத் தேவையான முக்கிய மதிப்பீடுகள் என்று தெரிவித்தார். வழக்கறிஞர்களுக்காக காத்திருக்கும் புதிய வேலை வாய்ப்புகளைக் குறித்து எடுத்துரைத்தார். மேலும் மாணவர்கள் நவீன செயற்கை நுண்ணறிவை திறம்பட பயன்படுத்த தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். இந்திய அரசியல் சாசனம் அனைத்துப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான கருவூலமாக இருக்கிறது என்றும் நீதிபரிபாலனை சமத்துவம், சதோதரத்துவம், நீதிநெறி என்பதே பல வேறுபாடுகளை கடந்து அனைவரையும் ஒன்றினைக்கும் சக்தியாகத் திகழ்கிறது என்று கூறினார் . அதேபோல கீழடி நாகரீகம் அதன் தொன்மை ஆகியவற்றையும் தமிழ் மன்னர்களான சோழர்களின் கடற்படை மற்றும் கிழக்காசிய நாடுகளை கைப்பற்றிய வீரம் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு காற்றின் வேகத்திற்கு ஏற்ப கப்பல்களை இயக்கி இயற்கையோடு இயைந்த அறிவு ஆகியவற்றை எண்ணி பெருமிதம் கொள்வதாக தெரிவித்தார். இவ்விழாவில் திருமதி. புஷ்பா ஐசரி வேலன் தமிழ் வழக்குவாதுரைப் போட்டியில் வெற்றிப் பெற்ற திருப்பூர் கே.எம்.எல் சட்டப்பள்ளி மாணவர்களுக்கும் இரண்டாம் இடத்தை வென்ற சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரி மாணவர்களை பாராட்டி கோப்பைகள், பதக்கங்கள்,பாராட்டுச் சான்றிதழ்கள் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த வாதுரைக்கான பரிசை எஸ்.ஆர்.எம் சட்டப்பள்ளியும். சிறந்த பேச்சாளருக்கான விருதை காரைக்குடி அரசு சட்டக்கல்லூரியை சேர்ந்த மாணவர் மொஹமத் ரிஜ்வானும் பெற்றனர் . முன்னாள் மாணவர்களை கௌரவிக்கும் வகையில் பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டன. விழாவின் நிறைவாக வேல்ஸ் பல்கலைக்கழத்தின் துணை வேந்தர் முனைவர் எம் .பாஸ்கரன் அவர்கள் நன்றி உரை அளித்ததை தொடர்ந்து விழா இனிதே நிறைவுற்றது.அதனை தொடர்ந்து மாணவர்களுக்கான மதிய உணவு பரிமாறப்பட்டது.
வேல்ஸ் பல்கலைக்கழகம் சென்னை வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், டெக்னாலஜி அண்ட் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் (VISTAS), 2008 ஆம் ஆண்டு இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் (MHRD) பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றது. VAELS அறக்கட்டளையின் கீழ் இயங்கும் இப் பல்கலைக்கழகம், 100க்கும் மேற்பட்ட இளநிலைபடிப்பு, முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளை வழங்குகிறது. மருத்துவம், பொறியியல், நர்சிங், மருந்தியல், சட்டம், வர்த்தகம், ஊடகம், கல்வி, கடல்சார் கல்வி, கணினி அறிவியல் போன்ற துறைகளில் பட்டப்படிப்புகளை வழங்குகிறது. UGC, AICTE, NMC, INC, PCI, BCI, DGS, NCTE போன்ற அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட இப் பல்கலைக்கழகம் தற்போது 18,000க்கும் மேற்பட்ட மாணவர்களையும் 1,100 பேராசிரியர்களையும் கொண்டுள்ளது. NAAC A++ தரச் சான்றிதழ் பெற்ற இப் பல்கலைக்கழகம், 11 NBA அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவுகளை வழங்கி, UGC 12(B) அந்தஸ்தைப் பெற்றுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான NIRF தரவரிசையில் 101–150 இடம் பிடித்ததுடன், மருந்தியல் துறை 61வது இடத்தை பெற்றுள்ளது.
வேல்ஸ் சட்டப்பள்ளி – குறிப்பு 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வேல்ஸ் சட்டப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் இளங்கலை பட்டம் முடித்த மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த 5 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சட்டப் படிப்புகளை வழங்கி வருகிறது. அரசியலமைப்பு, கார்ப்பரேட் சட்டம், தொழிலாளர் சட்டம், குற்றவியல் சட்டம், அறிவுசார் சொத்துரிமை, சைபர் சட்டம், வரிவிதிப்புச் சட்டம் ஆகிய ஏழு பிரிவுகளில் LL.B, LL.M பாடப்பிரிவுகளும், சட்டத்தில் Ph.D. பட்டப் படிப்பும் நடத்தப்படுகிறது. இந்த பத்து ஆண்டுகளில், சுமார் 2500 மாணவர்கள் மற்றும் 85 பேராசிரியர்கள் இணைந்து கல்வி கற்கும் முன்னணி சட்டக் கல்வி மையமாக வளர்ந்துள்ளது. மாதிரி நீதிமன்றங்கள், சட்ட விழிப்புணர்வு முகாம்கள், இலவச சட்ட உதவி சேவைகள், தேசிய-சர்வதேச கருத்தரங்குகள் மற்றும் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். சமூக பங்களிப்பு, உலகளாவிய பார்வை, புதுமையான பாடத்திட்டம் ஆகியவற்றின் மூலம் மாணவர்கள் திறமையான வழக்கறிஞர்கள் மற்றும் சமூகப் பொறுப்புள்ள குடிமக்களாக உருவாகும் வகையில் சட்டப்பள்ளி முன்னோடி பங்களிப்பை வழங்கி வருகிறது. Photo Caption வேல்ஸ் சட்டப் பள்ளியின் 10ம் ஆண்டு நிறைவு விழா, பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. இதில், திருமதி புஷ்பா ஐசரிவேலன் தமிழ் வழக்கு வாதுரை போட்டிகளுக்கான பரிசுகள் வழங்கப்பட்டது. இடமிருந்து வலம்: மாண்பு மிகு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி, வேல்ஸ் பல்கலைகக்கழக இணை வேந்தர் ஜோதிமுருகன், உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார், வேல்ஸ் பல்கலை வேந்தர் ஐசரி கே.கணேஷ், மாண்பு மிகு உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன், மாண்பு மிகு உச்ச நீதிமன்ற நீதிபதி கோட்டீஸ்வர் சிங், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணீந்தர மோகன் ஸ்ரீவட்சவா, உயர் நீதிமன்ற நீதிபதி இளஞ்திரையன், உயர் நீதிமன்ற நீதிபதி கலைமதி, வேல்ஸ் குழுமங்களின் துணை தலைவர் பிரீதா கணேஷ் உள்ளிட்டோர் உள்ளனர்.
The School of Law, VELS University, Chennai, celebrated its 10th anniversary on 20th September 2025 with a pomp and grandeur today at the university campus.
The celebration was graced by the Hon’ble Justice N. Kotiswar Singh of the Supreme Court of India as the Chief Guest. The event was further honored by the presence of Hon’ble Mr. Justice R. Mahadevan, also of the Supreme Court, as Guest of Honour, and Hon’ble Mr. Justice Manindra Mohan Srivastava, Chief Justice of the Madras High Court, as Distinguished Guest.
Several esteemed judges of the Madras High Court — Hon’ble Mr. Justice M. Nirmal Kumar, Hon’ble Mr. Justice G.K. Ilanthiraiyan, Hon’ble Mr. Justice D. Bharatha Chakravarthy, and Hon’ble Mrs. Justice R. Kalaimathi — also attended and graced the occasion as Special Guests,
The event was further enriched by the presence of Mr. M.S. Amalraj, Chairman of the Bar Council of Tamil Nadu and Puducherry, and Dr. S. Sivakumar, former Member of the Law Commission of India.
The celebration commenced with a welcome address by Dr. Preetha Ganesh, Vice President, Vels Group of Institution. Dr. Ishari K. Ganesh, Chancellor of VELS University, felicitated the Hon’ble Judges, dignitaries, and guests. This was followed by a comprehensive report from Dr. Prof. S. Ambika Kumari, Dean of the School of Law, highlighting the school’s decade-long achievements, the multifaceted talents of its students, notable legal research contributions, and various other milestones.
Delivering the Presidential Address, Dr. Ishari K. Ganesh, Founder and Chancellor of VELS University, expressed his pride in the remarkable journey of the School of Law. He offered motivational insights on overcoming challenges and transforming them into triumphs. The Chancellor encouraged students and congratulated the Dean and faculty for their unwavering commitment and accomplishments.
Mr. S. Prabhakaran, Vice Chairman of the Bar Council of India, lauded the rapid growth and achievements of the School of Law and commended the Chancellor’s vision. He noted that the school, which began with just 90 students, now has over 2,000 students registered as advocates with the Bar Council—a matter of pride and significance.
In her address, Hon’ble Mrs. Justice R. Kalaimathi praised the school’s accomplishments and extended her heartfelt wishes. Hon’ble Justice D. Bharatha Chakravarthy congratulated the Chancellor and faculty, emphasizing the increasing relevance of legal education in modern society—particularly the importance of mediation and arbitration in contemporary legal practice.
Hon’ble Mr. Justice M. Nirmal Kumar commended the School of Law and highlighted the nobility of legal education and the qualities expected of future advocates. His insights deeply resonated with the student audience.
Hon’ble Chief Justice Manindra Mohan Srivastava, addressing the gathering as Guest of Honour, expressed pride in the School’s growth and noted that some of its alumni had risen to the bench as High Court Judges and established themselves as able advocates. He emphasized the vital role of the Rule of Law, the transformative power of legal education, and praised the dedication of law professors, who he described as performing an act of social service. The Chief Justice reminded students that the legal profession is not merely a means of livelihood but, a service to society.
About VISTAS
VELS Institute of Science, Technology and Advanced Studies (VISTAS) was conferred university status in 2008 by the Ministry of Human Resource Development (MHRD), Government of India. Operating under the VELS Foundation, the university offers more than 100 undergraduate, postgraduate, and doctoral programs.
It provides degree programs in various fields including Medicine, Engineering, Nursing, Pharmacy, Law, Commerce, Media, Education, Maritime Studies, and Computer Science. Recognized by bodies such as UGC, AICTE, NMC, INC, PCI, BCI, DGS, and NCTE, the university currently has over 18,000 students and 1,100 faculty members. VISTAS holds a NAAC A++ accreditation, offers 11 NBA-accredited programs, and has been granted UGC 12(B) status. In the 2024 NIRF rankings, the university was placed in the 101–150 band, with its Pharmacy department ranked 61st.
VELS School of Law
VELS School of Law was established in 2015. It offers five-year integrated law programs for students who have completed higher secondary education, including: B.A., LL.B. (Hons.) – Arts and Law, B.Com., LL.B. (Hons.) – Commerce and Law and BBA, LL.B. (Hons.) – Business Administration and Law. It also offers a three-year LL.B. program for graduates, and LL.M. programs in seven specializations: Constitutional and Administrative Law, Corporate and Business Law, Labour and Administrative Law, Criminal Law and Criminal Justice Administration, Intellectual Property Rights Law, Cyber Law and Taxation Law.
These programs are designed to help students choose the right specialization based on the eligibility criteria set by the Bar Council of India and the UGC. Additionally, the school offers a Ph.D. program in Law.
Committed to excellence, the school follows the Bar Council of India’s guidelines, combining practical training modules and a well-structured curriculum to prepare students to become skilled advocates. Moot courts are regularly conducted to enhance hands-on learning. The institution not only provides high-quality, innovative legal education but also contributes strongly to social justice, interdisciplinary research, and global perspectives.
Various assessment activities are designed to help students develop problem-solving, communication, and advocacy skills. Internationally focused elective courses are also offered, preparing students for careers in the global legal services sector. The diverse student body further enriches the learning environment.
Over the past decade, VELS School of Law has grown steadily and now has more than 2,500 students. Prof. Dr. S. Ambika Kumari serves as the Dean, supported by five Heads of Department and approximately 85 faculty members.
The law school actively engages in community service by conducting free Legal Aid camps for tribal and underprivileged communities. Faculty and students travel to various parts of the state to organize legal seminars, awareness rallies, and actively participate in national and international conferences related to law.
Courtroom training is systematically provided every semester, and national as well as international campus recruitment drives are conducted for the benefit of students. Eminent lawyers from the Supreme Court and High Courts have participated in major events and moot court competitions, further enhancing the prestige of VELS School of Law.
Actor Raghava Lawrence is encouraging differently-abled individuals to pursue Mallarkalai, the traditional martial art of the Tamil people.
Known for his compassion and consistent support towards underprivileged and differently-abled communities, Raghava Lawrence continues his humanitarian efforts. In his latest initiative, he has been actively promoting the participation of differently-abled individuals in Mallarkalai, a proud and ancient martial art form of Tamil heritage.
Sharing a video on his social media that features differently-abled individuals excelling in Mallarkalai, Lawrence remarked:
“Even for people with both hands and legs in full function, balancing and climbing the Mallarkambam pole is difficult. So imagine how challenging it is for differently-abled individuals to do the same. But when they take on that challenge and succeed, it becomes their livelihood — something that helps them support their families.”
He further appealed to the public:
“To those watching this video — please consider giving these talented individuals an opportunity to perform at your family functions, festivals, and other events. The support you extend could truly change their lives.”
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர், சமூக செயற்பாட்டாளரான மாஸ்டர் ராகவா லாரன்ஸ், சமீபமாக பல சமூகப் பணிகளை, உதவிகளை செய்து வருகிறார். தமிழர் பாரம்பரியமான மல்லர் கலையில் கலக்கும் கை கொடுக்கும் கை மாற்றுத்திறனாளி குழுவினரை ஊக்குவித்து வருகிறார்.
மாஸ்டர் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து பல உதவிகள் செய்து வருவது அனைவரும் அறிந்ததே! அவர் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக கை கொடுக்கும் கை எனும் ஆதரவு அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார். இந்த அமைப்பில் வாழும் மாற்றுத்திறனாளி குழுவினர் நடனம் முதலான் பலவிதமான திறமைகளில் பல துறைகளில் அசத்தி வருகின்றனர்.
தமிழர்களின் பாரம்பரிய கலையான மல்லர் கம்பம் சாகச கலை நிகழ்விலும் அசத்தி வருகின்றனர். இதுவரையிலும் உடல் வலு கொண்டவர்கள் மட்டுமே பங்கேற்கும் கலையாக இருந்த இந்த கலையில், தற்போது ராகவா லாரன்ஸ் “கை கொடுக்கும் கை” மாற்றுத்திறனாளிகள் குழு அதனை முறையாக கற்றுக்கொண்டு அசத்தி வருகின்றனர். இவர்களை ஊக்குவித்து வரும் ராகவா லாரன்ஸ், கலை நிகழ்ச்சிகளில் இவர்களுக்கு வாய்ப்பளிக்குமாறு வேண்டுகோள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து வெளியான வீடியோ பதிவில்…,
மாஸ்டர் ராகவா லாரன்ஸ் “கை கொடுக்கும் கை” மாற்றுத்திறனாளிகள் குழுவினர் மல்லர் கம்பம் கலையில் அசத்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மாஸ்டர் ராகவா லாரன்ஸ் நம் பாரம்பரிய மல்லர் கம்பம் கலையை முன்னெடுக்கும் இந்த மாற்றிதிறனாளி குழுவினரை ஆதரியுங்கள், உங்கள் வீட்டு நிகழ்ச்சிகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் இவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, தன்னலமற்ற வகையில் பல உதவிகளை செய்து வரும் மாஸ்டர் ராகவா லாரன்ஸை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
ஹொம்பாலே பிலிம்ஸ் சார்பில் மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் “காந்தாரா சேப்டர் 1” படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த ஆவலுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், பிரபல தமிழ் நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தின் தமிழ் டிரெய்லரை 22 செப்டம்பர் 2025 மதியம் 12:45 மணிக்கு வெளியிடுகிறார்.
2022-ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற காந்தாரா படத்தின் முன்கதையாக உருவாகும் இந்தப் படத்தை, ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கியுள்ளார். விஜய் கிரகந்தூர் தயாரிப்பில் உருவாகும் இந்த படம், புராணங்களால் நிரம்பிய கதைக்களத்தில், கண்கவர் காட்சியமைப்புகளுடன், பார்வையாளர்களை தெய்வீகமும் சக்தியும் நிறைந்த பண்டைய உலகத்துக்குக் கொண்டு செல்லும் படைப்பாக உருவாகியுள்ளது.
காந்தாரா சேப்டர் 1 உலகளாவிய அளவில் 2 அக்டோபர் 2025 அன்று, கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியாகிறது.
தொழில் நுட்ப குழுவில்
இயக்கம் திரைக்கதை – ரிஷப் ஷெட்டி தயாரிப்பாளர் – விஜய் கிரகந்தூர் (ஹொம்பாலே பிலிம்ஸ்) ஒளிப்பதிவாளர் – அரவிந்த் S காஷ்யப் இசையமைப்பாளர் – B. அஜனீஷ் லோக்நாத் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதால், தமிழ் ரசிகர்களுக்கு ஒரு பிரமாண்டமான டிரைலர் வெளியீட்டை எதிர்பார்க்கலாம். கன்னட திரையுலகை உலக அரங்கில் கொண்டு செல்வதில் ஹொம்பாலே பிலிம்ஸ் எடுத்து வைக்கும் மற்றொரு முக்கியமான அடையாளமாக இது திகழ்கிறது.
இயற்கையின் கோபமும், அடக்க முடியாத ஆற்றலும் இணையும் இந்த மாபெரும் படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியீட்டை 22 செப்டம்பர் அன்று காணத்தவறாதீர்கள்!
Sivakarthikeyan to Launch the Tamil Trailer of Hombale Films’ Kantara Chapter 1
The anticipation around Hombale Films’ magnum opus Kantara Chapter 1 continues to soar
Adding to the excitement, celebrated Tamil star Sivakarthikeyan will unveil the Tamil trailer of the film on 22 September 2025 at 12:45 PM.
Written and directed by Rishab Shetty and produced by Vijay Kiragandur, Kantara Chapter 1 is the much-awaited prequel to the 2022 blockbuster Kantara. With its rich mythological canvas and breathtaking visuals, the film promises to transport audiences into an ancient world of divinity and power.
Kanatara Chapter 1 releases worldwide on 2 October 2025 in Kannada, Tamil, Telugu,Malayalam, Hindi, and English.
The film’s core creative team includes:
Director & Writer – Rishab Shetty Producer – Vijay Kiragandur (Hombale Films) Director of Photography – Arvind S. Kashyap Music Director – B. Ajaneesh Loknath With Sivakarthikeyan’s association, the Tamil audience can look forward to a spectacular launch,marking yet another milestone in Hombale Films’ journey to take Kannada cinema to global heights.
Worldwide Release: 2 October 2025 Stay tuned as nature’s fury meets unstoppable energy with the Tamil trailer reveal on 22 September.